பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். எனினும் இது பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சட்டம் என திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பிணை முறி தொடர்பாக மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பிக்க காரணம் என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக உள்ளார்ந்த விடயங்கள் எனக்கு தெரியாது. அந்த இடத்தில் இரண்டு நிலைப்பாடுகள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ச இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்கிறார்.ஏற்கனவே இருக்கும் நடைமுறையின் அடிப்படையில் தான் இதனை செய்ததாக மத்திய வங்கி கூறுகிறது. இதில் எனக்கு எதுவும் தெரியாது. முழுமையாக அறியாமல் என்னால் கருத்து கூறமுடியாது.
கடந்த அரசாங்கத்தின் திருடர்கள் பற்றி பேசிய நல்லாட்சி அரசாங்கம் தங்களுடைய திருடர்களை பாதுகாக்க நினைக்கிறதா?
இல்லை அப்படி பாதுகாக்கவேண்டுய அவசியம் இல்லை. டொப் டென் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில்இருக்கும் அமைச்சருக்கு எதிராகவும் ஊழல் முறைப்பாடு செய்யப்பட்டது. இன்னும் விசாரணைகள் ஆரம்பிப்பதாக தெரியவில்லை.தாங்கள் கூறும் குற்றத்தை நிரூபிக்க சாட்சி இருக்குமானால் அதனை அவர் பயமில்லாமல் செய்ய முடியும். நல்லாட்சி அரசாங்கம் என்பதற்காக வேறுபாடு காட்டப்பட்டது. எனவே யார்மீது வேண்டுமானாலும் குற்றம்சுமத்த முடியும். சுமத்தப்படும் குற்றங்களில் எதற்கு சாட்சி இருக்கின்றது என்பதை ஆராய்ந்து அது தொடர்பாக குறித்த நிறுவனம் தேவையான நடவடிக்கை எடுக்கும். பிணை முறிவிவகாரத்தில் குறித்த நிறுவனம் நடவடிக்கை எடுக்கும். மேலும் ஈங்கு குறிப்பிடப்படும் நபர் தொடர்பாக சாட்சிகள் இருப்பின் முன்னிறுத்தலாம். ஆனால் எல்லோருக்கும் முறையிடும் உரிமை இருக்கிறது.
மஹிந்த காலத்தில் நடந்த கொள்ளைகள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றனவா?
நல்லாட்சி என்பதால் வேறுபாடு இல்லை. சட்டத்தின் படிதான் இங்கு நடக்கிறது. சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமமானவர்களே. பிரபலமான இவர்கள் முறையிட்டுள்ளார்கள் என்பதால் சட்டகொள்கைகளுக்கு முரண்பட்டு நடக்க முடியாது. முன்னாள் அரசங்கம் தொடர்பாகத்தான் அதிகமான முறைப்பாடுய்கள் வந்தன. ஆனால் அவற்றை ஒரேடியாக விசாரித்திருந்தாலும் அது அரசியல் தேவைக்காக நடந்ததைப்போல் ஆகியிருக்கும். ஆனால் உண்மையான தேர்வை பெற்றுவிக்கவேண்டியது குறித்த நிறுவனங்களே.
அதிகார பகிர்வு தொடர்பாகவும் இன்று அதிகமாக கதைக்கப்படுகின்றதே. முன்னாள் ஜனாதிபதி 13+ பற்றி கதைத்தார்.நல்லாட்சி அரசாங்கம் அதற்கும் அப்பால் சென்று அதிகாரத்தை வழங்க போகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பான உண்மை என்ன?
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சட்டமாக 13 ஆவது திருத்தம் அமைகிறது. இதுவே உண்மை. 13 ஆவது சீர்திருத்தம் இரண்டு பிரிவுகளால் பாதுகாக்கப்டுகிறது. அதற்கு உயிர்வழங்கப்படவில்லை.முன்னாள் ஜனாதிபதி இந்த இரண்டுக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தன. ஆனால் 13 ஆவது திருத்தத்திலுள்ள ஏனைய பிரிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது குறித்த இரண்டு பிரிவுக்கும் அதிகாரங்களை வழங்க எல்லோரும் ஒன்றிணைந்துள்ளனர்.
அதாவது 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தவா?
