ஆசிரியர் தொழில் செய்வது எனது கனவு. ஆனால் என்னால் அந்த நோக்கத்தை அடைய
எனது ஆரம்பகால கல்வி முதற் கொண்டு பல விடயங்கள் ததையாகவே இருந்தன.
மலையகத்துக்கே உள்ள ஆசிரியர் பற்றாக்குறை எங்களது பாடசாலையையும் வாட்டி
வதைத்தது. மறுபுறம் வீட்டின் வறுமை. ஏதோ என்னால் முடிந்தவரைக்கும்
படித்து க.பொ.த உயர்தரத்தில் மூன்று பாடத்திலும் சித்தியடைந்தும்
விட்டேன். ஆனால் பல்கலைக்கழகம் செல்ல தகுதிகள் குறைவாக இருந்தன. ஆசிரியர்
பயிற்சி கலாசாலைகளுக்கு விண்ணப்பித்தும் தேர்வாகவில்லை. இதற்குமேலும்
இந்த தோட்டத்திலிருந்து என்ன செய்ய? உதவி செய்யவும் ஆட்கள் இல்லை.
கொழும்புக்கு போக முடிவெடுத்தேன். பத்தாயிரம் சம்பளத்துக்கு
கொம்யூனிகேசனில் வேலை செய்தேன் மூன்று வருடத்தில் எனது சம்பளம் 28ஆயிரமாக
அதிகரித்தாலும் வாழ்ககை தரம் உயர்தபாடில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் தான் உதவியாசிரியர்கள் பதவிக்கான அறிவிப்பு வந்தது.
நியமனமும் கிடைத்தது. இப்படியான பின்னணியில் உள்ளவர்களே ஆசிரிய
உதவியாளர்களாக அதிகம் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். ஆறாயிரம் சம்பளம்
என்றதும் என் குடும்பம் என்னை ஏளனமாக பார்த்து சிர்த்தது. வறுமை மீண்டும்
எட்டி பார்த்ததும் சிரிப்பை நிப்பாட்டிக்கெண்டார்கள். ஆறாயிரரம்
சம்பளத்துக்கு சாரிய கட்டிக்குட்டு போறாளுக என்று இந்த சமூகமும்
சிரித்தது. இந்த எனது வேதனை அவமானங்கள் அரசுக்கும் மலையக
பிரதிநிதிகளுக்கும் தெரிந்திரிக்க வாய்ப்பில்லை. லயத்தில் தான் பிறந்தேன்
என்று கூறுவார்கள் ஆனால் அவர்களின் கார் பெற்றோலுக்கு ஆறாயிரம்
செலவிடுவார்கள். எங்கள் மாத சம்பளமே அவ்வளவு தான்.
நான் படிக்கும் போது எனது பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தது.
எங்களால் அதனை அன்று நிவர்த்தி செய்ய முடியவில்லை. இன்று அரசியல்
காரணங்களுக்காக வழங்கப்பட்ட நியமனமாக இந்த ஆசிரியர் நியமனம்
வழங்கப்பட்டது. இதனால் ஆசிரியர் பற்றாக்குறை மலையகத்தில்
பூர்த்திசெய்யப்பட்டுவிட்தாக கருத வேண்டாம். இன்னும் பற்றாக்குறை
தீர்ந்தபாடில்லை. இல்லாவிட்டால் ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் பயிற்சி
கலாசாலை பயிற்சிக்கு அனுப்பலாம் தானே ஓர் ஆசிரிய உதவியாளர் தனது
உள்ளக்குமுறலை கூறினார்.
மலையகத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக
கடந்த மகிந்த அரசாங்கத்தில் க.பொ.த உயர்தரம் சித்தி பெற்றவர்களுக்கு
ஆசிரியர் நயமனம் வழங்கி வந்தது. அந்த வகையில் கடந்த ஆட்சி மாற்றத்துக்கு
முன்பதாக ஒரு தொகை ஆசிரியர்களுக்கு நிமனம் வழங்க திட்டமிட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்மான் தலைமையில் இந்நியமனங்கள் வழங்க
திட்டமிட்டிருந்தது. அதேநேரம் இக்காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஆசிரியர்
நியமனத்தின் போது சம்பளமாக 14ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்பட்டிருந்ததும்
குறிப்பிடத்தக்கது.
