ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு ஏற்பட காரணம் ஒன்றிணைத்த எதிர்க்கட்சியை ஆதரித்தது தான் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம் எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேதினக்கூட்டம் கண்டி கெட்டம்பே மைதானத்தில் தான் நடக்கிறது. அதில் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளாவிட்டால் மத்திய செயற்குழு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாரும் விவசாய மைச்சருமான துமிந்த திஸாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து நடத்தும் தேசிய அரசாங்கம் சிறிது காலத்துக்குத்தான். அதனை நிரந்தரமாக நடத்தமுயாது எனவும் தெரிவித்தார்.இக்கருதட்டுக்கள் உள்ளடங்கிய அவரது நேர்காணல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
மேதின கூட்டத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி எவ்வாறு தயாராகியுள்ளது?
வரலாற்றில் இதுவரை எதிர்பார்காதளவுக்கு மக்கள் அதிகமாக கலந்துகொள்ள இம்முறை மேதின ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுதந்திரக்கட்சியை சேர்ந்த சிலர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பக்கத்திலிருந்துகொண்டு காலிமுகத்திடலில் தனியாக மேதின கூட்டமொன்றை நடத்துகின்றார்களே அது தொடர்பாக கட்சியின் நிலைப்பாடு என்ன?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு ஒன்றுகூடி ஒரு தீர்மானத்தை எடுத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேதினக்கூட்டம் கண்டியில் கெட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ளது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி குறித்த தீர்மானத்தை அனைத்து அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் போன்றோருக்கு பதிவுத்தபால் மூலம் மேதினக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென்றால் என்ன செய்வீர்கள்?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேதினக்கூட்டத்தில் யாராவது கலந்துகொள்ளவில்லை என்றால் அது தொடர்பாக கட்சியின் மத்திய செயற்குழு கூடி கலந்துபேசி முடிவெடுக்கும்.அதன்படிதான் அமை ப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர் கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவேண்டிய ஒரே ஒரு மேதினம் கெட்டம்பே தான். எங்களது மேதினம் அங்கு மட்டுமேதான் நடக்கிறது,எங்களுக்கு தெரிந்தவரை காலிமுகத்திடலில் நடப்பது ஜிஎல் பீரிஸ் தலைமையிலுள்ள கட்சியின் மேதினக்கூட்டம்.
உண்மையான சுதந்திரக்கட்சியின் மேதினக்கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் காலிமுகத்திடலில் தான் நடக்கிறது என அவர்கள் கூறுகின்றார்களே?
உண்மையான சுதந்திரக்கட்சியினரின் மேதினக் கூட்டம் எப்படி காலிமுகத்திடலில் நடக்கும்? அங்கு இருப்பது ஜிஎல் பீரிஸின் தலைமையிலான கட்சியின் மேதின கூட்டம். உண்மையான இலங்கையர்கள் அங்கு இருக்கின்றார்களா?
ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்துபவர்களின் தனது மேதினக்கூட்டத்தை கெம்பல் மைதானத்திலோ அல்லது கெட்டம்பே மைதானத்திலோ நடத்துவது தன பொருத்தமானது என பிரசன்ன ரணதுங்க கூறுகிறாரே..?
அதாவது மஹிந்த எங்களுடன் ஆரம்பத்தில் இருந்தாரே அதுபோலவா என்று நான் கேட்க விரும்புகிறேன்.ஐக்கியதேசிய கட்சியில் இருந்த அனைவரையும் எடுத்துக்கொண்டு எங்களது அரசாங்கத்தில் நல்ல அமைச்சிக்கல் கொடுத்து ஒன்றோடு ஒன்றாக இருந்தார்களே அப்படியா அவர் கூறுகிறார்.வரலாறுகளை மறந்தவர்களுக்கு வரலாற்றை ஞாபகப்படுத்தவேண்டும். ஏனென்றால் இரண்டுபேரும் நாட்டை கட்டியெழுப்ப முயற்சிக்கும்போது அதனை உடைத்து நாசமாக்க இவர்கள் நினைக்கின்றனர். இங்கு கதைக்கும் இவர்கள் ஐதேகவினர் பச்சை நிற சேர்ட்டை கழட்டிவிட்டு நீல நிற சேர்ட்டை அணிந்துகொண்டுவந்தால் வர்களின் தோல் மேல் கைபோட்டுக்கொண்டு வேலைசெய்தவர்கள் தான் இப்போது பேசுகிறார்கள். ஐதேக மற்றும் சுதந்திர கட்சியினர் ஒன்றாக இணைந்து கட்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி அத்துடன் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்திவருகின்றது.ஒன் றாக ஆட்சி நடத்தினாலும். கட்சி ஒன்றாக இல்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள் அதற்கு காரணம் தனித்தனியாக நாங்கள் கட்சியை கட்டியெழுப்புகிறோம்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நடத்தும் மேதினக்கூட்டத்தில்
கலந்துகொள்வதற்கு தடை இல்லையே?
