Saturday, February 27, 2016

மீனுக்கும் எல்லை இல்லை மீனவனுக்கும் எல்லை இல்லை

இந்திய மீனவர் சங்கத்தின் ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் எமிரேட்
கடல் வளம் குறையவில்லை மீன் பிடிக்க பிடிக்கத் தான் மீன்வளம் பெருகும். அள்ள  ஊறும் குளம் போன்றது தான் கடல் வளம். எல்லைகள் என்பது இரு
நாட்டு கடற்படைகளுக்கே தவிர மீனவர்களுக்கு இல்லை. இந்திய மீன் இலங்கை மீன் என்று பிரிக்க முடியாது. மீனுக்கும் எல்லை இல்லை மீனவனுக்கும் எல்லை இல்லை. இதில் இரு நாட்டு அரசாங்கமும் பிடிவாதத்தை கைவிட்டு மீனவர்களின் நலனுக்காக பேச முன்வரவேண்டும் என்கின்றார் அனைத்து இந்திய மீனவர் சங்கத்தின் ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் எமிரேட்.

கச்சதீவு திருவிழா ஓர் இணக்கப்பாட்டுக்கான தளம்

கச்சதீவில் அந்தோனியாரை வழிபாடும் பக்தை 
இலங்கை இந்திய மக்களும் ஒற்றுமையின் வழியாக கடலைத்தாண்டி ஒன்று சேரும் ஒரு தீவு தான் கச்சதீவு. 1974இல் கச்சதீவு இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டது. ஆனால் கச்சதீவை இந்தியாவுக்கே வழங்கவேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடுத்த வழக்கு இன்றும் தொடர்கிறது. இவ்வாறு கச்சதீவு தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்தாலும், தடைகளை கடந்து ஒருநாள் கச்சதீவில் மக்கள் ஒன்றுகூடுகின்றனர் என்பது தான் உண்மை.

Wednesday, February 24, 2016

ஒரு ஊடகவியலாளரின் ராஜினாமா கடிதம்!

Vishwa deepak
டெ ல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் பல்கலை மாணவர்களின் கனவுகள், படிப்பு மற்றும் குடும்பங்களை அச்சுறுத்தும் விதமாக செய்திகளை தொடர்ந்து வெளியிட்ட ஜீ (zee news) செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் ஊடகவியலாளர் விஷ்வா தீபக். அவருடைய ராஜினாமா கடிதம் தமிழில்,

முதல்முறை சிறைக்குவெளியே வந்த நளினிக்கு தந்தையின் உடல் காட்சி...

ரா ஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருப்பவர் நளினி. 
இந்நிலையில், நளினியின் தந்தை சங்கரநாராயணன் உடல் நலக்குறைவால் நேற்று (23.02.2016) உயிரிழந்தார். 

Wednesday, February 17, 2016

சட்டமும் மஹிந்தவும்

ம ஹிந்த ராஜபக்ச இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்பதையும் தாண்டி இன்று மகிந்தவை மகனுக்காக போராடும் ஒரு தந்தையாகவும் பெரும்பான்மையின சமூகம் பார்க்கிறது. இது இப்படியிருக்க மஹிந்த தரப்பு புதிய கட்சியையும் ஆரம்பிக்க திட்டமிட்டு காய்களை நகர்த்திவருகின்றார்.

மஹிந்த தனது உரிமைக்காகவே போராடுகின்றார்

ஏ .ஜெயசூரியன் 

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்பியுமான மஹிந்த ராஜபக்ச தான் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தமக்கு கிடைக்கப்படவேண்டிய வீடு மற்றும் வாகனம் என்பவற்றை பெற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு நாடுமுளுவதும் உள்ள மக்கள் தம்மிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே மக்கள் தொடர்பாடல் அலுவலகம் உருவாக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கின்றார்.

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...