எதிர்பாராதமுகமாக மாறிய ஆட்டசி மாற்றத்தினால் இந்த நல்லாட்சி அரசாங்கம்
மலையக த்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு ஆசிரயர் உதவியாளர்
என்ற பெயரில் வழங்கியது. இதில் இன்னுமொரு முக்கியமான விடயம் ஆட்சியில்
இல்லாத போது ஒரு தொகை ஆசிரிய உதவியாலர் தியமனத்தை முன்னாள் அமைச்சர்
ஆறுமுகணும் வழஙகியிருந்தார்.
நியமனம் வழங்கிய நாள் முதலே பிரச்சினைதான். அதில் பலர் வேலையே வேண்டாம்
என்று ஓடிவிட்டனர். அந்தளவுக்கு மலையகத்தில் ஆசிரியர் தொழில்
மலிந்துவிட்டதாகிவிட்டது. ஆராயிரம் சம்பளம், தூரபாடசாலைகள், பின்தங்கிய
பாடசாலைகள் என பல பிரச்சினைகள் இருந்தாலும் ஓர் அரசாங்க தொழில்
செய்கின்றோம் என்ற ஒரு மன திருப்திக்காக மட்டுமே இவர்கள் வேலை
செய்கின்றனர்.
நியமன திகதியில் குழப்பம்
2015ஆம் ஆண்டு ஜீன் மாதம் 8ஆம் திகதி நியமன கடிதம் ஆசிரியர்
உதவியாளர்களாக நியமன கடிதம் வழங்கப்பட்ட போதும் வழங்கப்பட்டுள்ள
பாடசாலைக்கு செல்லும்போது அங்கே 2015 மே மாதம் 19 ஆம் திகதி பாடசாலையில்
சேர்ந்ததாக யையெழுத்திட வேண்டும் என அமைச்சின் சார்பில்
அறிவுறுத்ப்பட்டுள்ளது. எதற்காக ஒருமாதம் முன்னதாக நாங்கள் கையெழுத்திட
வேண்டும் எங்களது ஒருமாத சம்பளத்தை கொள்ளையடிக்கவா எனறு அவர்கள்
கேட்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டும்
பதிலளிக்க யாரும் இல்லை.
ஐந்து வருடத்துக்குள் பட்டம் அல்லது ஆசிரியர் பயிற்சி எப்படி?
நியமன கடிதத்தில் இபபதவி நிரந்தரமானது இல்லை. ஐந்து வருடகாலத்துக்குள்
நிமன கடிதத்தில் குறிப்பிட்டள்ள பாடத்தில் பட்டம் அல்லது ஆசிரிய பயிற்ச
சாண்றதழ் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை
பல்கலைக்கழகத்தில் அந்த பட்டத்தை பெற வேண்டும் எனவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக அரசு மானியமோஉதவியோ வழங்கப்படாது
ஆராயிரத்தில் எவ்வாறு பட்டப்படிப்பை பூர்த்தி செய்முடியும்? இதுமட்டும்
காரணம் அல்ல. வெளிவாரியாக பட்டபடிப்பை தொடருவதிலுள்ள மிக முக்கியமா
பிரச்சினைகளில் தங்களுக்கு வழங்கப்பட்ட பாடத்துடன் சம்மந்தப்பட்ட
பட்டபடிப்புக்கள் இல்லை எனவும் இருந்தாலும் அதனை தொடருவதற்கேற்ற தகுதிகள்
மற்றும் அனுமதி பரீட்சைகள் என்பனவும் பிரச்சினையாகவுள்து எனவும் ஆசிரிய
உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பட்டபடிப்பை முடித்தாலும் கூட
ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் இரண்டு வருட பயிற்சிக்கு பின்னர்
பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழே கட்டாயமானது எனவும்
வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்
உதவியாளர்கள் ஆசிரியர் பயிற்சி கலா சாலைக்கு செல்வதிலேயே ஆர்வம்
காட்டிவருகின்றனர்.
