மேதினம் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு தினமாக கருதப்படுகிறது. சில நாடுகளில் தொழிலாளர் தினமாகவும் சிலநாடுகளில் சர்வதேச தொழிலார்கள் தினமாகவும் கொண்டாடப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு நாட்டிலும் முதலாளி வர்க்கம் தொழிலாளர் வர்க்கத்தை அடக்கி ஆண்டுகொண்டே இருக்கின்றன. இந்த சந்தர்ப்பங்களில் தொழிலாளர் வர்க்கம் தங்கள் உரிமைகளுக்காக எதிர்த்து குரல்கொடுத்துள்ளனர் எனவும் அறியப்படுகிறது.
சட்ட வரையறைகள் எதுவுமின்றி உலகத்தில் வாழுகின்ற தொழிலாளர்கள் முதலாளி வர்கத்தினரின் நசுக்குதலுக்கு மத்தியில் தங்களினது பணிகளை மேற்கொண்டு வந்தனர். எனவே இந்நிலைமைகளை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள் சுயமாக சிந்தித்து ஒரு தொழிலாளிக்கு எட்டு மணித்தியால வேலை, ஓய்வுதியம், சுகயீன, வேலைகளுக்கான வடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிகையை முன்வைத்தனர். இதனை சட்டத்துடன் இணைத்து நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் முதலாளி வர்கத்தினரிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.
அரசியல் பின்னையை தனதாக்கி கொண்ட முதலாளிகள் வர்க்கத்தினர் அக் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். தமது கோரிக்கையை ஏற்காத காரணத்தினால் தொழிலாளர்கள் அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் 1884ஆம் ஆண்டு போராட்டத்தை ஆரம்பித்தனர். தொழிலாளர்களின் இந்த செயற்பாட்டை தாங்கிக்கொள்ள முடியாத முதலாளி வர்கத்தினர் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
தனது வர்க்கத்தினர் கொல்லப்பட்டதால் ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.இதற்கு ஈடுகொடுக்க முடியாத முதலாளி வர்கத்தினர் அவர்களினுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். இப்படி உரிமை போராட்டத்தின் விளைவாக உலகத் தொழிலாளர்களுக்கு கிடைத்த வெற்றி பல் உயிர்கள் சிந்திய தியாகமே என்பதன் அடிப்படையில் சிவப்பு கொடிகள் ஏந்தி அந்த வெற்றியை கொண்டாடுகின்றனர்.
உயிர் தியாகம் செய்தவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இன்று இலங்கை போன்ற நாடுகளில் மேதினம் அரசியல் கட்சிகளின் அதிகார பலத்தை காண்பிக்கும் ஒரு நிகழ்வாக நடத்தப்படுகிறது. இது 21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சி மாற்றம் இருகூறிவிடமுடியாது. காரணம் சில நாடுகளில் மேதினத்தில் தொழிலாளர் உரிமை தத்துவங்கள் எடுத்துச்சொல்லப்படுகின்றன. குறிப்பாக தொழிலார்கள் வர்க்கம் மொத்தமும் ஒண்றுகுவிக்கப்பட்டுள்ள மலையகத்தில் மிகவும் மோசமான முறையில் மேதினம் கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இது வுஒரு மெத்தனத்துக்கு முன்னும் மேதினம் நடைபெற்றதற்கு பின்னரும் உபதேசிக்கப்படும் மந்திரமாக மாறிவிட்டது. பணம், உணவு பொதி, மதுசாரம் கொடுத்து எல்லா தொழிலாளர்களையும் வலுக்கட்டாயமாக அரசியல் கூட்டத்துக்கு வரவழைப்பது தான் மலையகத்தில் காலம் காலமாக நடந்து வரும் மேதினம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயக நாடு என்பதால் போராட்டத்துக்கு குறைவில்லை. போராட்டத்தில் தொழிலாளர் வேறுபாடு இல்லை எனறவகையில் அரசாங்கம் கடந்த காலங்களில் நடந்துவந்த போராட்டங்களை கண்டுகொள்ளாமல்விட்ட சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. இதனூடாக பாடம் கற்றுக்கொண்டாலும் மலையகத்தின் தொழிற்சங்க அரசியலில் மலையக தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். ஆகக்குறைந்தது தமது சந்தாப்பணத்தில் என்ன நடக்கிறது என்று கேட்ககூட வலுவில்லாதவர்களாக அடக்கியாளப்படுகிறார்கள். தொழிற்சங்கமும் அரசியல் கட்சியும் ஒன்று. அதனை பிரிக்கமுடியாது. இத்தகைய சந்தர்ப்பங்களில் அரசியல் தலைமைக்கு எதிராகவோ அல்லது தொழிற்சங்கத்தினூடாக கிடைக்கும் உரிமைகளை பெற்றுக்கொள்ளவோ முடியாமல் போகிறது.
