Monday, March 6, 2017

இலங்கையின் முதுகெலும்பு நடுவீதியில்

நான்கு நாள் போராட்டமும் பின்னணியும் 


திகாம்பரம் வந்தாரு தொண்டமான் வந்தாரு வேலுக்குமாறும் வந்தாரு எங்கள் பிரச்சினையை பற்றி கேட்க அல்ல.இவங்க எல்லாம்  வோட்டு கேட்டு மட்டும் தான் வந்தாங்க. நாங்க பாத்து வருசமா படுற பாடு இவங்களுக்கு தெரியுமா? எங்க குடும்ப கஷ்டம் பற்றி தெரிஞ்சுக்க கூட அவங்க விரும்பவில்லை. என எயாபார்க் தோட்ட தொழிலாளி ஒருவர் மிகவும் கவலையாக கூறி முடிக்கும் முதலே அவரது மனைவி நான் இனி வேலைக்கு போக மாட்டேன் என்கிறார். ஏன் என்ற பதிலுக்கு முன்னமே அந்த அம்மா ஒரு மாசத்துக்கு ஒரு லீட்டர் ரத்தத்தை இந்த அட்டை கடிச்சி உரிஞ்சிருக்கும். இனி அட்டைக்கு உறிஞ்சக்கூட என் உடம்பில் ரத்தமில்லை.இதெல்லாம் யாருக்கு விளங்கப்போகுது என்று இன்னும் ஏதேதோ முணுமுணுத்தார் என் காதுக்கு விளங்கவில்லை.

இலங்கையின் முதுகெலும்பு என்றெல்லாம் மலையக மக்களில் வாழ்க்கையை வார்த்திகளால் புகழ்ந்து தள்ளினாலும் அவர்களது நிலமையையே உண்மையில் எந்த ஒரு தரப்பும் அறிவதில்லை தான் இது காலங்காமாக கூறப்பட்டு வருகின்ற உண்மை. வழமையாக மலையக தோட்ட தொழிலாளர்கள்  பற்றி கூட்டு ஒப்பந்தம்  என்கிற அரசியல் லாப பேச்சுவார்த்தையில் இந்த உலக மக்கள் அறிவார்கள். காரணம் கேட்பது நடக்காது வீதியில் போராட்டம் நடக்கும் ஊடகங்களில்  அது பிரசுரமாகும் அப்போது உலகமறியும். அடடா இந்த மக்கள் இவ்வளவு பாடுபடுகின்றார்கள் அனால் இவர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுகின்றதே என வாய் பிறப்பார்கள். அத்தோடு மறந்துவிடுவார்கள் பின்னர் மீரியபெத்தயில் போன்று மண்சரிந்து உயிர்கள் மண்ணுக்கும் புதைந்தவுடன் இந்த மக்கள் இவ்வளவு ஆபத்தில் இருக்கின்றார்களா பாவம் இவர்கள் என்பார்கள். அதுவும் சில காலத்தில் மரைந்துவிடும். ஆனால் இன்று நிலைமை சற்று மாறி ஜனாநாயக ரீதியில் தோட்ட தொழிலார்கள்  உரிமைக்காக போராடும் வழிமுறைக்கு மாற்றம் பெற்றுள்ளனர். இது வரவேற்க்கப்படவேண்டிய விடயமா என்கிறார் ஆம் இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று தான். 
 
கடந்த தசாப்த கால  அரசியலில் நிலைமைகளின் படி மலையக அரசியல் தலைமைகள் முதலாளிகளாகவும் தோட்டங்களின் உரிமையாளர்களாகவும்  வியாபாரிகளாகவும் இருக்கின்றனர். இது உண்மையில் அவர்கள் அரசியலுக்கு வந்த பிளான் நடனமாத்தாத்தாபின்னர் நடந்ததா அல்லது அதற்கு முன்னரே இவர்கள் இப்படி தான் என்பது உங்களுக்கே தெரியும். 

