Monday, May 1, 2017

இராணுவத்திடம் ஒப்படைத்த எனது பிள்ளை எங்கே?


  • பிள்ளைகளை தேடி எட்டு வருட போராட்டம் 
  • வீதியிலிறங்கி போராடியும் கண்டுகொள்ளாத அரசாங்கம்
  • செய்வதறியாமல் தவிக்கும் மக்களை உளவியல் ரீதியாக தாக்குவது தான் திட்டமோ?
  • கிளிநொச்சியில் பத்துதாய்மார்கள் உயிரை மாய்க்கவுள்ளனர்
  • தீக்குளிக்கவும் தயார்

மே மாதம் இலங்கையருக்கு வரலாற்றில் மறக்கமுடியாத நாட்களாக
பதியப்பட்டுவிட்டது. உள்நாட்டு யுத்தத்தில் வெற்றியடைந்துவிட்டோம் என
ஒருபக்கம் சந்தோசமடையும் ஒரு தரப்பு. மறுபக்கம் இழப்புக்களுக்கு மட்டுமே
முகம் கொடுத்து நடைபிணமாய் திரியும் ஒருதரப்பு என இருதரப்புபிரச்சினைகளு
சீர்துக்கிபார்கவைக்கும் மே மாதம் நாளை ஆரம்பிக்கிறது.
 உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு எட்டு வருடமாகியும்
தமிழர்களின்  கண்ணீரால் ஒவ்வரு மேமாதமும் தமிழர்களின் கண்ணீர் வடியும்
மாதமாக மாறிவிடும் ஆனால் இந்த முறை வீதியையும் நனைக்கிறது கண்ணீர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தங்களது உறவுகளை காண்பிக்கம்படி கேட்டு
வீதியை நனைத்துவிட்டுள்ளன.


இயக்கத்தில் ஒருநாள் இருந்திருந்தாலும் பரவாயில்லை எங்களிடம்
சரணடையுங்கள் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என இறுதிகட்ட யுத்ததிலனபோது
இராணுவம் கூவியழைத்தபோது தமது உறவுகளின் உயிர்களை பாதுகாக்க
நம்பியனுப்பிவைத்த உயிரகள் எங்கே? இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வைத்து
பாதுகாப்பான இடத்துக்கு ஏற்றிச்செல்கிறோம் என நினைக்கவைத்து வாகனங்களில்
ஏற்றப்பட்ட உயிர்கள் எங்கே? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? உயிருடன்
இருந்தால் எங்கே எப்படி இருக்கிறார்கள்? இறந்துவிட்டால் எப்படி
இறந்தார்கள் என்று மட்டும் கூறிவிடுங்கள் என்ற ஒரே விடயத்துக்காக வடக்கு
கிழக்கு மக்கள் ஒன்று திரண்டுள்ள்னர்.

கிளிநொச்சி கற்தசுவாமி கோயிலுக்கு அருகிலும்சுமார் 68 நாட்களாகவும்
முல்லைத்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்னால் சுமார் 52 நாட்களாகவும்
மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் 47 நாட்களாகவும் காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகள்ின் ஆர்ப்பாட்ம் இரவு பகலாக நடக்கிறது.இன்னும் பல
பகுதிகளிலும் நடக்கிறது. ஆனால் இன்னும் அரச தரப்பிலிருந்து எவ்வித
பதிலும் வழங்கப்படவில்லை.

முரளிதரன் மருதங்கேணி
எனதள தம்பியை தேடுகிறேன். பெயர் வினோதரன்.அவர்  2009  மே மாதம் 17 ஆம்
திகதி இராணுவகட்டுப்பாட்டு பகுதிக்கு வந்ததாக ஓமந்தைக்கு சென்ற அக்கா
கூறினார். இவரைப்போல எத்தனையோ பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் எங்கே
இருக்கின்றனர். அவரகளுக்கு என்ன நடந்தது என்ற விபரங்கள தருமாருதான்
நாங்கள் கேட்கிறோம்.