ஆசிரியர் பயிற்சியை பெறமுடியாத நிலை
ஆசிரிய உதவியாளர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு ஆசிரியர்
பயிற்சிக்கலாசாலையொன்றில் பயிற்சி வழங்கப்பட ஏற்பாடுகள் இருக்கின்ற
போதும். இவர்களால் பயிற்சியை பெறமுடியாது உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும்
போது பாடாசாலை அதிபர் குறித்த ஆசிரிய உதவியாளர் ஒருவரை பயிற்சிக்கு
அனுப்ப விருப்பம் தெரிவித்ததும் தமது பாடசாலையில் இவர் இல்லாவிட்டாலும்
தம்மால் மாணவர்களின் கல்வியை தொடர்ந்து கொண்டு செல்லமுடியுமென அனுமதி
வழங்க வேண்டும். அதிபர் குறித்த நபரை பயிற்சிக்கு அனுப்ப முடியாத நிலை
உருவாகும் பயிற்றப்படாத ஆசிரியர்களாகவே இவர்கள் மாணவர்களுக்கு பாடம்
கற்பிப்பார்கள். அதிபர் அனுமதியளித்தவுடன் வலய கல்வி பணிப்பாளர் இதனை
உறுதி செய்த பின்னர் மாகாண கல்வி பணிப்பாளருக்கு இக்கடித்ததை கொண்டு
செல்ல வேண்டும். அவர் தமது மாகாணத்தில் இருந்து குறித்த நபரை
பயிற்சிக்காக அனுப்ப விருப்பம் தெரிவித்து உறுதி செய்ய வேண்டும். ஆனால்
பாடசாலை அதிபர் அனுமதியளித்தும் வலயக்கல்வி பணிப்பாளர் அனுமதியளித்தும்
மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதியளிக்காது இருந்தால் என்ன செய்வது. இது
இந்த பிரச்சினனை தற்போது ஊவா மாகாணத்தில் நடந்து வருகிறது.
அதாவது கடந்த டிசம்பர் மாதம் ஆசிரியர் கல்வி கலாசாலை பயிற்சிக்காக
விண்ணப்பித்திருந்தவர்களுக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி
நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்க வேண்டுமென கடிதம் வந்துள்ளது. அதில்
மாகாண கல்வி பணிப்பாளர் கையெழுத்து தேவை எனவும்
குறிப்பிடப்பட்டிருப்பதால் கையெழுத்து வாங்க சென்றவர்களை மாகாண
கல்வியமைச்சர் கடுமையாக திட்டி உங்களுக்கு ஆசிரியர் பயிற்சி
கலாசாலைக்குக்கு செல்ல முடியாது நீங்கள் சென்றுவிட்டாள் யார் இங்குள்ள
பிள்ளைகளுக்கு பாடம் கற்பிப்பது? என இனி இக்கடிதங்களை கொண்டு இங்கு வர
வேண்டாம் எனவும் தெரிவித்திட்டுள்ளார். ஆனாலும் பயிற்சிக்கு செல்ல அணுமதி
கடிதத்துடன் சென்ற சில சிங்கள மற்றும் தமிழர்களுக்கு கையெழுத்து
போட்டுள்ளதாக ஆசிரியர் உதவியாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பாக பலமுறை மாகாண கல்வி பணிப்பலரை தொடர்புகொண்ண்டும்
பலனளிக்கவில்லை. அவர் மட்டக்களப்பு சென்றுள்ளார் என அலுவலங்களில்
உள்ளவர்கள் தெரிவித்தனர்.