வியாபாரிகள் , தோட்ட உரிமையாளர்கள் என்ற மனநிலையில் இருப்பவர்களால் மக்களின் கஷ்டத்தை அறிய வாய்ப்பை]இல்லை அவர்களை அனைத்தையும் அரசியல் , வியாபாரமாகவே பார்ப்பார்கள். இந்த உதாரணமாக கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களும் ஏனைய மலையக தொழிற்சங்கங்கத்தில் உள்ளவர்களும் ஒரு தோட்டத்துக்கு உரிமையாளராக சில மக்களை வழிநடத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் மக்கள் பிரச்சினைகளை கருதி கேற்பதில்லை என்ற நிலை உருவாக்கி இருந்தது. இதில் தலைமைத்துவம் என்பது முதலாளி என்ற நிலையில் தான் இருக்கின்றதே தவிர ஜனநாயக ரீதியான எந்த ஒரு பண்பும் இங்கு நடக்காது. இருக்காது. இந்த நிலையில் தான் ஒரு மக்கள் போராட்டம் நடக்கிறது.

இரவு பகலாக வீதியில் இறங்கி மழை கடும் குளிரில் காற்றில் என நடுங்கிக்கொண்டு வீதியில் கிடக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் தோட்டம். அரசாங்கம்  இந்த மக்களை கண்டுகொள்ளவில்லை என்பது தான் உண்மை. நான்கு நாட்கள் போராட்டம் நடந்தது. இந்த நான்கு நாட்களில் மலையக அரசியல்வாதிகள் லாபம் தேட முனைந்தமை இங்கு அவதானிக்க கூடியதாக இருந்தது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி இந்த போராட்டம் கண்டி உன்னஸ்கிரிய நகரில் எயாபார்க் தோட்ட மக்கள் ஆரம்பித்தனர். தொடர்ந்து நான்கு நாட்களாக நடந்த  போராட்டம் கடந்த 03 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

எயாபார்க் தோட்ட மக்களின் தொடர் போராட்டம் இதற்கு முன் நடந்தது

கண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் எயாபார்க் தோட்டம, இலங்கை பெருந்தோட்ட கூட்டுதாபனத்தின் (slspc) கீழ் இயங்கி வருகின்றது. இத் தோட்டத்தில் மொத்தம் ஆறு டிவிசன்கள் காணப்படுகின்றது. இங்குள்ள  மொத்த சனத்தொகை 1800 ஆகும். இதில் தோட்டத் தொழிலாளர்களாக 200 பேர் வேலை செய்கின்றார்கள். அதிகமான தொழிலாளர்கள் கடந்த காலங்களில் இத் தோட்டத்தில் முறையாக வேலை வழங்கப்படாத காரணத்தினால் வெளியிடங்களுக்கு வேலைத் தேடி சென்றுவிட்டார்கள். இத் தோட்டத்தில் வாழும் மக்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். குறிப்பாக பல வருட காலங்களாக, இவர்களுக்கு ஒரு மாதத்தில் ஆக குறைந்தது 25 நாட்கள் வேலை வழங்குவது நிறுத்தப்பட்ட ஒரு விடயமாகும். 

2007ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இத் தோட்டம் ஒழுங்காக பராமறிக்கப்படாத நிலையில் இருப்பதோடு, இங்குள்ள தொழிலாளர்களுக்கு 5 தொடக்கம் 12 நாட்கள் வரையே வேலை வழங்கப்பட்டு வருகின்றது. இந் நிகழ்வானது திட்டமிட்டு தொழிலாளர்களை அத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையாக நாம் கருதுகின்றோம். பல நூற்றாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இத் தோட்டத்தில் இருந்து இந்த நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்த தொழிலாளர்கள் இன்று வீதிக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

2007ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இம் மக்களின் பிரச்சினையை தீர்க்க பல கடிதங்கள் தொழில் திணைக்களத்திற்கும், இலங்கை பெருந்தோட்ட கூட்டுதாபனத்திற்கும் (slspc );, தொழில் அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கும் எமது சங்கம் அனுப்பிவைத்துள்ளது. அத்தோடு 50ம் மேற்பட்ட தடவைகள் கொழும்பு மற்றும் கண்டி தொழில் திணைக்களத்தில் இப் பிரச்சினை தொடர்பாக பேரம் பேசலில் எமது சங்கம்  ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இப் பிரச்சினையை தீர்த்து வைக்கும் படி அரசுக்கு அழுத்தம் கோரி பல தொழிலாள போராட்டங்கள் நடைப்பெற்றுள்ளன. 