கடந்த அரசாங்கமோ அல்லது 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி மாற்றப்பட்ட
நல்லாட்சி அரசாங்கமோ ஏன் இந்த தகவலை தர மறுக்கின்றன? கிளிநொச்சி வவுனியா
திருகோணமலை மருதங்கேணி என பல இடங்களில் காணாமல் போனோர் உறவுகள் வீதியில்
இறங்கி போராடுகின்றனர். இருக்கு இல்லை இதில் எதையாவது கூறி எம்மை பார்க்க
அனுமதி வழங்குவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது?
எனது தம்பியை நானும் எனது அப்பாவும்  இப்போது தேடுகிறோம் எனக்கு பின்னர்
யார் தேடப்போகிறார்கள். காணாமல் போனவர்களது அடையாளங்கள்
அழிக்கப்படுகின்றன. இந்த அரசாங்கம் காணாமல் போனவர்களது விபரங்களை
வெளியிடவேண்டும். சாட்சியங்கைள மறைத்து ஆதாரங்களை மறைக்க வேண்டும்
என.அரசாங்கம்  நினை்கின மைத்திரியின் அரசாங்கமானாலும் மகிந்த
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர்   துணை
புரிகின்றனர்.

எதிர்கட்சியின்தலைவர் என்ற பதவியுடன் நாட்டில் மூன்றாவது இடத்தில்
இருந்தும் ஒன்று கூட சம்பந்தன் போராட்டம் செய்யும் மக்களிடமோ
அரசாங்கத்திடமோ பேசுவதி்லை. மருதங்கேணியில் நடந்த ஒரு கட்டிட திறப்பு
விழாவுக்குவந்தவர்கள் ஓர் நாள் இந்த மக்களின் போராட்டத்துக்கு வந்தார்கள்
ஆனாலமே் முக்கியஅரசியல்வாதிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. தங்களுடைய
பிள்ளை இன்னு்் உயாரோடுதான் இருக்கிறது என்ற நினைப்பில்தயா இந்த உறவுகள்
போராடுகின்றன. இதற்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டும்.

வடமராட்சி கிழக்கில் மாத்திரம் 240 பேர் காணாமல் போயுள்ளதாக
உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்னறன. அதுகூட மக்களுககு
பிரச்சினைக்குறியதாக இருக்கின்றது. சிலர் பதிவுகழை செய்தள்ளனர். இன்னும்
சிலர் பதிவு செய்வதால் ஒன்றும் பயனில்லை என விரக்தியில்
இருக்கின்றனர்.இ்னும் சிலர் பதிந்துவிட்டு மரணசான்றிதழையும்
நட்டஈட்டையும் வாங்கிகொண்டுள்ளனர். பிள்ளையின் உயிருக்கு ஒருலட்சம் ரூபா
நட்டஈட்டை எங்களால் பெறமுடியாது உயிர்தான் வேண்டும் என்றார்.

வள்ளிமயில் கிளிநொச்சி
கிளிநொச்சி செல்வாநகரைச்சேர்ந்த வள்ளிமயில் எனும் நான்கு பிள்ளைகளின்
தாய் முத்தமகனை தொலைத்து கண்ணீர் வடிக்கிறார் வீதியின் ஓரத்தில்.
காணாமல்போன மகனை நான்தேடுகிறேன்.விமல்ராஜ் சிவலிங்கம் எனது மகனின் பெயர்
இறுதியுத்த காலத்தில் இடம்பெயரும்போது சிதறுபட்டுபோனது எனது குடும்பம்.
அதில் 14 வயதான எனது மகன் வட்டுவாகல் பாலத்தடியில் வைத்து வாகனத்தில் ஏற
நின்ற கூட்டத்தோடு நின்றதாக ஓர் ஐயா கூறினார். அவர் பேசியதற்கு எனதுமகன்
எவ்வித பதிலும் கூறவில்லை என்றும் என்னிடம் கூறினார். நான் அவரை
காணவில்லை ஆனால் எனக்கு தெரிந்தவர்கள் கண்டுள்ளனர். அவர்
எங்கயாவதுஇருப்பார் என நான் நம்புகிறேன். அந்த பிள்ளை எப்படி
ஏங்கிகொண்டிருக்கம் நான் உண்ணும்போது கூட தனது பிள்ளை சாப்பிட்டதா
இல்லையா எப்படியெல்லாம் ஏங்கிக்கொண்டிருக்கம்.