1996 ஆண்டுக்காலப்பகுதியில் மலையகப்பகுதியில் கொண்டாடப்பட்ட போது நான் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதின கூட்டம் ஒன்று ஹட்டனில் நடந்தது அதில் நான் கலந்துகொண்டிருந்தேன் மிகவும் வேடிக்கையாக இருந்தது. இலங்கை தொழிலாளர்காங்கிரஸின் தோட்ட தலைவர்கள் காலையில் கொடியேற்றினார்கள். புத்தாடைகளுடன் வந்தவர்கள் ஒருசிலர்தான் அவர்கள் தோட்டத்தலைவருக்கு வேண்டப்பட்டவர்களாவே இருந்தனர். இளைஞர் கூட்டம் மிகக்குறைவு. பெரியவர்கள் கூட்டத்தை விட சிறுவர்களின் கூட்டமே அதிகமாக இருந்தது. காரணம் கொடியேற்றிய பின்னர் இனிப்பு தின்பண்டங்கள் தருவார்கள். அவர்களின் எதிர்பார்ப்புபோலவே தோட்டத்தின் தலைவர் ஒருவர் கோடியை ஏற்றினார். பட்டாசு கொளுத்தப்பட்டது. பின்னர் எமது தோட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் தொகையை அதிகரிக்கவேண்டும். தொண்டமான் அய்யாவிடம் கூறி இந்த தோட்டத்துக்கு வீதியை செய்துகொள்ளவேண்டும் அதற்குங்கால் ஒத்துழைப்பு தேவை என்கிறார். ஆனால் இதனையெல்லாம் அங்கிருந்த சிலர்தான் கேட்டார்கள் அதற்குள் இனிப்பு தின்பண்டங்கள் வழங்கப்பட்டுவிட்டன கொட்டியாக்கொல தோட்டத்தை சேர்ந்த சிவனு (76) என்ற ஒரு முன்னாள் தொழிலாளி தான் சென்ற ஒரு மேதின கூட்டம் தொடர்பாக கருத்து பகிர்ந்துகொண்டார். அன்று பிரதான மேதினக்கூட்டத்துக்கு மொத்த கூட்டமும் தோட்டங்களில் இருந்து சென்று விடுவார்கள். ஆனால் ஒரு இடத்தில் கட்டாயம் இப்படி கட்சியின் தீவிர தொண்டனால் ஒரு மேதினம் கூட்டம் நடத்தப்பட்டதே சிவனுவால் மறக்கமுடியாத மேதினமாக இருந்தது என கூறுகிறார்.
