Monday, March 27, 2017

காணாமல் போனவர்கள் எல்லோருமே இறந்துவிட்டதாக என்னால் கூற முடியாது


எனக்கு யுத்த குற்றம் தொடர்பாக நம்பிக்கை இல்லை. யுத்த குற்றம் நடந்திருக்காது என்று உறுதியாக கூற மாட்டேன். அது ஒரு அரசியல்நிலைப்பாடு மட்டுமே என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச யுத்த குற்றம் என்ற கொள்கையில் இருந்திருந்தால் கிராமத்தில் இன்று உள்ளவர்கள்மீது வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு புனருத்தாபனம் செய்திருக்க முடியாது. அவர்களை கைது செய்திருக்க வேண்டும். அப்படியென்றால் யாழ்ப்பாணத்திலுள்ள அரைவாசிப்பேர் சிறைச்சாலைகளில் தான் இன்று  இருந்திருப்பார்கள்.இளைஞர்களும் சிறையில்தான் இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவரது இந்த செவ்வி இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

Monday, March 13, 2017

அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு தோட்டத்தின் அவலநிலை


எயாபார்க் தோட்டம்


கிடைப்பதோ நாள் கூலி அதிலும் கிழமைக்கு இரண்டு மூன்று நாள் தான் வேலை.
மாச சம்பளம் 3000 ரூபாவை தாண்டாது. இந்த மூவாயிரம் ரூபாவிலதான் இரண்டு
பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும். சாப்பிடணும், மருந்து
எடுத்தக்கொள்ளவேண்டும், டவுனுக்கு போய்வர ஆட்டோவுக்கு கொடுக்கவேண்டும்,
இந்த ரோட்ல பஸ் வாரதே பெரிய விசயம் என்பதால் ஆட்டோவுக்கு அழுக வேண்டி
இருக்கு என தோட்டத்தொழிலாளி ஒருவர் தனது பத்து வருட கண்ணீர் கதையை
கூறுகின்றார்.

Monday, March 6, 2017

இலங்கையின் முதுகெலும்பு நடுவீதியில்

நான்கு நாள் போராட்டமும் பின்னணியும் 


திகாம்பரம் வந்தாரு தொண்டமான் வந்தாரு வேலுக்குமாறும் வந்தாரு எங்கள் பிரச்சினையை பற்றி கேட்க அல்ல.இவங்க எல்லாம்  வோட்டு கேட்டு மட்டும் தான் வந்தாங்க. நாங்க பாத்து வருசமா படுற பாடு இவங்களுக்கு தெரியுமா? எங்க குடும்ப கஷ்டம் பற்றி தெரிஞ்சுக்க கூட அவங்க விரும்பவில்லை. என எயாபார்க் தோட்ட தொழிலாளி ஒருவர் மிகவும் கவலையாக கூறி முடிக்கும் முதலே அவரது மனைவி நான் இனி வேலைக்கு போக மாட்டேன் என்கிறார். ஏன் என்ற பதிலுக்கு முன்னமே அந்த அம்மா ஒரு மாசத்துக்கு ஒரு லீட்டர் ரத்தத்தை இந்த அட்டை கடிச்சி உரிஞ்சிருக்கும். இனி அட்டைக்கு உறிஞ்சக்கூட என் உடம்பில் ரத்தமில்லை.இதெல்லாம் யாருக்கு விளங்கப்போகுது என்று இன்னும் ஏதேதோ முணுமுணுத்தார் என் காதுக்கு விளங்கவில்லை.

Monday, February 27, 2017

விக்னேஸ்வரன் வாசுதேவாவின் கூட்டத்துக்கு ஆயுதங்களை வழங்குகிறார்


வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவ்ரது மைத்துனர் வாசுதேவவின் இனவாத கூட்டத்துக்கு ஆயுதங்களை வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  எனினும் அவர் வடக்கிலிருந்து வெளிப்படுத்தும் கருத்துக்களால் தாம் மனவேதனையுடன் கட்டிப்போடவேண்டும் என்ற கதையை கூறியதாகவும் அதனால் பல்வேறுபட்ட  ரீதியில் விமர்சனங்கள் வந்தன. சிலர் அப்படி சொல்லாமல் இருந்திருக்கலாம் என கூறினார்கள்.இருப்பினும்  தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்காக தான் முன்னிட்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். 

அவர் வழங்கிய செவ்வியின் தொகுப்பு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Sunday, February 26, 2017

கூட்டு ஒப்பந்த வழக்கு ஒத்திவைப்பும், இதொகாவின் மீள்பரிசீலனையும்


கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி தோட்டக் கம்பனிகள் சார்பில் இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தோட்ட தொழிலாளர்களின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு நிலையம் என்பனவும் கைச்சாத்திட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள கூட்டு ஒப்பந்தத்தை தொழில் ஆணையாளர் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்தமை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம்  தொடர்பான கூட்டு ஒப்பந்த தொழிற்சட்டங்களுக்கு முரணாகவும், தொழிலாளர்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளை பறிப்பதாகவும்இ இயற்கை நீதிக்கு எதிராகவும், 2003ஆம் ஆண்டு அடிப்படை கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும் இருப்பதனால் அதனை இரத்து செய்யும்படி பதிவு செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில்தான் நடக்கும்

அமைச்சர் எஸ்பி திஸாநாயக்க 

கே. அரசாங்கத்தை முறையாக கொண்டுநடத்துவதை விட தற்போது உங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரச்சினைகளை தீர்க்கவேண்டி இருக்கிறது தானே?
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சிக்கு ஒன்றும் நடக்கவில்லை. சுகாவுக்குள் இவ்வாறான உள்ளக பிரச்சினை ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் கிராமத்தலைவன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு இருக்கிறது. அதனால் சில அரசியல்வாதிகள் பயந்துள்ளனர். ஆனால் இந்த நடைமுறையானது தற்பொழுது குறைந்துகொண்டுவருவதாய் நான் அவதானிக்கிறேன். இதுபோன்றே சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்த்திலும் நடந்தது. மக்கள் சிறிமாவோவுக்கு ஆதரவளித்தனர்.அவரை சுற்றி பலர் இருந்தனர்.


Tuesday, February 7, 2017

மனிதவள நிறுவனங்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை

42 நாட்களாக தொடரும் சத்தியாகிரக ஆர்ப்பாட்டத்தின் பின்னணி

கிட்டத்தட்ட ஒன்றறை மாதங்கள் வீதியில் இறங்கி போராடும் அந்த மக்களை யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இன்றுடன் 42 நாட்களாக வீதியில் கிடைக்கும் மனிதர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது அரசாங்கம் மீதான வெறுப்பை அதிகரிக்கவைக்கிறது என்கின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். இலங்கை தகவல் தொடர்பாடலில் தவிர்க்கமுடியாத ஒரு நிறுவனத்தில் முழுநேர வேலையாட்கள் 2100 பேரை நிரந்தரமாக்கும் படி மட்டுமே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...