Sunday, February 26, 2017

தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில்தான் நடக்கும்

அமைச்சர் எஸ்பி திஸாநாயக்க 

கே. அரசாங்கத்தை முறையாக கொண்டுநடத்துவதை விட தற்போது உங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரச்சினைகளை தீர்க்கவேண்டி இருக்கிறது தானே?
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சிக்கு ஒன்றும் நடக்கவில்லை. சுகாவுக்குள் இவ்வாறான உள்ளக பிரச்சினை ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் கிராமத்தலைவன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு இருக்கிறது. அதனால் சில அரசியல்வாதிகள் பயந்துள்ளனர். ஆனால் இந்த நடைமுறையானது தற்பொழுது குறைந்துகொண்டுவருவதாய் நான் அவதானிக்கிறேன். இதுபோன்றே சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்த்திலும் நடந்தது. மக்கள் சிறிமாவோவுக்கு ஆதரவளித்தனர்.அவரை சுற்றி பலர் இருந்தனர்.


ஆனால் தேர்தலில் வெற்றிபெறமுடியவில்லை. மஹிந்த ராஜபக்சவுக்கும் இதுதானே நடந்தது. அவர் ஜானதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். போடு தேர்தலுக்கு வந்து என்ன நடந்தது? நாம் தற்பொழுது எங்களது கிளைகளை புனரமைத்த்துக்கொண்டு வருகின்றோம். அதனால் கட்சி பிணக்குகளை தீர்த்துக்கொண்டு முன்னோக்கி செல்வோம். பிரச்சினை இல்லாத கட்சி இல்லை. எந்த கட்சியில்தான் பிரச்சினை இல்லை?

கே. அப்படியானால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஆட்சியை கவிழ்ப்பதாக கூறி காண்பது பகல் கனவா?
இவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. இவர்கள் இருந்திருந்து ஜனாதிபதியை சந்திப்பார்கள்.கட்சியுடன் இணைந்து செயற்படவேண்டிய தேவை இருக்கிறது.இன்னும் சில காலங்களில் இந்த நிலைமை கட்சிக்கு சாதகமாக அமையும்.
  
கே. தேர்தலின்போது எவ்வாறு இருவரும் இணைந்து செயற்படுவீர்கள்?
தேர்தல் தொகுதிவாரி பிரிவு அடிப்படையில்தான் நடக்கும். அப்படி நடக்கும் தேர்தலில் கிராமத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக்க எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்படாது. அதனால் தேர்தலில் படகுகாரர்கள்தான் பாதிக்கப்படப்போகின்றார்கள். பசில் ராஜபக்சவுக்கு பெரிய  கயிறை கொடுத்தார்கள் நாம் தேர்தலில் விருப்புவாக்குமுறையில் கொண்டுசெல்லுவோமென. இது அந்த படகுக்காரர்கள் உணர்ந்துள்ளனர். அதனால் தான் அந்த படகு உருவாக்கப்பட்டது. இல்லையென்றால் அந்த படகு உருவாக்கப்பட்டிருக்காது. 

கே. இனி பசில் ராஜபக்சக்களுக்கு என்ன நடக்கும்?
 அந்த குழு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைய வேண்டும் அவர்களுக்கு இதை விட  செய்ய வேறு வழி இல்லை.

கே. அவர்களை இணைத்துக்கொள்ள நீங்கள் விரும்புகின்றீர்களா?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு யார்வேண்டுமானாலும் வரலாம் போகலாம். அதைவிட இவர்கள் கட்சின் முன்னாள் உறுப்பினர்கள் தானே. அதனால் அவர்களை கட்சிக்குள் இணைப்பது தொடர்பாக எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.

கே. கடந்த ஆட்சியில் பசில் ராஜபக்சவின் செயல்பாடுகளால் அதிகமான அமைச்சர்கள் முதற்கொண்டு அழுதுகொண்டிருந்தனர். இம்முறை ஒன்றுசேர்ந்தால் அப்படிஇருக்காதே...?
அந்த காலத்தில் பசில் ராஜபக்சதான் உரிமையாளராக இருந்தார். யாருக்கும் எந்தவித வேலையையும் செய்யமுடியாமல் போனது அதனாலதான். கட்சியில் மட்டுமல்ல அரசாங்கத்தின் உரிமையாளராகவும் அவர்தான் இருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இனி அவ்வாறு செய்ய முடியாது. அவரும் சாதாரண கட்சி உறுப்பினர். எங்களது கட்சியில் பசிலை விடவும் எத்தனையோ சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர்.கடைசி வரிசையில் தான் இனி இருக்க வேண்டும். அமைப்பாளர் பதவி வேண்டுமெனில் காணிப்பெற்றுக்கொண்டு இறங்கிவேலைசெய்ய முடியும்.

