Thursday, January 28, 2016

புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக வேண்டும்

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான மக்கள் கருத்து கேட்கும் குழு நாடுபூராகவும் தனது வேலையை ஆரம்பித்துள்ள நேரத்தில் சிலர் இப்படி தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக வேண்டும் என்ற கருத்துக்களே இங்கு அதிகமாக கூறப்பட்டாலும் அரசாங்கம் நியமித்துள்ள மக்கள் கருத்து கேட்கும் குழுவானது
அரசியலமைப்பு மறுசீரமைப்பு  என்றே கூறிவருகின்றது.
அத்துடன் இன்னும் மக்கள் எவ்வாறு தமது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்பதனையும் தெளிவாக வெளியிடவில்லை. இந்த நிலையில் சிலர் பதிவு செய்த கருத்துக்கள் இவ்வாறு இருந்தன.

அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க  
பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி
  • ஜிஎல் பீரிஸின் பொதியில் குறிப்பிடப்பட்டது தான்  இந்த சமஷ்டி ஆட்சிமுறை
அரசியலமைப்பு மாற்றத்தால் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலையாது. ஜிஎல் பீரிஸின் பொதியில் குறிப்பிடப்பட்டது தான் சமஷ்டி ஆட்சிமுறை. இப்போது அவர்களே அதனை எதிர்த்து கதைக்கின்றனர். தேசப்பற்றாளர் ஆக நினைக்கின்றார்கள் தேசிய ஒருமைப்பாட்டிட்காக நாம் முன்று ஒப்பந்தங்களை மேற்கொண்டோம் . அதில் ஒன்றுதான் 2005 ஆம் ஆண்டு மஹிந்தராஜபக்சவுடன் நாம் கைச்சாத்திட்டது. இரண்டாவது தான் 2014 ஆம் ஆண்டு மைத்திரிபாலசிர்செனவுடன் மேற்கொண்ட ஒப்பந்தம். மூன்றாவது தான் ரணில் விக்கரமசிங்கவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தம். பௌத்த மதத்துக்கு எதிராகவோ நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிக்காதவகையில் அரசியலமைப்பை மாற்றியமைப்போம். தேர்தல் முறைமையையும் மாற்றியமைப்போம்.



பஷில் ராஜபக்ச 
முன்னாள்  பொருளாதாரத்துறை அமைச்சர்
  • எதிர்காலத்திலும் மாகாணசபை முறை நாட்டில் இருக்க வேண்டும்
எதிர்காலத்திலும் மாகாணசபை முறை நாட்டில் இருக்க வேண்டும் இம்முறைதான் நாட்டிற்கு உரிமையானது. அதாவது இம்முறையானது மேற்கத்தைய நாடுகளிலிருந்து வந்தது இல்லை. இலங்கைக்கே உரித்துடையது. ஜே ஆர் காலத்தில் ஆட்சிக்காலத்திலும் பிரேமதாச காலத்திலும் மாவட்ட கிராம முறை தான் இருந்தது. அதன் பின்னர் தான் கிராம முறை இல்லதொளிக்கப்பட்டது. பின்னர் நகரசபை பிரதேச சபை என்று பல முறைமைகள் அறிமுகபடுத்தப்பட்டத்து. ஆனாலும் அவற்றால் நிர்வகிக்க முடியாது. இதன் காரணமாகத்தான் மாகாணசபை அறிமுகப்படுத்தப்பட்டது. இதான் சரியான நிர்வாக முறை என்று பலர் கூறுகின்றனர். அது தான் இருக்க வேண்டும்.தற்போதுள்ள அரசியல் நிலவரத்துக்கு நான் எந்த விதத்திலும் பங்கு வகிக்க போவதில்லை.

பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்ன

  • தற்போதைய அரசியலமைப்பு தனி ஒரு மனிதனுக்கு மட்டுமே அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளதைப் போன்று இருக்கின்றது 

பாராளுமன்ற உறுப்பினர் தற்போது இருக்கும் அரசியலமைப்பு மாற்றப்பட்டு எதிர்காலத்திலும் மாகாணசபை முறை நாட்டில் இருக்க வேண்டும் .ஏற்கனவே இருக்கும் அத்திவாரத்தில் கட்டடமொன்றை கட்டமுடியாது. தற்போதைய அரசியலமைப்பு தனி ஒரு மனிதனுக்கு மட்டுமே அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளதைப்போன்று இருக்கின்றது. அதில் பதின்மூன்று மற்றும் பத்தொன்பதாவது திருத்தம் என்ற பல திருத்தங்களுக்காக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மாற்றப்படவேண்டும்.புதிதாக அமையப்படவுள்ள அரசியலமைப்பு தனியொரு அரசியல் கட்சிக் காந்து அல்ல. 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைபுக்களைப்போல கட்சிகளின் நோக்கம் கருதியும் பதவி நோக்கத்தியும் கருதி உருவாக்கப்பட்டது. பிரித்தானியாவில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பைபோல எமது அரசியலமைப்பு உருவாக்கவேண்டும் என்ற கருத்தை நான் விரும்பவில்லை. அதிகாரத்தை பிரிப்பது மட்டுமின்றி இது  பொதுவான அரசியலமைப்பு என்பதை அனிவரும் ஏற்கவேண்டும்.

பேராசிரியர் ஜெயதேவ உனந்த்கொட

  • விக்னேஸ்வரன் கூறும் விடயங்கள் சில ஏற்றுக்கொள்ள கூடியது

இலங்கையில் தற்போது இரண்டு விதமான நிலைபாடுகள் நிலவுகின்றது முதலாவது  13ம் திருத்த சட்டத்திற்கு அப்பால் செல்லும் ஒரு முறைமை அடுத்தது 13ம் திருத்த சட்டத்திற்கு அப்பால் செல்லாமல்  இருக்கும் ஒரு முறைமை. இதற்க்கு சில காரணங்கள் உண்டு அதாவது போலீஸ் அதிகாரம் சரியான முறையில் இல்லை  மற்றும் காணி அதிகாரம் முறைமை என்பன சரியான முறையில் இல்லை என்பது ஆகும். மேலும் மக்கள் நலன் தொடர்பாக அக்கறை உள்ள புதிய அரசாங்கம் கூட இதை கருத்தில் கொள்ளவில்லை . ஒருவகையில் பார்க்கும் போது விக்னேஸ்வரன் கூறும் விடயங்கள் சில ஏற்றுக்கொள்ள கூடியது. அரசாங்கம் வடக்கு பிரச்சினைகளை ஒரு சரியான முறையில் பார்ப்பதில்லை. விக்னேஸ்வரன் அரசு கூறும் அனைத்து விடயங்களுக்கும் செவி சாய்ப்பார்   என்று கூற முடியாது .ஆகவே அரசு 13 ம் திருத்த சட்டத்தை முறைப்படி பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...