இறுதியாக எமது தொடர் போராட்டம், 27.09.2016 அன்று கொழும்பு, நாராயண்பிட தொழில் திணைக்களத்தின் முன் ஆரம்பிக்கப்பட்ட போது, எமது தொழிலாளர்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு வரும் வரை குறிப்பிட்ட இடத்தைவிட்டு அசையமாட்டோம் என இருந்த வேலையில், தொழில் ஆணையாளரின் பணிப்பின் பேரில் தொழில் திணைக்கள பிரதிநிதிகள் போராட்ட இடத்திற்கு வந்து செங்கொடி சங்கத்தை பேரம் பேசலுக்கு அழைத்து சென்றனர். அதன் போது இப் பிரச்சினைக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வினை பெற்றுதருவதாக தெரிவித்ததோடு, அதற்கான செயற்பாடாக 05.10.2016 அன்று தொழில்அமைச்சர், அரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை பெருந்தோட்ட கூட்டுதாபனம் (slspc );, மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB);, எல்கடுவ பிலான்டேசன் ஆகியோருடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தனர். அதற்கமைய அன்றைய தினத்தில் போராட்டத்தை நிறுத்தி வைத்ததோடு திட்டமிட்டபடி ஒக்டோபர் 5ம் திகதி கலந்துரையாடலுக்கு சங்கத்தின் பிரதிநிதிகள் சென்ற வேலை தொழில் அமைச்சரோ, அரச வளங்கள்; மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரோ பங்குபற்றாததோடு, இக் கலந்துரையாடலில் ஒரு தீர்வு கிடைக்கவில்லை. மேலும் அரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு சார்பில் பங்குபற்றிய பிரதி செயலாளர் எவ்வித மாற்று திட்டங்களையும் கொண்டுவந்திருக்காததோடு, சங்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் நிலையில் இருக்க வில்லை. இறுதியாக சங்கம் முன்வைத்த மாற்று திட்ட பிரதியை தொழில் ஆணையாளரும், அரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சி  அபிவிருத்தி அமைச்சு பிரதிநிதியும் பெற்றுக் கொண்டதோடு, வெகுவிரைவில் தாங்கள் தங்களுடைய மாற்று திட்டத்தை  முன்வைப்பதாக தெரிவித்தனர். ஆனால் இன்று வரை அரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு மூலம் கலந்துரையாடலுக்கு ஒரு தினத்தை வழங்கவோ, பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ இல்லை.  
இது இவ்வாறு இருக்க 11.02.2017 அன்று உடதும்பர பிரதேசசபை உறுப்பினர் (சுபசிங்க) கொபோனில்ல டிவிசனை சேர்ந்த ஐந்து ஏக்கர் தேயிலை நிலத்துடனான பங்களாவை அளவீடு செய்து கொண்டிருக்கும் போது தொழிலாளர்கள் அவரிடம் என்ன நடக்கின்றது என்பதை கேட்ட போது “ அவர் இவ்விடத்தில் வேறு திட்டம் ஒன்றை செய்யப்போவதாக” கூறியுள்ளார். இதை தொடர்ந்து தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திடம் கேட்ட போது “அரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை பெருந்தோட்ட கூட்டுதாபனம் ஆகிய நிறுவனங்களின் அனுமதியுடன் நில அளவை மேற்கொள்வதாக கடிதம் ஒன்றை காட்டியுள்ளார்கள். 

கடந்த 10 வருடங்களாக, எயாபார்க் தோட்ட மக்களின் 25 நாட்கள் வேலையை உறுதிப்படுத்துவதற்கு, பல்வேறு வகையில், சட்டத்திற்கு உட்பட்ட முறையிலும,; நியாயமான முறையிலும் நீதி கோரி நின்று இத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். இந்த அரசு, இத் தொழிலாளர்களும் இந் நாட்டு பிரஜைகளே! என்பதை கருத்தில் கொண்டு, அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இன்று சுக்குநூராகி விட்டது. இந்த பிரச்சினையை யாரும் தீர்க்காத பட்சத்தில் நேரடியாக ஜனாதிபதியை சந்திப்பதற்கு பல தடவைகள் கடிதம் மூலம் அனுமதி கேட்டும் ஜனாதிபதியை சந்திக்கும் அனுமதி இவர்களுக்கு கிடைக்கவில்லை. 
கடந்த ஆறுமாதங்களுக்குள் தனியார் போக்குவரத்து பிரச்சினை, லொத்தர் விற்பனையாளர் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை, வடகிழக்கு காணிப்பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளில் நேரடியாக தலையிட்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழிகோரிய ஜனாதிபதி, தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளின் போது, குறிப்பாக அரச தோட்ட தொழிலாளர்களின் இப் பிரச்சினைக்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வு பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்காமல் இருப்பதானது தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையில் ஜனாதிபதியின் அக்கறையை வெளிக்காட்டுகின்றது. 

