Monday, May 1, 2017

தொலைபேசி சாபமல்ல அது ஒரு வரம்...

வெல்லவாய-கொழும்பு பிரதான வீதியின் தனமல்வில நகரிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு தனி வீடு. அந்த வீட்டின் முற்றத்தில் மூன்று சிறுமிகளும் தாயும் விருந்தினர்களை வரவேற்க காத்திருக்கின்றனர். அனைவருக்கும் முகத்தில் பூரிப்பு கோடிஸ்வரர்களான மகிழ்ச்சி அது.

உலகத்தில் எல்லோரும் தொலைபேசி பாவிக்கிறார்கள் ஆனால் அதனால் பல பிரச்சினைகள் தான் வந்திருக்கிறது. சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் அதனை ஒரு பிரச்சினையாக தான் பார்க்கின்றனர். ஆனால் அதனூடாக பணம் கிடைத்தால் தொலைபேசி சாபமல்ல. அது ஒரு வரம் என அனைவரும் கருதுவர். அப்படித்தான் இங்கும் நடந்திருக்கிறது.

காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்  என ஷேக்ஸ்பியர் தனது கதைகளிலும் நாடகங்களிலும் கூறுவதனை போல இங்கு ஒரு ஆசிரியர் தனது மூன்று பெண்பிள்ளைகளுக்கும் நல்ல கல்வியறிவையும் அவர்களுக்கு தேவையான சீதனத்தையும் தேடிவிடவேண்டுமென எண்ணத்தால் வேகமாக செயற்பட நினைக்கிறார். அதற்காக தனது கணவரை வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கிறார். மூன்று பெண்பிள்ளைகளோடு தனியாக தனது ஆசிரியர் தொழிலையும் பி.ஏ.குசுமாவதி நேர்த்தியாக செய்துவருகின்றார். கணவனின் உழைப்பும் தனது உழைப்பும் தங்களது பிள்ளைகளின் கல்விக்கு போதுமானதா என்று பல தடவை யோசித்தாலும் அவர்களால் அதற்குமேல் ஒன்று செய்யமுடிவதில்லை.


கல்வியில் சிறப்பான திறமைகளை வெளிக்காட்டும் பிள்ளைகளில் இரண்டுபேர்  வைத்தியர்களாகவேண்டும் என்ற கனவோடு இருக்கின்றனர். மற்றுமொருவர் பொறியியலாளராக வரவேண்டும் என்ற எண்ணத்துடன் தங்களுடைய அறைகளில் இது வைத்தியர் ஒருவரின் அறை இது பொறியியலாளரின் அறை என எழுதி ஒட்டியுள்ளனர். அந்தளவுக்கு தனது எதிர்கால லட்சியத்துடன் பின்னிப்பிணைந்துள்ளனர்.

தனது கணவருடன் பேச மாதாந்தம் 2ஆயிரம் ரூபா தொலைபேசிக்கு தேவைப்படுவதாக கூறும் குசுமாவதி தனது பிள்ளைகளுக்கு அப்பாவுடன் பேச வேண்டுமென்றாலும் IDD என்பதால் தொலைபேசியை வாங்கி வைத்துக்கொள்வேன் என்கின்றார். இவ்வாறு தினமும் தொலைப்பேசியுடன் இணைத்திருக்கும் இவர்களின் வாழ்வில் ஒரு மாற்றம் திடீரென நடந்தது. ஆசிரியர் குசுமாவதிக்கு ஒரு அழைப்பு தொலைபேசியினூடாக வருகிறது. அதில் மொபிடெல் கேஷ் பொனென்ஷா மூலம் நீங்கள் சுமார் ஒன்றரை கோடி பெறுமதியான மொன்டெர்டோ ரக ஜீப் ஒன்றை வென்றுள்ளீர்கள் என்று கூறப்படுகிறது.
குசுமாவதி ஆசிரியரும் அவரது பிள்ளைகளும் 

மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று அறியாத ஆசிரியர் குசுமாவதி தனக்கு மிக நெருக்கமான ஆசிரியை ஒருவரிடம் மட்டும் இந்த தகவலை பகிர்ந்துகொள்கிறார். குசுமாவதிக்கு வாழ்த்துக்கள் கூறிய அவர் இது உண்மையாக இருக்குமோ இல்லையோ என சந்தேகத்தை தீர்த்துக்கொண்டு பின்னர் அனைவரிடமும் கூறுவோம் என்கிறார். அதன் பின்னர் கொழும்பிலுள்ள மொபிடெல் அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு உறுதிசெய்து கொண்டு பின்னர் அதிபருக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் மொபிடெல் மூலம் கோடீஸ்வரானதை கூறுகினார்.   ''இது உனது பொறுமைக்கு கிடைத்த பரிசு'', நல்லவருக்குத்தான் கிடைத்துள்ளது'' என ஆசிரியர்கள் கூறியதாக குசுமாவதி கூறினார். முழு பாடசாலையும் தன்னை வாழ்த்தியது. தன்னை சார்ந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக கருதினார்கள்.

இதுவரை காலமும் தான் பாவித்த மொபிடெல் இன்று எனக்கு விடுதலையை தந்துள்ளது. எனது பிள்ளைகளது கல்வி, எதிர்காலம் பற்றிய கவலை இல்லை. ஆறு வருடகாலமாக அபுதாபியில் இருக்கும் கணவரை நாட்டுக்கு வரவழைத்து சொந்தமாக தொழில் செய்யகூறுவதோடு பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ முடியும். எனது கணவருக்கு விடயத்தை கூறும்போது கண்ணீரை அடக்க முடியவில்லை. இறைவர் தமக்கு கொடுத்த பரிசாக இதனை கருதுகிறேன். இனி வெளிநாட்டில் இருந்து கஷ்டப்படவேண்டாம் என கணவருக்கு கூறிவிட்டேன் ஆகஸ்ட் மாதம் வரும் கணவர் இனி வெளிநாட்டுக்கு செல்லமாட்டார் பிள்ளைகளுடன் தங்களது நேரத்தை செலவிட முடியும் என மகிழ்ச்சியாக கூறுகின்றார் குசுமாவதி.

இதுவரை காலமும் மொபிடெல் பாவிக்கும்போது அதனால் எந்தவிதமான பயனும் இல்லை என்றே நாம் கருதினோம் அதனை ஒரு தொலைத்தொடர்பு சாதனமாக மட்டுமே கருதினோம். ஆனால் இன்று மொபிடெல் இருவனம் ஒரு முதலீட்டுக்கான நிறுவனம் என்று கூறுவதில் பெருமையடைகிறேன்.மர்றுய ஆசிரியர்களுக்கும் ஊரில் உலா ஏனைய மக்களுக்கும் மொபிடெல் மீது நம்பிக்கை உருவாகியுள்ளது.நான் மட்டுமல்ல என்னை சார்ந்து எனது குடும்பமும் வெற்றியடைந்துள்ளார்கள்.

மொபிடெல் பொனென்சா மூலம் எனக்கு கிடைத்த மொன்டெரோ ரக ஜீப் வண்டி அம்பாறையில் நடந்த ஒரு பிரம்மாண்டமான நிகழ்வின் மத்தியில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் மூலம் இலங்கை முழுவதும் அறிந்த ஒரு பெண்மணியாக நான் அறிமுகமானேன். எனக்கு ஜீப் ஒன்றை போக்குவரத்துக்காக பயன்படுத்துவதை விட அதனால் வரும் பணம் எனது பிள்ளைகளின் கல்விக்காக தேவைப்பட்டது. அதனால் அந்த ஜீப்பை நான் விற்று எனது பிள்ளைகளின் கல்விக்காக செலவிடவுள்ளேன்.

ஏ.ஜெயசூரியன்

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...