கே. மஹிந்தவின் பிரஜாவுரிமையை நீக்கவேண்டுமென கூறி சிலர் கோஷமெழுப்புகின்றனரே...?
இது முற்றிலும் பொய்யான தகவல்.பொது எதிரணியினரால் உருவாக்கப்படும் தகவல். சமஷ்டி, அரசியலமைப்பில்  பெளத்த மதம் இல்லாமலாக்கப்படுகிறது எனவும் அதற்கு முதலில் மின்சார கதிரை போன்ற பொய்யான தகவல்களை கூறுவது வழமையாகிவிட்டது. மஹிந்த ராஜபக்சவின் பிரஜாவுரிமையை யாராலும் நீக்கமுடியாது. அதுபற்றி யாரும் சிந்திக்கக்கூட இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும்வரை இப்படி நடக்குமென நாங்கள் நினைக்கவில்லை.

கே. மஹிந்தவை பிரதமராகியே தீருவோமென தினேஷ் குணவர்தன கூறியுள்ளாரே..?
அது எப்படி முடியும்? கடந்த இரண்டு தேர்தலிலும் மஹிந்தவின் வாக்கு மிகவும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. குருநாகலில் போட்டியிட்டு இன்னும் குறைத்துக்கொண்டார். சுற்றி உள்ளவர்கள் பலதும் பேசுவார்கள். எதிர்பார்ப்பையும் உண்டாக்குவார்கள் ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமானதா வேண்டுமே... அதற்கான இடம் எதுவும் தெரியவில்லையே... 

கே. அரசியலமைப்பு தொடர்பான கருத்துக்கள் தற்பொழுது மேலெழுந்துள்ளன. இதுவும் குழப்பமாக இருக்குமா?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜானகிபாஹியின் அதிகாரங்களை நீக்குவதாக கூறியிருந்தார்.சர்வஜனவாக்குரிமைக்கு செல்லும் எந்தவொரு திருத்தங்களிலும் கை வைக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். ஒருமைப்பாடு, இறையாண்மை, சுயாதீனத்துவம் ஆகியவற்றை பலப்படுத்துவதாக கூறியிருந்தார். இதனால் கூறுவது புதிய அரசியலமைப்புக்கு செல்லமாட்டேன் என்பதுதானே. சமஷ்டி முறைமைக்கு அவர் செல்லமாட்டார்.அப்படியாயின் ஏன் அவர்பொதுசன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும்.ஜனாதிபதி முறைமை தொடர்பாக அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேறிவிட்டார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இதற்குமேல் யாருமே நீக்கவில்லை. இவர் அதனை நீக்கினார். 

கே. எதற்காக அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான அக்கல் கருத்தறியும் குழுவை அமைத்து நாடாளாவியரீதியில் கருத்துக்களை கேட்கவேண்டும்?
மக்கள் கருத்துக்களை கேட்பது முக்கியமானது. பொதுசனவாக்கெடுப்புக்கு செல்லாமல் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி விரும்புகிறார்.
இதற்கு பெருந்தொகை செலவாகாது. 
கே. இணக்கப்பாடு அரசாங்கம் எதிர்காலத்தில் எவ்வாறு அமையும்?
2020 வரை எமது இந்த பயணம் தொடரும்.அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. எதிர்கால தேர்தல் காட்சிகள் இரண்டாக பிரிந்து போட்டியிடும். அது ஜனநாயக சகோரத்துவமிக்க பொடியாக இருக்கும். அவ்வாறு செய்யவே ஜனாதிபதி முயற்சிப்பார். ரணிலும் இதற்கு ஆதரவு வழங்குவார். கட்சியின் பலத்தை தக்கவைத்துக்கொள்ளவே நாம் முயற்சிப்போம். ஐதேக வெற்றிபெற்றாலும் அது ஜனநாயகமாகும்.நான் சந்திரிகாவை பகைத்துக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேறினேன்.அதற்காக இன்றும் கவலை படுகிறேன். எனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறாக அதனை நான் கருதுகிறேன். கவலைப்படுகிறேன்.மீண்டும் அதனை செய்ய மாட்டேன். சுகாவை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்.

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...