கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி தோட்டக் கம்பனிகள் சார்பில் இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தோட்ட தொழிலாளர்களின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு நிலையம் என்பனவும் கைச்சாத்திட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள கூட்டு ஒப்பந்தத்தை தொழில் ஆணையாளர் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்தமை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கூட்டு ஒப்பந்த தொழிற்சட்டங்களுக்கு முரணாகவும், தொழிலாளர்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளை பறிப்பதாகவும்இ இயற்கை நீதிக்கு எதிராகவும், 2003ஆம் ஆண்டு அடிப்படை கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும் இருப்பதனால் அதனை இரத்து செய்யும்படி பதிவு செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்தவகையில், பிரதிவாதிகளான தொழில் ஆணையாளர், மேற்குறித்த தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம் அத்துடன் அது பிரதிநிதித்துவப்படுத்தும் 22 கம்பனிகள், தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சர், பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோர் பெப்ரவரி 21ஆம் திகதி நீதி மன்றத்தின் முன் தோன்றி மனுதாரரின் மனுவில் கோரப்பட்ட நிவாரணங்களுக்கு ஏன் இடமளிக்கக்கூடாதென விளக்கமளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான வழக்கு கடந்த வாரம் 21ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கினூடாக கோரப்பட்டுள்ள நிவாரணங்களை ஏன் வழங்க கூடாது என எதிராளிகள் தமது பதிலை வழங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த இத் தினத்தில் எதிராளிகள் பதிலளிக்க மேலும் நாட்கள் கோரியமைக்கு அமைய எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி நீதிமன்றத்தின் தோன்றி பதிலளிக்குமாறு மேன்முறையீட்டு நீதின்றத்தின் தலைவர் நீதியரசர் விஜித மலல்கொட மற்றும் நீதியரசர் சி. துரைராஜா ஆகியோர் கட்டளை விடுத்தனர்.
தொழில் ஆணையாளர், தொழில் அமைச்சர், பெருந்தோட்டத் தொழிற்துறை அமைச்சர், இலங்கை முதலாளிமார் சம்மேளனம், பெருந்தோட்டக் கம்பனிகள் என்பவற்றுடன் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் சார்பாக கைச்சாத்திட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு நிலையம் என்ற எதிராளிகள் நீதிமன்றத்தில் சமூகளித்திருந்தன. எதிராளிகளாக உள்ள பெருந்தோட்டக் கம்பனிகளில் சில் நீதிமன்றத்திற்கு சமூகளிக்காத நிலையில் அவற்றுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்படவுள்ளது.
கடந்த வருடம் தொழில் ஆணையாளர் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்த 2016ஆம் ஆண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கூட்டு ஒப்பந்த தொழிற்சட்டங்களுக்கு முரணாகவும், தொழிலாளர்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளை பறிப்பதாகவும் அதாவது சம்பளத்தை குறைப்பதாகவும், இயற்கை நீதிக்கு எதிராகவும், 2003ஆம் ஆண்டு அடிப்படை கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும் இருப்பதனால் அதனை இரத்து செய்யும்படி மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா இவ் வழக்கினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் கூட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவரது மாரு பரிசீலனையில் 1000 ரூபா மீண்டும் உள்வாங்கப்படுமா என்று எந்தவொரு தகவலும் இல்லை. மீண்டும் வரவுள்ள தேர்தலுக்கு இந்த மறுப்பறுசீலனையை பகடை காயாக பயன்படுத்தும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் தரப்புக்கள் விமர்சிக்கின்றன. அதேநேரம் ஏற்கனவே மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மூலம் பொற்ப்பட்டுள்ள வழக்கிற்கு இதொகா உறுதுணையாக இருந்தாலே போதுமானதாக இருக்கும் என்பதும் அவர்களது கோரிக்கையாக இருக்கிறது.
சூரியன்
No comments:
Post a Comment