பதில் கல்விப்பணிப்பாளர் டி.எம் ரத்நாயக்கவிடம் கேட்டபோது இது பற்றி
தன்னால் எதுவும் கூறமுடியாது பணிப்பாளரிடமே கேட்கவேண்டும் என
தெரிவித்துவிட்டு பணிப்பாளரின் இலக்கத்தை தந்தார். அதுவும்
பலனளிக்கவில்லை.ஊவா மாகாண தமிழ் பிரிவுக்குப்பொறுப்பாகவுள்ள உதவி கல்வி
பணிப்பாளர் திருமதி கலையரசியிடம் இது தொடர்பாக கருத்து கேட்க
அலுவலகத்துக்கு தொடர்புகொண்டபோது தொலைபேசி இலக்கம் பிஸியாகவே இருந்தது
எவ்விதபதிலும் இல்லை. கையடக்க தொலைபேசிக்கு தொடர்பு கொண்டும்
பதிலளிக்கவில்லை. குறித்த தரப்பில் மியாருமே பதிலளிக்காத போது ஆசிரியர்
உதவியாளர்கள் நிலை என்னவாகும்.செவ்வாய்க்கிழமை நேர்காணல் சனிக்கிழமை வரை
கையெழுத்து இடவில்லை. அத்துடன் இவர்கள் கடந்த நான்கு நாட்களாக கையெழுத்து
பெறுவது தொடர்பாகவும் விடுமுறையில் அலைந்து திரிந்துவந்துள்ளனர்.
கல்வியமைச்சின் பொறுப்பற்ற பதில்
இந்த விவகாரம் தொடர்பாக கல்வியமைச்சரை தொடர்பு கொண்டு கேட்டபோது
கல்வியமைச்சர் கூட்டத்தில் இருக்கிறார். என்ன கூறவேண்டும்? என்றவுடன்
விஷயத்தை கூறியவுடன் அமைச்சின் ஊடக செயலாளர் கல்ப இதுபற்றி ராஜாங்க
கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் தான் கேற்கவேண்டும் அவர்தான் இது
தொடர்பாக கவனிக்கிறார் என்று தெரிவித்தார். கல்வியமைச்சருக்கும் இதன்
நியமனத்துக்கு தொடர்பில்லை என்று கேட்டபோது ராஜாங்க அமைச்சரிடம்
கேளுங்கள் என்கிறார். இது கல்வியமைச்சின் பொறுப்பற்ற பதிலாக
பார்க்கப்படுகிறது.
அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு
ஆசிரியர் உதவியாளர்கள் அனைவருக்குமே பெருந்தோட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்.
இவர்களுடைய வாக்குகள் அனைத்துமே மலையக அரசியல்லவாதிகளுக்குத்தான். இந்த
பிரச்சினையை ஆதாரம்காக்கொண்டு சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல்
விளையாட்டுக்களையம் ஆரம்படுத்த்னர். ஊவா மாகாண சபையிலிருக்கும் பொது
வடிவேல் சுரேஷ் பத்தாயிரம் சம்பளம் வழங்கியமை. பின்னர் பாராளுமன்ற
உறுப்பினராக மாறிய பின்னர் பத்தாயிரம் நிறுத்தப்பட்டமை. இதொகா நியமனத்தை
தாம் வழங்குவதாக பிரித்து வழங்கியமை.சம்பளம் பத்தாயிரம் வழங்வகுதாக
அமைச்சரவை பாத்திரத்துக்கு போடப்பட்டுள்ளதாக ராஜாங்க கல்வி யமைச்சர்
கூறியும் இன்னும் நடவடிக்கை எடுக்காமை. தங்களால் மட்டுமே இந்த
பிரச்சினையை தீர்க்க முடியும் என்று மார்தட்டிக்கொள்ளும் அரசியல் வாதிகள்
மற்றும் இது கடந்த அர்சசங்கத்தில் செய்யப்பட்டது நாங்கள் இப்பொது இதனை
சரி செய்கிறோம் என தட்டிக்கழிக்கும் மலைமகன்கள் எல்லோரும் தங்களது
எதிர்கால அரசியலை குறிவைத்து கூறுபவைகளாகும் என்பது வெட்டவெளிச்சம்.
