Monday, February 27, 2017

விக்னேஸ்வரன் வாசுதேவாவின் கூட்டத்துக்கு ஆயுதங்களை வழங்குகிறார்


டக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவ்ரது மைத்துனர் வாசுதேவவின் இனவாத கூட்டத்துக்கு ஆயுதங்களை வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  எனினும் அவர் வடக்கிலிருந்து வெளிப்படுத்தும் கருத்துக்களால் தாம் மனவேதனையுடன் கட்டிப்போடவேண்டும் என்ற கதையை கூறியதாகவும் அதனால் பல்வேறுபட்ட  ரீதியில் விமர்சனங்கள் வந்தன. சிலர் அப்படி சொல்லாமல் இருந்திருக்கலாம் என கூறினார்கள்.இருப்பினும்  தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்காக தான் முன்னிட்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். 

அவர் வழங்கிய செவ்வியின் தொகுப்பு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Sunday, February 26, 2017

கூட்டு ஒப்பந்த வழக்கு ஒத்திவைப்பும், இதொகாவின் மீள்பரிசீலனையும்


டந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி தோட்டக் கம்பனிகள் சார்பில் இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தோட்ட தொழிலாளர்களின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு நிலையம் என்பனவும் கைச்சாத்திட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள கூட்டு ஒப்பந்தத்தை தொழில் ஆணையாளர் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்தமை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம்  தொடர்பான கூட்டு ஒப்பந்த தொழிற்சட்டங்களுக்கு முரணாகவும், தொழிலாளர்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளை பறிப்பதாகவும்இ இயற்கை நீதிக்கு எதிராகவும், 2003ஆம் ஆண்டு அடிப்படை கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும் இருப்பதனால் அதனை இரத்து செய்யும்படி பதிவு செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில்தான் நடக்கும்

அமைச்சர் எஸ்பி திஸாநாயக்க 

கே. அரசாங்கத்தை முறையாக கொண்டுநடத்துவதை விட தற்போது உங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரச்சினைகளை தீர்க்கவேண்டி இருக்கிறது தானே?
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சிக்கு ஒன்றும் நடக்கவில்லை. சுகாவுக்குள் இவ்வாறான உள்ளக பிரச்சினை ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் கிராமத்தலைவன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு இருக்கிறது. அதனால் சில அரசியல்வாதிகள் பயந்துள்ளனர். ஆனால் இந்த நடைமுறையானது தற்பொழுது குறைந்துகொண்டுவருவதாய் நான் அவதானிக்கிறேன். இதுபோன்றே சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்த்திலும் நடந்தது. மக்கள் சிறிமாவோவுக்கு ஆதரவளித்தனர்.அவரை சுற்றி பலர் இருந்தனர்.


Tuesday, February 7, 2017

மனிதவள நிறுவனங்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை

42 நாட்களாக தொடரும் சத்தியாகிரக ஆர்ப்பாட்டத்தின் பின்னணி

கிட்டத்தட்ட ஒன்றறை மாதங்கள் வீதியில் இறங்கி போராடும் அந்த மக்களை யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இன்றுடன் 42 நாட்களாக வீதியில் கிடைக்கும் மனிதர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது அரசாங்கம் மீதான வெறுப்பை அதிகரிக்கவைக்கிறது என்கின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். இலங்கை தகவல் தொடர்பாடலில் தவிர்க்கமுடியாத ஒரு நிறுவனத்தில் முழுநேர வேலையாட்கள் 2100 பேரை நிரந்தரமாக்கும் படி மட்டுமே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Monday, February 6, 2017

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் முரண்பாடா?

இன்னும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவில்லை. தற்போது அணைத்து கட்சியினரின் கருத்துக்களை மட்டுமே கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்களின் கருத்துக்கள் மட்டுமல்ல பொது மக்களின் கருத்துக்களும் உளவாக்ப்பட்ட பின்னரே அரசியலமைப்பு உருவாகும். அனைத்தின மக்களுக்கும் ஏற்ற பொதுவான அரசியலமைப்பு தான் உருவாகும். ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே ஒரு குழுவினர் எதிர்க்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அந்த குழு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எந்த குழுவும் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளே உருவாகவில்லை. ஐக்கிய தேசிய கட்சி என்ற ஒரே ஒரு குழு மட்டுமே இருக்கிறது. இது தேசிய அரசு. இதில் மக்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.அதற்காக வேறுபட்டு நடக்கவில்லை. தேசிய அரசுடன் இணைந்துதான் நாம் செயற்படுகிறோம் என தெரிவித்த கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிஷன் தம் மீது சுமத்தப்படும் நெல் மோசடி தொடர்பான குற்றச்சாற்றுக்கள் அரசியல் பழிவாங்கல் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த செவ்வியின் தொகுப்பு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

தகவலறியும் உரிமைக்கான விண்ணப்பம் (தமிழில்) கட்டண விபரம்

தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பகிரங்க அதிகார சபையின் தகவல்களை
பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான
கட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அராசாங்கம் வெளியிட்டுள்ளது.

தகவலறியும் உரிமைச்சட்டம் 04ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்ததை தொடர்ந்து
குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு (04.02.2017)
அன்று அரசாங்கம் வெளியிட்டுள்ளது.  


Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...