வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவ்ரது மைத்துனர் வாசுதேவவின் இனவாத கூட்டத்துக்கு ஆயுதங்களை வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும் அவர் வடக்கிலிருந்து வெளிப்படுத்தும் கருத்துக்களால் தாம் மனவேதனையுடன் கட்டிப்போடவேண்டும் என்ற கதையை கூறியதாகவும் அதனால் பல்வேறுபட்ட ரீதியில் விமர்சனங்கள் வந்தன. சிலர் அப்படி சொல்லாமல் இருந்திருக்கலாம் என கூறினார்கள்.இருப்பினும் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்காக தான் முன்னிட்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சுகாதார நிலைமை எப்படி இருக்கிறது?
பெரிய சுகயீனம் என்று சொல்வதற்கில்லை. சிறிய சிறிய பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் சென்றுகொண்டிருக்கிறது. ஆரம்பிக்கப்பட்ட வேலைகளை ஓரங்கட்டும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது. இப்படி பல அசைவுகள் இருந்தாலும் இருந்தாலும் சில வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் பயணத்தை கொண்டுசெல்கிறோம்.
இதனால் ஏனைய அமைச்சர்களுடன் பிரச்சினைக்கு முகம் கொடுகின்றீர்களா?
நான் இங்கு கூறுவது ஒரு விடயம் தொடர்பாக இருவர் ஒரேமாதிரியான நிலைப்பாட்டில் இருந்தால் அது சர்வாதிகார முடிவாக கருதப்படும். அதனால் கருத்து வேறுபாடுகளிருக்கவேண்டும். வேறுபட்ட கருத்துக்கள் கலந்துரையாரடப்பட்டு அதன் பின்னர் பெரும் முடிவு மிகவும் சரியாக இருக்கும். இது தான் நான் கூறும் முரண்பாடு. நான் தனிப்பட்ட ரீதியில் யாருடனும் முரண்பட்டுக்கொள்வதில்லை. ஆனால் வேறுபட்ட வேலைகள் தொடர்பில் ஏனைய அமைச்சர்களை நான் விமர்சனம் செய்வேன். இரு வேறுபட்ட கருத்துக்களை நாம் கொண்டிருந்தாலும் இந்த அரசாங்கம் ஒன்றிணைத்த அரசாங்கம். எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆளும் கட்சியில் இருந்தாலும் நாம் நியாயத்துக்காக பேசுவேன். நான் அரசியல் கோமாளியாக விருப்பமில்லை. அரசாங்கம் எடுக்கும் புகழ் பெறாத முடிவுகளை விடவும் மக்கள் மறந்த முடிவுகளை பற்றி நான் விமர்சிப்பேன்.
புகழ் பெறாத முடிவுகள் என்ன?
இந்த அரசாங்கம் அண்மைக்காலமாக எடுத்த முடிவுகள் அனைத்துமே இன்னலுக்குள்ளாகியுள்ளன. அதனால் மக்கள் அரசுக்கெதிராக செயற்படத்தொடங்கினர். அதிகரிக்கப்பட்ட வரி தொடர்பாக நீதிமன்றம் வரை செல்லவேண்டி இருந்தது. இதனால் எதிர்க்கட்சி வீரர் போல நடந்தார்கள் மக்களை பற்றி கவலை படவில்லை. மக்கள் கருத்துக்களை நாம் கேட்கவேண்டும். வீதிக்கு மக்கள் இறங்குவதற்கு முதல் இதன் செய்வது நல்லதல்லவா? வீதிக்கு இறங்கியவுடன் அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்துமே முதுகெலும்பில்லாத அரசாங்கம் என்ற மன நிலையை மக்களுக்கு ஏற்படுத்தும். இது தான் புகழ் பெறாத முடிவுகளாக அமைகிறது.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவுடன் உங்களுக்கு இருக்கும் பிரச்சினை என்ன?
யாரிடமும் எனக்கு தனிப்பட்ட ரீதியில் பிரச்சினை இல்லை. கடந்த காலத்தில் செலுத்தவேண்டியிருந்த பணத்தை இந்த அரசாங்கம் செலுத்த வேண்டி ஏற்பட்டது. அது அமைச்சரின் பிழையேதும் இல்லை. அந்த அமைச்சின் உள்ளவர்கள் குறித்த தொகையை செலுத்த தயாராகிவிட்டனர். அவர்கள் அமைச்சருக்கு அழுத்தம் கொடுத்திருக்கவும் கூடும். பாதை அமைப்பது தவிர ஏனையவற்றுக்கு ஒப்பந்தங்கள் மூலமாக அல்லாமல் செலுத்த முற்படும்போது நாங்கள் அது தொடர்பாக கேள்வி எழுப்பினோம்.அமைச்சரும் அதனை ஏற்றுக்கொண்டார்.இது தனிப்பட்ட பிரச்சினை அல்ல.
உள்ளே ஒன்றாக கூடி ஒரு முடிவெடுத்துவிட்டு வெளியே வந்து முரண்படுவதாகவே நாம் பார்க்கின்றோம்?