இதே மேதினத்தை பற்றி கொழும்பில் வேலை செய்யும் ஒரு மலையக இளைஞன் சதுர்ஷனிடம் கேட்டபோது என்ன அம்மா அப்பா பதுளைல வேல செய்றாங்க அவங்களுக்கு மேதினம் எப்படி உருவானுச்சு என்றெல்லாம் தெரியாது. ஆனால் நான் மேதினம் பற்றி நன்றாக அறிவேன். கடையொன்றில் வேலை செய்தாலும் சமூக ஊடகத்தில் தொடர்ந்து இருப்பதால் இது எமக்கான நாள் என்றும்கருத்துவேன். ஆனால் நகை கடை முதலாளிகளிடம் அப்படி கேட்க முடியுமா பெரும்பாலும் மலையக மைந்தர்கள்தான் நகை கடை உரிமையாளர்களாகவும் இருக்கிறார்கள் அத்துடன் புடவை கடை தொழிலாளர்களுக்கும் இதே நிலைமைதான் காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு நடந்த மேதின கூட்டமொன்றை என்னால் மறக்க முடியாது காரணம் தொழிலாளர் உரிமைகளை பேசவேண்டிய தினத்தில் அதுவும் நமது மலையக மைந்தர்கள் கொழும்பிலுள்ள சிறுவர் பெரியோர் என இணைந்து விளையாட்டு போட்டியை நடத்தினர். அந்த வழியாக சென்ற எனக்கு கவலையாக இருந்தது. மண்சரிந்துக்கு கவலை படுகின்றார்கள் உதவி செய்கின்றார்கள். ஆனால் இதெல்லாவற்றுக்கும் அடிப்படையாய் இருக்கும் உரிமை நமக்கு கிடைத்திருந்தால் இதெல்லாம் நடக்குமா? என்று சிந்திக்க அவர்கள் மறந்துவிட்டனர். இது என்னால் மறக்க முடியாத ஒரு மேதினம் அநேகமாக இம்முறையும் இப்படி ஏதாவது நடக்குமென நினைக்கிறேன் என்று தனது கருத்தை கூறினார்.
மேதினத்தில் தொழிலாளர் உரிமை பற்றி பேசவேண்டும் என அனைவருமே கூறுகின்றார்கள் ஆனால் ஒவ்வொரு வருடமும் பேச என்ன உரிமை இருக்கிறது என தொழிற்ச்சங்க அரசியலில் மிகுந்த ஈடுபாடுடைய மதுகமவை சேர்ந்த ரட்ணசிங்கம் என்பவரிடம் கேட்டபோது ஏன் இல்லை இலங்கையின் முதுகெலும்பு என மலையக மக்களை சொல்லி பெருமைபடுகின்றார்கள். அந்த மக்கள் கழுத்து கூடையை சமைக்கும்போது முதுகுவலி ஏற்படும். வாழ்நாள் முழுக்க இந்த வலி வேதனை இருக்கும். தலையில் ஒரு பட்டியில் (கயிற்றில்) தினமும் ஆகக்குறைந்தது 15 கிலோ கொழுந்தை சுமக்கவேண்டும். அப்போது தலை வலிக்கும். ரத்தஓட்டம் சீராக இருக்காது.இதனால் பிறக்கும் குழந்தையும் போசாக்கான பிள்ளையாக இருக்கலாம் பிள்ளைக்கு மூளை சார்ந்து பிரச்சினைகள் உருவாகலாம்.எலும்பு தெரியலாம். பெண்களுக்கு இதனால் பல பிரச்சினைகள் உண்டு. கைகளை அசைத்து ஒவ்வொருநாளும் கொழுந்து எடுக்கவேண்டும் கொழுந்தை பறித்து தலைக்கு மேலே பையிலோ அல்லது கூடையிலோ 50-60 தடவையாவது போடவேண்டும்.அப்போது கை வலிக்கும். நின்றுகொண்டே வேலை செய்யவேண்டும் கல் வலிக்கும். நரம்பு சுருண்டுகொள்ளும். தேயிலை செடியில் இருக்கும் விஷ பூச்சிகள் குளவி பாம்பு அட்டை சிறுத்தை போன்ற விலங்குகள் தொழிலாளியை தாக்கும். பாதுகாப்பு கவசங்கள் இல்லை. கவ்வாத்து வெட்டும்போது கை வெட்டுப்படலாம்.