இந்த நியமனம் அந்த அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்டதுதானே...
இது தொடர்பாக தங்களது அமைச்சுக்கு வருவதில் எவ்வித பயனுமில்லை என்று
தெரிவுறித்து அறிக்கை அனுப்பிய ராஜாங்க கல்வியமைச்சர் ராதாகிருஷ்ணனிடம்
கேட்டபோது ஆசிரியர்பற்றாக்குறை நிலவுவதன் காரணமாகவே ஆசிரியர் பயிற்சி
கலாசாலைக்கு அனுமதிக்க முடியாது என தெரிவிக்கின்றனர். அனால் இதனை
தொலைக்கல்வியினூடாக வழங்க திட்டமிட்டுளோம். இன்று (வெள்ளிக்கிழமை)
இதற்கான விண்ணப்பபடிவம் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில்
வெளியாகியுள்ளது. அதற்கு அனைவரும் விண்ணப்பய்க்காலாம். இதற்கு
போகாவிட்டால் உங்க;து தொழில் இல்லாமல் போய்விடும் என சிலர் ஆசிரிய
உதவியாளர்களை குழப்புகின்றனர். தவறான வழிகாட்டல்களை வழங்குகின்றனர்,
ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் வழங்கப்படும் அதே பயிற்சி இந்த
தொலைக்கல்வியில் வழங்கப்படும் அதே இரண்டு வருடங்கள் தான். அதற்கான எல்லா
ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தொலைக்கல்வி என்ற விடயம் இன்று தான் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தை நாள் ஏன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு
முன்னேற்பாடுகள் திட்டங்கள் இல்லாமல் திடீரென தொலைக்கல்வியை தொடங்க
காரணம் என்ன என கேட்டபோது அதற்க்கு : எங்களது வலயங்களில் ஆசிரியர்
இல்லை. இவர்களையும் நீங்கள் பயிற்சிக்காக இரண்டு வருடங்கள்
அனுப்பிவிட்டால் சில பாடசாலைகளை மூடவேண்டி வரும் என மாகாண கல்வி
பணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே பாடசாலைகளை மூடாமலிருக்க நடவடிக்கை
எடுக்குமாறு கேட்டுக்கொண்டதிற்கிணங்க தொலைக்கல்வி ஆரம்பிக்கவுள்ளோம். இது
இவர்களுக்கு நஷ்டம் இல்லை அதே ஆறாயிரம் வழங்கப்படும். செய்யலாம்.
ஆசிரியர் கலாசாலை பயிற்சியைவிட தொலைக்களவு வலுவானதோர் பயிற்சியாக
இருக்காது என தெரிவிக்கப்படுகிறதே என்று கேட்டபோது... தேசியக்கல்வி
நிறுவனம்தான் தொலைக்கல்விக்கான சான்றிதழையும் வழங்குகிறது. இரண்டும்
ஒன்றுதான்.ஆனாலும் இது கொஞ்சம் குறைவாக இருக்கும் என்ன செய்வது
காலத்துக்கேற்ப மாறவேண்டிதான் இருக்கிறது என்கிறார்.
மாகாண கல்வி பணிப்பாளரின் கையெழுத்து பெறாதவர்கள் கொழும்பில் நடக்கவுள்ள
நேர்முகப்பரீட்சிக்கு செல்லலாமா என்று கேட்டபோது.. இல்லை போக முடியாது
போனாலும் உள்ளே எடுக்கப்பட்டார்கள். கையெழுத்து பெறாதவர்கள் போகவேண்டாம்
எனறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆறாயிரம் சம்பளத்தினை அதிகரித்து தருவதாக கூறினீர்களே அது தொடர்பாக என்ன
நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்ரு கேட்டபோது சம்பள அதிகரிப்பு தொடர்பாக
அமைச்சரைவிக்கு போடப்பட்டுள்ளது. தற்போது அது நிதி ஆணைக்குழுவில் அது
இருக்கிறது. அங்கு அனுமதி கிடைத்தவுடன் நியாயமாக கிடைக்கும்.
