ம ஹிந்த ராஜபக்ச இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்பதையும் தாண்டி இன்று மகிந்தவை மகனுக்காக போராடும் ஒரு தந்தையாகவும் பெரும்பான்மையின சமூகம் பார்க்கிறது. இது இப்படியிருக்க மஹிந்த தரப்பு
புதிய கட்சியையும் ஆரம்பிக்க திட்டமிட்டு காய்களை நகர்த்திவருகின்றார்.
இங்கு புதைந்துள்ள மற்றுமொரு விடயம், அரசியல் காரணங்களினால்
மஹிந்தவின் குடும்பம் சீர்குலைக்கப்படுகின்றது என்ற கருத்தையும் தென்னிலங்கையில் மஹிந்த ஆதரவாளர்கள் பரப்பிவருகின்றனர்.இது புதிய கட்சி உருவாக்குவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திகொடுக்கிறது.
இருப்பினும் மஹிந்த தரப்பினால் புதிய கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாது இருக்கின்றது. காரணம், முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேசசபைக்கான தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. எப்போது தேர்தல் நடைபெறுமென இன்னும் அறிவிக்கப்படவும் இல்லை. இந்நிலையில் மஹிந்த தரப்பு கட்சியை பதிவு செய்ய முடியாது. இதுதான் சட்டத்திலுள்ளது என்கிறார் தேர்தல் ஆணையாளர்.
அதேநேரம் மஹிந்தவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்சவின் கைது
விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எவ்வித சலுகைகளோ மஹிந்தவுக்கு எதிர்ப்பார்க்கமுடியாது. சட்டம் தன் கடமையை செய்கிறது என்கிறது நல்லாட்சி அரசாங்கம்.
தனது பதவிக்காக சட்டத்தில் திருத்தங்களை செய்த மஹிந்த அரசாங்கம் தமது குடும்பம் சட்டத்தின் பிடியில் இருக்கும் போது என்ன செய்யவேண்டும் என்பதை மறந்துவிட்டது. இறுதியாக தான் கற்ற சட்டக் கல்வியை மஹிந்த நேற்று மேல்நீதிமன்றில் பயன்படுத்தினார். பலன் எதுவும் இல்லை. தூசு தட்டி எடுத்த கோர்ட்டு பளிச்சிட கொஞ்ச நாள் செல்லும்போல. மகனுக்காக பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சட்டத்தரணியாகிய ஜனாதிபதி தந்தை என்ற கோசம் இலனகையில் பெரிய விடயமல்ல வெளிநாட்டுக்கு முக்கிய செய்திதான்.
- சூரியன்
- சூரியன்
No comments:
Post a Comment