இது வரை அரசங்கமோ அரசசார்பற்ற நிறுவனங்களிளோ தனது பிள்ளையின் பெயரை
பயன்படுத்த எந்வித உதவிகளையும் பெறவில்லை. பதியவும் இல்லை. இன்னும்
கூலிவேலை செய்து தான் நாங்கள் வாழுறம். அவன் உயிரோடு இருக்கிறான்
எப்போதாவது வருவான். எனக்கு என்ற பிள்ளைதான் வேண்டும் இன்று
இருந்திருந்தால்.அவருக்கு 22 வயது. ஏனைய பிள்கைள் மூன்றுபேரையும்
கூலிவேலை செயது தான் படிப்பிக்கிறேன். காணாமல்போனமகன் தான் மூத்தவன் 14
வருடங்களாக வளர்த்த மகன் எனக்கு வேணும். எங்க இருக்கான் என்றத அரசாங்கம்
கூறவேண்டும் அது வர நான் இந்த வீதியில் நின்று போராடுவேன் என்கின்றார்
வள்ளிமயில்.

தெய்வேந்திரன் கிளிநொச்சிக்கு யாழ்ப்பானத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்.எனது மகன் காலில் காயம்பட்டு இருக்கும்போது தன்னுடன் தான் இராணுவம் ஏற்றிக்கொண்டு சென்றது என மகனோடு ஒன்றாக இருந்த ஒருவர் கூறினார்.வைத்திசாலையில்  அவர் தனது மகனுக்கு அரகில் காயம்பட்டு  இருந்தவர் என்றோடு பெயர் விபரம் எல்லாம் சொன்னாங்கள். அஇதுதான் சாட்சி
அதுற்கு பிறகு என்ர மகன் எஙகபோனான் என்ன ஆச்சி என்று ஒன்றுமே தெரியவில்லை. 
ஆனால் உயிரடோடுதான் இருக்கிறான் என்பதை இந்த த ந்தையின் மனதுக்கு தெரியும். அவனத்ததிரப்பி தாங்காே.

மகன் காணாமல் நாள்முதல் நான் ஏறாத கோயில் இல் எல்லா முனுக்கும் வேல்
வாங்கி கொடுத்தேன். ஒவ்வொருநாளும் கோயிலுக்கு போய் அழுதுவிட்டுதான்
வருவன். என்ர மனைவி பிள்ளை வீடுவந்து சேரமட்டும் கோயில் பூசைமளில்
கலந்துகொள்ளவும்மாட்டார். சாகும வரைக்கும் போராடுவேண்.. அதற்குள்
கிடைக்கவில்லையென்றால் செத்துதான் போகணே்டும். எங்க இருக்கான் என்றத
சொல்லுங்கோ என்று தான் நாங்கள் கேட்கிறோம் என கண்ணீர் வடிக்கிறார்.
முள்ளிவாக்கால் பகுதியில் வசிக்கும் ஓர் சிறுமி பிளாஸ்டிக்
சட்டிபானைகளால் சமைத்து விளையாடி கொண்டிருந்தார்.  பேச்சு கொடுத்தபோது
கொஞ்சம் பொருங்கோ பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வாறன் என ஒரு
தாயின் மன நிலையில்  முதிர்ச்சியுடன் கூறினாள்.இந்த வார்த்ததைகள் அவளது
தாய் சிறப்பாக அவளை பார்த்துக்கொள்கின்றாள் எனபதையும் அன்பான ஓர்
குடும்பம் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியது.   பச்சை இலைகள்
சிலவற்றுக்கு நீரை ஊற்றிவிட்டு வந்த அந்த சிறுமியிடம் பிள்ளைகளுக்கு
சாப்பாடு கொடுத்து முடிந்துவிட்டதா என கேட்க அவளது தோழி ம்ம் சாப்டம்
என்றாள்.