இவ்வாறு மலையகத்துக்கு வழங்கப்படும் நியமனங்களுக்கு மட்டும் பிரச்சினைகள்
இருக்கின்றன. எனவே இதெல்லாம் அரசியல்வாதிகள் தங்கள் தேவைக்காக
வழங்கப்படும் நியமங்களாக கருத முடியுமா? என்று கேட்டதற்கு கல்வி ராஜாங்க
அமைச்சர் ராதாகிருஷ்ணன். இதற்க்கு தன்னால் கருத்து கூறமுடியாது. ஏனெனில்
அந்த காலத்தில் ஆசிரியர்கள் தேவை என்பதை உணர்ந்து தான் அந்த அரசாங்கம்
செய்துள்ளது.இந்த நியமனம் அந்த அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்டதுதானே.
அதேநேரம் நாங்கள் வந்தபிறகுதான் கொடுக்க ஆரம்பித்தோம். இதில் சில
குறைபாடுகள் இருக்கின்றன. வர்த்தமானி அறிவித்தலை முறையாக போடவில்லை.
இந்தமாதிரியான பிரச்சினைகள் இருக்கின்றன.
இதெல்லாம் எவ்வளவு காலத்துக்குள் நிறைவுபெறும் என்று கூறமுடியுமா என்று
கேட்டதற்கு ஆசிரியர் பார்றாக்குறை முற்று முழுதாக தீர் க்கப்படும்போது
இந்தப்பிரச்சினைகள் வராது. என்றார் .
ஆகா இடஙக பிரச்சினைகள் தொர்ந்துகொண்டுவரும்அதற்கு இந்த அரசாங்கம் இல்லை
இனிவரும் அரசாங்கத்திலும் திட்டங்கள் இல்லை என்பதும் ஒரு கருத்தாக
கொள்ளமுடியும்.
தொலைக்கல்வியை தொடர முடியாத நிலை...
ஆசிரியர் பயிற்சிக்கு செல்லமுடியாதவர்கள் அதாவது அதற்கு
அனுமதிக்கப்படாதவர்கள் தொலைக்கல்விக்கு செல்லலாம் என்ற கட்டாயத்தில்
இருக்கும் சில ஆசிரிய உதவியாளர்களால் இந்த தொலைக்கல்வியை தொடரமுடியுமா
என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் வாரத்தின் ஐந்துநாட்கள் பாடசாலையில்
பிள்ளைகளுக்கு பாடம் கட்பிக்க வேண்டும். ஏனைய இரண்டு நாட்கள் அதாவது சனி
ஞாயிறு தினங்களில் தொலைக்கல்விக்கு செல்ல வேண்டும். இது இரண்டாம் கட்டமாக
நியமனம் பெற்றவர்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும்
ஏழு நாட்களும் அவர்களுக்கு வேலை என்ற கட்டாயம் உருவாகியுள்ளது. மாதம்
ஆறாயிரம் ரூபா என்ற சம்பளத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள இவர்களை
இன்று பயிற்சி அடிப்படையிலும் வேறுபாட்டை இந்த அரசாங்கம்
உருவாக்கியுள்ளது. இதற்கு முழு பொறுப்பும் யாருடையது?
