Thursday, January 28, 2016

புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக வேண்டும்

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான மக்கள் கருத்து கேட்கும் குழு நாடுபூராகவும் தனது வேலையை ஆரம்பித்துள்ள நேரத்தில் சிலர் இப்படி தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக வேண்டும் என்ற கருத்துக்களே இங்கு அதிகமாக கூறப்பட்டாலும் அரசாங்கம் நியமித்துள்ள மக்கள் கருத்து கேட்கும் குழுவானது

அரசியலமைப்பை மாற்ற மக்கள் கருத்துக்களைக்கேட்க வேண்டும்?

“ஒற்றையாட்சியா சமஷ்டியாட்சியா சிறந்தது என்ற சம்பிரதாயபூர்வவாதங்களை தவிர்ப்பது நல்லது”
டாக்டர். பாக்கியசோதி சரவணமுத்து 

நாட்டினதும், மக்களினதும் நலனுக்காகவே என்ற சிந்தனையுடன் தான் அரசியலமைப்புக்கள்  உருவாக்கப்பட்டன. ஆனால்  அவை அரசியல் பின்னணியில் உருவாவதை எவராலும் தவிர்க்க முடியவில்லை. காரணம் அரசாங்கம் என்பது அரசியல் வலையமைப்புக்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கை அரசியலமைப்பும் கூட அரசியலுடன் இன்றுவரை பிண்ணிப் பினைந்துள்ளது. இதுவரை மக்கள் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றத்தில் நிரம்பியுள்ள அரசியல் தலைவர்கள் எடுத்தது தான் முடிவு. இப்படியிருக்க இப்போது மட்டும் ஏன் அரசியலமைப்பை மாற்ற மக்கள் கருத்துக்களைக்கேட்க வேண்டும்?

Friday, January 15, 2016

தேசிய பொங்கல் விழாவில் வடக்குக்கு பதிலளித்த ரணில்



தேசிய பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் நடாத்தி, வடக்கு மக்கள் மனதில் பல நாட்களாக அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டிருந்த கேள்விகளுக்கு அங்கு பேசிய உரையினூடாக  பிரதமர் ரணில் பதிலளித்துள்ளார்.

1.வடக்கில் இராணுவக்கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் நிலங்கள் எத்தனை ஹெக்டேயர்கள்? எப்போது அவை விடுவிக்கப்படும்?
4600 ஹெக்டேயர்கள், விரைவில் நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Saturday, January 9, 2016

இன்னொரு யுத்தத்தை எதிர்ப்பார்த்ததா நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை

யுத்தத்தை ஒழிக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையே உதவியது என்று கடந்த அரசு கூறி ஜனாதிபதியின் அதிகாரத்தை பலப்படுத்தியது என்றால்
இன்னொரு யுத்தத்தை எதிர்ப்பார்த்தா நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை பலப்படுத்தியது என பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரி இன்று பாராளுமன்றில் கேட்கிறார்.

ஒரு மாதத்திற்கு இரண்டு இலங்கையர் வீதம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைகின்றனர்


ஒரு மாதத்திற்கு இரண்டு இலங்கையர் வீதம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இன் பிரசன்னத்தை குறைக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துவருகின்ற போதிலும்கூட ஒரு மாதத்திற்கு இரண்டுபேர் வீதம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைவதாக பயங்கரவாதத்துக்கு எதிரான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொன்சேகாவின் இணையதளத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் முடக்கியது


பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையில் ஜனநாயக கட்சியின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றுமாலை இடம்பெற்ற இந்த சைபர் தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயல் என சந்தேகிக்கப்படுகின்றது.
லங்கா இஸட் நியூஸ் என்ற இந்த இணையத்தளத்தின் முகப்பு பகுதிக்கு பிரவேசிக்கும் போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடியும் பிரசார வாசகங்களும் காணப்படுகின்றன. மேலும் பின்னணியில் பிரசார இசையையும் கேட்க கூடியதாக இருக்கின்றது என ஜனநாயக கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...