ஸ்கூல் லீவு என்தால் அன்று நீண்ட நேரம் விளையாட்டுக்கு அவளின் தாய் நேரம்
தந்திருந்ததாக பேசிக்கொண்டிருந்தவளிடம் அப்பா எங்க என கேட்க அப்பா
தடுப்பில இருக்கதா அம்மா சொன்னதாக அவள் தெரிவிக்கும் போது அது வரை அந்த
பிஞ்சு முகம் னெபாழிவிழந்தது. பிறந்தது முதல் அப்பாவைக்கண்த அந்த முகம்
அப்பாவை படத்தில்தான் பார்த்துள்ளது. அப்பா எங்கே என பலமுறை
கேள்விக்கணைகளை தொடுத்தாலும்  அதற்கு பதில் தடுப்பில இருக்கார் என்று
மட்டுமே சிறுமியின் தாய் கூறிக்கொண்டே இருப்பாராம். தடுப்பு எங்க இருக்கு
என நேரடியாக கேட்டு சிறுமிக்கு அதற்குமேலும் மனதில் தெளிவை  ஏற்படுத்த
விரும்பவில்லை. விளையாட்டாகவே மண்ணில விளையாடினா அம்மா அடி்பாங்கள் போல
என கேட்க அப்பாதடுப்பில இருக்கதால அடிக்ககூடாது என அவளது அம்மம்மா தனது
தாய்க்கு சொல்லியதாக கூற.ினால் அந்த சிறுமி. எட்டு வயதேயான அற்த
சிறுமியின் பேச்சு தடுப்பு என்றால் என்ன அபபாவை தேடி அம்மா செல்வது எங்கே
என்றும் ஆராய்ந்திருக்கும்.

இந்த சிறுமியின் அப்பா வட்டுவாகல் பாலத்தடியில் இராணுவத்தின் பஸ்சில்
ஏற்றியதாக அவளது தாய் கூறினர்.  இது வரை எந்த தகவலும் இல்லை.
ராணுவத்திடம் ஒப்படைத்த தனது கணவரை தேடி பல இடங்களுக்கு ஏறி இறங்கியும்
பதில் இல்லை.  இரண்டு பிள்கைளுடன் தாய் தந்தையுடன் காணாமல் போ ஒரு
தம்பியையும் தேடியலைகிறாள் ந்த தாய்.  இரும்பு பெண்மணியாய் குடும்பத்தின்
பாரத்தை சுமந்து செல்லும் இ்ந்த பெண்ணுக்கு சமூகம் எந்தவித உதவியும் கூட
செய்வதில்லை. இப்படி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைமையை
சமூகத்திலுள்ள சிலர் அவமானமாக பார்க்ும் நிலையும் இருக்கிறது.

கடந்த மாதம் பருவமடைந்த ஒரு பெண்ணையும் கல்வியில் சிறந்துவிளங்கும்
மகனைம் வைத்துக்கொண்டு இராவத்திடம் ஒப்படைத்த கணவனணயும் தேடியலைகின்றால்
ஒரு தாய். கணவனை தேடி வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் அப்பா இன்று
வந்துவிடுவாரா என தன்மகன் கேட்கும் போதெல்லாம் பதில்கூறமுடியாமல் தனக்குள
ஏற்படும் உணர்வை தவிப்பு என்று கூறமுடியாது. ஆனால் சமூகம் எங்களை கணவன்
இல்லாவிட்டால் எப்படி பார்்க்குமோ அப்படித்தான் பார்க்கிறது. ஆனால் இந்த
மூகத்திலுள்ளவர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது எனது கணவன்
இறந்துபோகவில்லை. காணாமலாக்கப்ப்பட்டுள்ளார். கணவர் இல்லாது பிள்ளைகளை
வளர்க்கவும் அவர்களது கேள்விகளுக்கும் பதில் கூறும்போது  தெரியும்
மனம்படும்பாடு என்று கூறி கண்ணீர் வடிக்கும்போது இந்த சமூகம் எத்தனை
சுடுசொற்களை கணைகளாக எரிந்துள்ளது என்பதை எம்மால் உணரமுடிந்தது.
இப்படியான சமூகத்தின் ஆதரவுடன்தான் நாம் முன்னேறவேண்டியும் உள்ளது.

இலங்கையின் தெற்கிலும் சரி வடக்கு கிழக்கிலும்சரி உள்நாட்டு யுத்தம்
முடிவுக்கு கொண்டு வந்ததை ஞாபகபடுத்தும் நிகழ்ச்சிகள் இம்முறையும்
அறங்கேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் இதனால் பாதி்க்கப்பட்ட
மக்களின் நிலை என்ன? அவர்களுக்கு நீதி நியாயம் நட்டஈடு வழங்குவதில்
அரசாங்கம் சர்வதேசத்துக்கு மத்தியில் அளித்த வாக்குறுதிகள்
நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று ஆராயவேண்டிய தேவையும் இங்குள்ளது. இதை
செய்வது யார்?