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று அவர்களுக்கு இடமளித்ததால்தான் இந்த பிரச்சினை எல்லாம் உருவானது என இப்போது அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். கட்சியில் இவ்வளவு பிளவு ஏற்பட்டது அந்த காரணத்தினால்தான். அவர்கள் ஸ்ரீலங்காசுதந்திர கட்சியின் உறுப்பினர்களாக கெட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ள மேதின கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும். இந்த குழுவினருடன் இணைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்புவிடுத்தார். அதற்காக ள்காத்திருந்தார். ஆனால் அது இனி நடக்காது என்றநிலையை அவர்கள் உணர்த்தியுள்ளார்.
மத்திய செயற்குழு என்ன நடவடிக்கை எடுத்தாலும் காலிமுகத்திடலில் நடக்கும் மேதின கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிலர்
குறிப்பிட்டுள்ளனரே?
அதுதொடர்பாக மத்திய செயற்குழு மே மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் தான் முடிவெடுக்கும். மேதினத்துக்கு பின்னர் எமக்கு தேவையான அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் மத்திய செயற்குழு ஒன்றுகூடி தீர்மானிக்கும்.
இவ்வாறானவர்களின் கட்சி உறுப்புரிமையை தடை செய்வதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?
அந்த விடயங்கள் தொடர்பாகவும் மத்திய செயற்குழுதான் தீர்மானிக்கும்
கட்சியை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஏற்கனவே உள்ள அமைப்பாளர்களை நீக்கிவிட்டு அந்த இடத்துக்கு புதிய அமைப்பாளர்களை நியமிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.ஏன் அவசரமாக இவ்வாறான ஒரு திட்டத்தை செய்யவேண்டும்?
கட்சியின் எதிர்கால வேலைகள் அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனைவிட வேறுஒருவர் இருந்தால் சிறுதுகாலம் அவதானிக்கவேண்டும் அதற்காக நீண்ட காலம் எடுக்க முடியாது. அப்படியான ஒரு அமைப்பாளர் இருந்தால் இருப்பவரை நீக்கிவிட்டு மாவட்ட அமைப்பாளர் மற்றும் ஆசன அமைப்பாளர்களை நியமிக்கும் வேலைகளைத்தான் நடக்கின்றன.
கட்சியின் பாரம்பரியத்தை இவ்வாறு நீக்குவதாகத்தான் நீங்கள் கூறுகின்றீர்கள்...
கட்சியின் பாரம்பரியம் என்றால் கட்சியின் தலைவரோடு இணைந்து வேலை செய்யவேண்டாமா? மஹிந்தவின் காலத்திலும் கட்சியின் அமைப்பாளர்களை நீக்கியவிட்டு புதிய அமைப்பாளர்களாக பச்சை நிற சேர்ட்டை அணிந்த ஒருத்தருக்கு நீலநிற சேர்ட்டை போட்டுவந்தவருக்கு வழங்கினார்களே.நாங்கள் அப்படி செய்யவில்லையே. பாரம்பரியம் என்று கூறிக்கொண்டு கட்சியின் நல்லது நடக்க இடமில்லாதபோது புதிய அமைப்பாளர்களை இணைத்துக்கொள்வதை தவிர வேறு மாற்று வழி இல்லை.
2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியமைக்குமென ஜனாதிபதி கருத்துதெரிவித்திருந்தார். இதனூடாக அவர் கூறவருவது தேசிய அரசாங்கம் அன்றுடன் முடிந்துவிடுமென்பதா?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நடத்தும் தேசிய அரசாங்கம் சிறிது காலத்துக்குத்தானே.நிரந்தமானது இல்லையே.
லசந்த வீரகுலசூரிய
நன்றி-லக்பிம
தமிழ்-சூரியன்
No comments:
Post a Comment