கட்டை காற்ச்சட்டை போடுவதால் காலில் காயங்கள் படலாம். செருப்பு போடாததால் கிருமிகள் தொற்று ஏற்படும். ஒரே நிறத்தை பார்த்துக்கொண்டு அதாவது பச்சை நிறத்தை மட்டுமே வாழ் முழுக்க அதிக நேரம் பார்ப்பதால் நிறக்குருடு ஏற்படலாம். உரம் போடுவதற்கும் மருந்து அடிப்பதற்கும் பாதுகாப்பு கவசங்கள் பாவிக்காதமையினால் சுவாச நோய் நுரையீரல் இதயம் சார்ந்த நோய் வரலாம். களை நாசினிகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் நிலம் அதனை உறிஞ்சும் அதனால் நிலம் மற்றும் அங்கு வளரும் தாவரம் நச்சுத்தன்மையை அடையலாம். அதனை உண்ணும் மிருகம் முதல் மனிதன் அனைவருக்கும் நோய் மற்றும் மரணம் அல்லது ணம் இயங்காமல் போகலாம்.சிறுநீரக நோய் ஏற்படலாம். நிலம் நசுத்தன்மை அடைந்தால் நிலம் வளமிழந்து தரிசாகும் இனி அதில் பயிரிட முடியாது.வறட்சி வாட்டி வதைக்கும் அப்பறமா தொற்றுநோய் நீரில்லை என இந்தியவம்சாவளி அழியும். சம்பளம் இல்லை அதற்கு ஒரு தொழிற்சங்கம் இருக்கிறது ஏன் அவர்கள் முதலாளிமார்களுடன் ஒப்பந்தம் செய்யவேண்டும்? இப்படி சொல்லிக்கொண்டுபோகலாம். பேசுவதற்கு நிறைய உள்ளன.
ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முதல் தொழிலாளி தனக்கு என்ன தேவை அது எங்கு இருக்கிறது பாதுகாப்பு தேவையென்றால் யாரிடம் கேட்கலாம் தராவிட்டால் என்ன செய்யலாம் என தெரிந்து வைத்திருக்கவேண்டும். இதைத்தான் தொழிலார் தினம் அதாவது மேதினத்தில் சொல்லி விளங்கப்படுத்தவேண்டும். இப்படி எவ்வளவோ பேசுவதற்கு இருக்கிறது. அதற்காகத்தான் இந்தநாளை பெரும்பாலான நாடுகள் அரசாங்க பொதுவிடுமுறை நாளாக அறிவித்துள்ளது.நமது மக்களுக்குத்தான் அறிவு தேவை. அதனை வேறுயாரும் சொல்லமாட்டார்கள்.நாம்தான் செய்யவேண்டும் என்கிறார் ரட்ணசிங்கம்.
ஒரு தொழிலாளிக்கு இப்படியெல்லாம் பிரச்சினைகள் இருக்குமா என்று வாய்பிழக்க செய்கிறது ரட்ணசிங்கம் கருத்துக்கள். இவர் கூறுவதைப்போலவே தொழிலாளி ஒருவருக்கான வீடு, காணி, அனர்த்த பாதுகாப்பு, சுகாதாரம், தொழில் பாதுகாப்பு, காப்பீடு, நட்டஈடு,போக்குவரத்து, ஊழியருக்கு ஓய்வூதியம், சட்ட பாதுகாப்பு என பலவிடயங்கள் இருந்தாலுமே தோட்டத்தொழிலாளிக்கென எதுவுமே வழங்கப்படுவதில்லை. மறைக்கப்படுகிறது. அரசியல்வாதிகளே தொழிற்சங்க தலைவர்களாகவும் இருப்பதால் மலையகத்தில் எதனையும் முன்னெடுத்து செல்ல முடியாத நிலை இருக்கின்றது.
தொழில் மற்றும் தொழிற்ச்சங்க உறவுகள் அமைச்சு, இலங்கை தொழில் திணைக்களம், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனம், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் தொழில் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகம் தேசிய தொழிற் கற்கை நிறுவனம் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் சிரம வாசனா நிதியம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உலக சுகாதார அமைப்பு போன்றனவும் பொலிஸ் மற்றும் தொழில் பிணக்குகளைத் தீர்க்கவென தொழிலாளர் நீதிமன்றமென பல விடயங்கள் இருக்கின்றன. இவற்றை தொழிலாளர்கள் அறிந்து கொள்வது மேதினத்தில் தான் என்பதை விளங்கிக்கொள்ளுமா இந்த சமூகம்..?

No comments:
Post a Comment