தேசிய பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் நடாத்தி, வடக்கு மக்கள் மனதில் பல நாட்களாக அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டிருந்த கேள்விகளுக்கு அங்கு பேசிய உரையினூடாக பிரதமர் ரணில் பதிலளித்துள்ளார்.
1.வடக்கில் இராணுவக்கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் நிலங்கள் எத்தனை ஹெக்டேயர்கள்? எப்போது அவை விடுவிக்கப்படும்?
4600 ஹெக்டேயர்கள், விரைவில் நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2.வடக்கிலுள்ள இராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? ராணுவத்தை குறைக்கமுடியாதது ஏன்?
யாழ்ப்பாணத்தில் சட்டரீதியான இராணுவமே இருக்கின்றன. வடக்கிலுள்ள இராணுவத்தினரின் எண்ணிகையை தற்பொழுது கூறமுடியாது. பாதுகாப்பு தேவை குறையும் பொது வடக்கில் ராணுவத்தை குறைக்கலாம் என்று ராணுவ தளபதிகள் கூறுகின்றனர்.
3.இன்னும் ஏன் இராணுவத்துக்கு பயிற்சி வழங்குகிறீர்கள்?
மூன்று ராணுவ படைபிரிவுகளுக்கு பயிற்சி வழங்குகின்றோம். அந்த படைகளை மலே வுக்கு அனுப்ப தயார்செய்கின்றோம். தேவைப்பட்டால் அந்த படையினரை ஐ நாவுக்கும் அனுப்பலாம்.
4.வடக்கிலுள்ள கடற்படையை எப்போது குறைப்பீர்கள்?
கரையோரத்தை பாதுகாக்கும் பொறுப்பு ராணுவத்தினுடையது என்பதை விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொண்டனர். அதேநேரம் இப்போது கடற்படையை குறைக்க முடியாது. மீனவர்கள் பிரச்சினை குறையும்போது கடற்படையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
5.பயங்கரவாத தடைச்சட்டத்தை எப்போது நீக்குவீகள்?
தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் காலாவதியான சட்டம். இன்று இங்கு தீவிரவாதம் இல்லாவிட்டாலும், சர்வதேச நாடுகளின் தீவிரவாதம் காரணமாகவும், எதிர்காலம் கருதியும், பிரித்தானியாவில் உள்ளதைப் போல பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்குவோம்.
6.அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது?
அரசியல் கைதிகள் தொடர்பாக சுமந்திரன் என்னிடம் கேட்டார். அதன்படி அவர்களின் விடுதலையுடன் தொடர்புடைய அமைச்சர்களிடம் பேசியுள்ளேன். விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும்.
7.காணாமல் போனவர்களை எப்போது கண்டுபிடித்து தருவீர்கள்?
காணமல் போனவர்கள் இறந்தவர்களாகவே கருதப்படுகின்றார்கள். அதற்காக வருந்துகிறேன். ஆனாலும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் நலனுக்காக கிளிநொச்சியில் மத்திய நிலையம் ஒன்று அமைக்கவுள்ளோம். அவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பாக கல்வி அமைச்சு நடவைக்கை எடுக்கும்.
No comments:
Post a Comment