 மாற்று திட்டங்கள் இல்லாத எயாபார்க் தோட்ட தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கினார்கள். வீதிக்கு இறங்கியிருப்பது வெறுமனே ஒரு பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக மட்டும் அல்ல, தங்களுடைய நீண்டகால பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்குமாகவே. எத்தனை நாட்கள் வீதியில் இவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க போகின்றார்கள் என்பது, இவ் அரசு இவர்களின் பிரச்சினைக்கு கொடுக்கும் தீர்வை பொருத்தே தீர்மானிக்கப்படும். இப் போராட்டத்தில் இவர்கள்; முன்வைக்கும் கோரிக்கைகளாவன: 
1.எயாபர்க் தோட்டத்தில்  சகல தொழிலாள குடும்பங்களுக்கும் ஆக குறைந்தது 2 ஏக்கர் நிலத்தினை குத்தகைக்கு பிரித்து வழங்க வேண்டும். 
2.அரசு இக் காணிகளில, தொழிலாளர்கள் தேயிலை செய்வதற்கான முன் உதவிகளை (உரம், மருந்து, கன்றுகள் மற்றும் விதைகள்) குறிப்பிட்ட காலம் வரை மானியமாக வழங்க வேண்டும். 
3.இக் காணிகளில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தினை அத் தோட்டத்திற்கே சென்று அரசு அல்லது அரச கம்பனிகள் கொள்வனவு செய்ய வேண்டும். 
4.தேயிலை செழிப்பற்ற காலங்களில் மாற்று பயிர்களில் பயன் பெறுமாறு, திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். 
5.குறிப்பிட்ட காலத்திற்குள் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து கொடுப்பனவுகளும் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள்  முன்வைக்கப்பட்டன.


கண்டி உன்னஸ்கிரிய ஏயார்பார்க் தோட்ட மக்கள் கடந்த மாத இறுதியில் ஆரம்பித்து கடந்த மூன்று நாட்களாக நடாத்தி வரும் சத்தியாகிரக போராட்டத்தை தொடர்ந்து கண்டி மாவட்ட தொழில் திணைக்கள ஆணையாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். அதன் படி நேற்று முன்தினம்  கொழும்பிலுள்ள அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் பிரதிநிதி ஒருவருக்கும், இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்துக்கும் ஆர்ப்பாட்டகாரர்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்றது.

கடந்த 2ம் திகதி கொழும்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அரச தோட்டக் காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் மக்களுடன் பேசி தீர்மானிக்கப்படுமென எழுத்து மூலம் உறுதிவழங்கப்பட்டது. ஆனால் 20 நாட்கள் வேலை வழங்கப்படவேண்டும் மாற்று அவர்களின் வாழ்வாதாரத்துக்கு மாற்று வழிகள் மேற்கொள்ளப்படவேண்டும் போன்ற மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேசுவதற்கு முடிவெடுக்கவில்லை. வாய் மொழி மூலம் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படுமென கூறப்பட்ட போதும் எழுத்து மூலம் வழங்கிய கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடவில்லை.

இந்த செய்தியை  போராட்டக்காரர்களிடம் கூறினோம். அதற்கு அவர்கள் தங்களுக்கு இரண்டு ஏக்கர் காணியை குத்தகைக்கு வழங்கவும் தமது வாழ்வாதாரத்துக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை காலவரையறை குறித்து எழுத்ததுமூலம்  வழங்க வேண்டுமென தெரிவித்தனர்.

அதனடிப்படையில்  இலங்கை பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டது. அந்தக் கோரிக்கைக்கு அமைவாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏனைய அரசாங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மூன்று வாரங்களுக்குள் மக்களுக்கு காணியை குத்தகைக்கு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலிக்க திட்டமிட்டு அது தொடர்பாக வேலைத் திட்ட நடவடிக்கையை எடுப்பதாக எழுத்து மூலம் உறுதியளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக  முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.  எனினும் மூன்று வாரத்துக்குப் பின்னர் தமக்கு முறையான தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடருவோம் என தெரிவித்தனர்.


இந்த ஜனநாயக போராட்டத்துக்கு தோல் கொடுத்தவர்களை பற்றி அடுத்தவாரம் பார்ப்போம்.

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...