ஒரு மாதத்திற்கு இரண்டு இலங்கையர் வீதம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இன் பிரசன்னத்தை குறைக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துவருகின்ற போதிலும்கூட ஒரு மாதத்திற்கு இரண்டுபேர் வீதம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைவதாக பயங்கரவாதத்துக்கு எதிரான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 36 இலங்கையர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துள்ளார்கள் என்று இலங்கை அரசு கடந்த வாரம் அறிவித்தது. இது தொடர்பாக பாதுகாப்பு நிபுணர;கள் விழிப்புடன் இருக்கின்றனர; எனவும் அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக சிங்கப்பூரில் இயங்கும் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தின் தலைவர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன குறிப்பிடுகையில்:
இலங்கை போன்ற ஒரு வளரும் நாட்டுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது அதேவேளை தெற்காசியாவிலும் மற்றும் உலகத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை பெரும்பாலான தென்ஆசிய அரசாங்கங்களுடன் ஒப்பிடும்போது. இலங்கை தமக்கான அச்சுறுத்தலை நன்கு நிர்வகிக்கின்றது.
மேலும், இலங்கை அரசாங்கம் இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களுடன் நெருங்கி வேலை செய்துவருகிறது. தொடர்ந்தும் வேலை செய்ய வேண்டும் என்றும் கூறினார். புதிய திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியதோடு அரசாங்கம் முஸ்லீம் இளைஞர்களின் சிந்தனைப் போக்கில் ஏமாற்றம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பேராசிரியர் குணரத்ன கூறினார்.
No comments:
Post a Comment