ரா ஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருப்பவர் நளினி.
இந்நிலையில், நளினியின் தந்தை சங்கரநாராயணன் உடல் நலக்குறைவால் நேற்று (23.02.2016) உயிரிழந்தார்.
ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான நளினியின் தந்தை நெல்லை வி.கே.புரத்தில் வசித்து வந்தார்.
அவரது உடல் சென்னையில் உள்ள கோட்டூர்புரத்துக்குக் கொண்டு வரப்பட்டது. தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும், என நளினி சார்பில் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.
இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மொத்தம் 12 மணி நேரம் நளினி பரோலில் செல்ல சிறைத்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து, இன்று காலை காவல்துறையினரால் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட நளினி தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்த 25 ஆண்டுகாலத்தில் பரோல் வழங்கப்பட்டு நளினி வெளியே வருவது இதுவே முதன்முறையாகும். இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் நளினி.

No comments:
Post a Comment