சிலர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் சிலர்
தொலைக்கல்வி ஆசிரியர் என்ற வேறுபாடு உருவாகியுள்ளது. ஆசிரியர்
உதவியாளர்களானாலும் இவர்கள் அனுபவமிக்க ஆசிரியர் வேலைகளுக்கு இணையாக
கடமைகளை செய்வதாகவும் சில அதிபர்கள் கூறினாலும் இவர்களுக்கு அனுபவமிக்க
ஆசிரியர்களினால் சில சந்தர்ப்பங்களில் தரக்குறைவான வார்த்தை பிரயோகங்கள்
உதாரணமாக ஒண்ணுமே தெரியாமல் எங்கயோ கிடந்ததெல்லாம் வந்து நம்ம உசுர
வாங்குது இதெல்லாம் படிச்சு கொடுத்து புள்ளைக உருப்பட்ட மாதிரிதான் என்ற
வாரத்திற் பிரயோகங்கள் சில ஆசிரிய உதவியாளர்களை வேலையை விட்டு வெளியேறும்
நிலைக்கும் உள்ளாக்கியுள்ளது. இந்தமாதிரியான பல சந்தர்ப்பங்களில்
மட்டம்தட்டப்பட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களை மேலும் பாதிக்கும் நிலைதான்
இந்த ஆசிரிய பயிற்சி மறுப்பு பார்க்கப்படுகிறது. இவர்கள் நாளை
ஆசிரியர்கள் இவர்கள்தான் நாளைய உலகத்தை உருவாக்கப்போகின்றவர்கள் எனபதை
மனதிற்கொண்டு இவர்கள் செதுக்கப்படவேண்டும். இது அரசின் கடமை.
அலைக்கழிப்புக்கு பின்னரும் இந்த வேலை தேவைதானா?
ஆசிரியர் பயிற்சி வழங்குவதாக கூறித்தான் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
இரண்டரை வருடங்கள் கடந்த நிலையில் இன்னும் பயிற்றப்படாத ஆசிரியர் என்ற
வகையில் மாணவர்களுக்கு பாடங்களை நடத்திக்கொண்டிருக்கின்ரறார்கள்
ஊழியர்களில் பெரும்பான்மையானோர் தமது தொழி்ழ் மீது அக்கறையின்றி செயற்பட
இது போனற சம்பவங்களும் காரணமாக இருக்கிறன என ஆசிரிய உதவியாளர்
தெரிவித்தார். அவர் தொழில் மீதுள்ள பற்றையும் தனது சமூகத்துக்கு கல்வியை
வழங்கவேண்டும் என்ற நோக்கமும் இவரது வார்த்தைகள் மூலம் வெளிப்படுகிறது.
மாதம் ஆறாயிரத்தை தாண்டி செலவு செய்து கடமை செய்கின்றனர். இவர்களும்
இல்லாவிட்டால் மலையகத்தில் நிலவும் ஆசிரியர் பர்ராக்குறைக்கு அரசின்
திட்டம் என்ன எனவே அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என உதவி ஆசிர்யர்களகா
நியமனம் பெற்றவர்களுக்கு உரிய அந்தஸ்து உரிமை எனபன கிடைக்க வேண்டும் என
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசெப் ஸ்டாப்களின் தெரிவிக்கிறார்.
மேலும் இந்த ஆசிரியர் பயிற்சி தொடர்பாக ஊவா மாகாண அரசசேவை ஆணைக்குழுவிடம்
கேட்டபோது அரச சேவை நியமனம் பதவி உயர்வு தரமுயர்வு பற்றி மட்டுமே நாங்கள்
பார்ப்போம் அதற்கான உதவிகளை நாம் செய்வதில்லை. இது தொடர்பாக மாகாண கல்வி
பணிப்பாளர் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கல்வியமைச்சில் விண்ணப்பம்
கல்வியமைச்சின் உத்தி யோகா பூர்வ இணையதளமான http://www.moe.gov.lk
என்றார் இணைய முகவரியில் சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்பதாகி
பெற்றுக்கொள்ள முடியும். தேசிய கல்வி நிறுவகத்ேினூடாக பிராந்ேிய
நிலையங்களில் வாரயிறுதி நாட்களில் நடத்ேப்படும் ஆசிரியர் கல்வி
பாடநநறிக்கு ஆசிரியர்கலளத் தெரிவு செய்தல் – 2017-2018 எனக்குறித்த
விண்ணப்பபடிவம் அமைந்துள்ளது. எப்போது அனுப்ப வேண்டுமென
குறிப்பிடப்படவில்லை.
ஏ.ஜெயசூரியன்
No comments:
Post a Comment