நல்லாட்சி அரசாங்கம் உருவாக காரமாக ருந்தவர்களில் தமிழ்மக்களின்  பங்கு
முக்கியமானது. அவர்களின்  வாக்குகளைப்பெற வழங்கப்பட்ட வாக்குறுதிகள்
இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது பற்றி மக்கள் நல்லாட்சி அரசின் மக்கள்
பிரதிதிகளை சந்திக்கவே முடியாத நிலையில் யாரிடம் போய் கேட்பது? வடக்கு
கிழக்கை பிரதிநதித்துவப்படுத்தும் அப்பகுதி அரசியல்வாதிகள் தான் இதனை
செய்வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

அண்மையில் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணாமல் போனதாக கூறப்படும்
அனைவரும் உயிரோடு இருக்கிறார்கள் என கூறமுடியாது எனவும் அவர்கள் அனைவருமே
வெளிநாடுகளுக்கு தப்பிசென்றிருப்பார்கள் என்று கூறவும் முடியாது எனவும்
நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு இதுவரை
எந்த வொரு அரசியல்வாதியும் வாய்திறக்கவும் இல்லை. அதேநேரம் ஜோசப் முகாம்
சித்திரவதை தொடர்பான ரகசியங்களும் வெளிவந்த காலத்திலும் யாரும் அதனை
கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பேசக்கூடிய தமிழ்மக்கள் பிரதிநிதிகள்
அரசுக்கு சாதகமாகவே நடந்துகொள்கிண்றனவே தவிர தமமை சுற்றியுள்ள
சந்தர்ப்பங்களை பயனபடுத்திக்கொள்ளாது தப்பி பிழைக்கின்றனர் என மக்கள்
சுமத்தும் குற்றச்சாட்டாக இருக்கிறது.

பிள்ளைகளையும் இராணுவத்திடம் நம்பித்தான் ஒப்படைத்ததோம். ஒப்படைத்தவர்களை
காணவில்லை நடந்தது என்ன என்று கூறவும் மாட்டனே் என்கின்றனர். அவர்களை
கண்டுபிடுத்ததருவதாக வாக்கு கேட்டார்கள் நம்பித்தான் வாக்களித்தோம்.
இப்போது கண்கொள்ளமாட்டேன் என்கிறார்கள். திருபம்பிபார்கவைக்க
தீக்குளிக்கவா என்று கேட்கிறாள் முல்லைத்தீவில் பிள்ளையை இழந்தால் அரை
பித்துபிடித்த தாய். யார் இந்த தாய்க்கு பதில் கூறப்போவது?

கிளிநொச்சியில் பத்துதாய்மார்கள் மனதளவில் நொந்துபோய் யார் யாரோ
வருகிறார்கள் போகின்றார்கள் பொறுப்புகூறக்கூடியவர்கள் வரவில்லையே.
அவர்கள் வரவேண்டும் என்பதற்காக பத்து தாய்மார்கள் உயிரை மாய்த்துக்கொள்ள
தயாராக இருக்கின்றார்கள் என்று தமது உணர்வை வெளிப்படுத்துக்கின்றனர்.
ஆணைக்குழுக்கள் பல அமைத்து அதினூடாக எந்தவித சாதகமான பதிலுமின்றி எட்டு
வருடங்களாக தமது உறவுகளை தேடுவதுதன் இவர்களின் தேவையா இவர்களுக்கென
இன்னும் சில உறவுகள் இருக்கின்றன. அதனை யாரும் மறந்துவிடக்கூடாது.
காணாமலாக்கப்பட்ட உறவுகள்எங்கே என பொறுப்பு கூறக்கூடிய  இலங்கை அரசாங்கம்
போராடும் மக்களை திரும்பிபார்க்கவில்லை. சர்வதேசம் அரசியல்வாதிகள் ,
தனியார் , அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களும் கண்டுகொள்ளவில்லை எனில்
எங்குபிய் முறையிடுவது. செய்வதறியாமல் தவிக்கும் மக்களை உளவியல் ரீதியாக
தாக்குவது தான் திட்டமோ?

ஏ.ஜெயசூரியன் 

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...