எல்லோரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். 13 வைத்து திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வரப் பிரசாதங்களுக்ளையும் வலுவூட்டவேண்டும். இதற்காக முன்னாள் ஜனாதிபதி 13+ என்கிறார். 13க்கும் அப்பால் சென்றும் அவர் கூவினார். செனட் சபையின் மூலம் இதனை முன்னோக்கி கொண்டு செல்லலாம் என்றும் அவர் இருந்தார். மாகாண சபைகளின் தலைவர்கள் இந்த செனட் சபைக்குள் நுழையும்போது பாரளுமன்றத்தால் அனுமதிக்கப்பட் ட செனட்டிலும் அது அனுமதிக்கப்படவேண்டும்.அதற்கு மாகாண சபையின் முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கும். அதற்கு அதிகரா பரவலாக்கம் என்பது அவசியம்.
அதிகார அபரவலாக்கம் செய்ய முடியுமா? மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்குரிமை வேண்டுமென கூறுகின்றார்களே?
ஆம், 13 ஆவது திருத்த வந்தவுடன் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்துக்கு செல்லவேண்டி ஏற்பட்டது. அதில் நாட்டின் ஒருமைப்பாடு பற்றி வரையறை செய்யும்போது 13 ஆவது திருத்தம் மிகவும் தீவிரமாக இருக்கிறது. இதற்கு ஒரு திருத்தம் கொண்டு வந்து இதனை மாற்றவேண்டும் என தீர்ப்பளித்தது. அப்படி மாற்றுவதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கு வேண்டும் என்று கூறப்பட்டது . இதனால் தான் அரசியலமைப்பை மாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்கள். இவற்றை விட அதிகாரத்தை பிரிப்பதற்காக ஒரு பகுதியினரும் தம் பங்கிற்கு வரையறை செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கும் அதனுடன் சர்வஜன வாக்குரிமைக்கும் செல்லவேண்டும் என கூறினார்கள்.
இது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா?
இன்னும் முடுவுகள் எடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை மட்டுமே நடக்கிறது. அரசியலமைப்பு எதுவென்றுகூட இன்னும் எமக்கு தெரியாது. அரசியலமைப்பு தொடர்பான பேச்சுக்குவார்த்தைகள் தொடர்கின்றனர்.
புதிய அரசியலமைப்பு திடீரென உருவாக்கப்பட்டதாக எதிர்கட்சியால் கூறப்படுகின்றதே?
இல்லை. இன்னும் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஹாகுறைந்தது அரசியலமைப்புக்கான வரைவுக்கூரை இன்னு தயார்செய்யப்படவில்லை. வரைவைகூட தவறான வரையறைக்குற்படுத்தி விமர்சிக்கின்றார்கள். மிகவும் ஆழமான ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தப்போய் தான் இப்படியான குழப்பத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.எல்லா கருத்துக்களும் திட்டங்களும் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்படுமென கூறமுடியாது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடு பூராகவும் அரசியல் நிலைப்பாட்டை பிரச்சாரம் செய்து வருகின்றதா?
ஆம் இது பிழையான விடயம். அரசியலமைப்புக்கும் வரைவுக்குமிடையிலான வித்தியாசம் தெரியாமல் பிரசாரம் செய்கின்றனர். அவர்களுக்கு தெரியும் இது அரசியலமைப்பு இல்லை. இது அரசியலமைப்பு வரைவு.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி புதியதொரு கட்சியில் போட்டியிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சிக்கு பெரிய பிரச்சினையாக இருக்குமா?
அவர்கள் ஐக்கிமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் தான் பாராளுமன்றத்துக்கு வந்தார்கள். வெற்றிலைபோல் வந்தவர்கள் ஒன்றாக இருக்கவேண்டும். வீரவன்ச பிரிந்து செல்லப்போகிறார். சுதந்திரக்கட்சியின் செயலாளரால்தான் தேர்தல் ஆணையாளருக்கு இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என ஆறுமுகம் செய்துவைத்தார். அதனால் அரசியலமைப்பு ரீதியாக அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. தங்கள் விருப்பத்துக்கு செல்ல முடியுமா? வேறு இடத்தில் உட்கார முடியுமா என்பதை பாராளுமன்றமும் தேர்தல் ஆணையாளரிடமும் கட்சியின் செயாளரிடமும் தெரிவிக்க வேண்டும்,
கட்சியிலிருந்து விலகினால் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் நீக்கப்படுமா?
நிச்சயமாக பதவியிலிருந்து நீக்க முடியும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிர்வரும் தேர்தல் சாதகமாக அமையுமா?
அரசியலில் 24 மணித்தியாலம் என்பதுகூட நீண்ட காலம்தான் அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரகீத் சம்பத்
நன்றி மவ்பிம
தமிழில் சூரியன்
No comments:
Post a Comment