இங்கு ஐக்கியதேசிய கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என இரண்டு கட்சிகளுக்கிடையில் மட்டுமல்ல ஐக்கியதேசிய கட்சிக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் வெளியேறி வந்து கருத்து தெரிவிப்பது வளமை. மஹிந்த ஆட்சியிலும் நடந்தது. அதோடு கூட்டம் கூடி முடிவெடுத்த பின்னர் ஊடங்களுக்கு முன்னாள் அடித்துக்கொள்வது எல்லா ஆட்சி காலங்களிலும் நடப்பது தான். ஆனால் இங்கு கட்சி இரண்டு தலைமைகளும் இரண்டு என்பது அபாயமானது. அதனால் தான் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டியுள்ளது.
சைட்டம் பிரச்சினையால் நாட்டு மக்கள் கலக்கத்தில் உள்ளார்கள்?
ஆட்சி நிர்வாகத்தில் செய்த பிழைகள் காரணமாக பூதாகாரமாகி நிற்கும் பிரச்சினைகள் பல இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆட்சியிலிருந்து இந்த ஆட்சிக்கு தொடர்ந்து வருகின்ற பிரச்சினைகள் என பிரச்சினைகள் பலவாறு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த பிரச்சினையும். இது ஒரு புதிய பிரச்சினை இருத்தங் உருவாகியுள்ளது. அதற்கு இந்த அரசாங்கம் தான் பொறுப்பு கூறவேண்டும் என சிலர் காண்பிக்கின்றனர். ஆனால் இந்த பிரச்சினை எங்கு ஆர்மபமானது என அவர்கள் மறந்துவிட்டனர். அவர்கள் செய்ததிட்க்குத்தான் இந்த அரசாங்கம் பொறுப்புச்சொல்லிக்கொண்டிருக்கி றோம்.பிரச்சினை இல்லாவிட்டால் அரசாங்கம் வலுப்பெறாது. பிரச்சினையை தீர்க்கத்தான் அரசாங்கம் வேண்டும்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவிதியை தீர்மானிக்க இன்னும் நாட்கள் எடுக்குமா?
கட்சியை பலப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எங்களை யாரும் பிரிக்க முடியாது. கட்சியை இரண்டாக பிரித்து தங்களது நோக்கங்களை நிறைவேற்ற முயற்சி செய்பவர்களிடமிருந்து அவதானமாக இருக்க வேண்டும். அது தான் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தேவைப்படுகிறது. அன்று மஹிந்த கட்சியை இரண்டாக பிரித்து பாராளுமன்ற உறுப்பினர்களை வேறாக்கிய சம்பவங்கள் எமக்கு ஞாபகம் இருக்கிறது. கட்சித்தலைவர் பதவியை மைத்திபால சிறிசேனவுக்கு வழங்கி வளியேறிய மஹிந்த ராஜபக்ச அவசியமற்ற செயல்பாட்டில் தற்போது இறங்கியுள்ளார். நான் மீண்டும் கட்சித்தாவ தயாரில்லை. கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்குள் தலையிட்டு நான் அடங்கிப்போய் இருக்கிறேன்.
ஐதேகவில் பிரபலமாக இருந்த தயாசிறி சுதந்திரக் கட்சியில் குறைவான மதிப்பீட்டில் இருக்கிறாரா?
நான் அப்படி நினைக்கவில்லை. பிரபலம் என்பது அவரவர் மோகத்தில் இருந்து வெளிப்படும் கிடைப்பதாகும். எதிர்க்கட்சியில் இருக்கும் ஒருவர் பிரபலமாவது இலகுவான காரியம். நாளை அரசாங்கத்திலிருந்து நான் வெளியேறி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டால் நான் பிரபலமாகிவிடுவேன். எதிர்க்கட்சியில் இருந்து மக்கள் பிரச்சினைகளை பற்றி பாராளுமன்றத்தில் பேசினால் பிரபலம் ஆகிவிடலாம். அமைச்சகரானதும் அந்த பிரச்சினைகளை தீர்க்கவேண்டும். அதனால் பிரபலமாக ,முடியாது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கடைசி இடத்தில் நான் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
தேசிய நல்லிணக்கம் பற்றி அண்மைக்காலமாக அதிகமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும்போது தயாசிறி ஜயசேகர வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனை எப்படி நாய் என்கிறார்?
தற்போது இந்த நாட்டில் ஒன்றிணைந்த அரசாங்கம் தான் நடக்கிறது. யுத்தம் நடந்து இப்போது முடிவடைந்துள்ளது. தேசி ய ஒருமைப்பாடு தொடர்பாக அனைவரும் வேலைசெய்ய வேண்டும். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக கருத்துக்களை கட்டியெப்பிக்கொண்டிருக்கும் நேரம்.கடும்போக்கு ரீதியில் வடக்கின் முதலமைச்சர் போல கருத்துக்களை தெரிவிக்கும்போது சிங்கள மக்களிடம் நாங்கள் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு அதிகாரத்தை பிரித்து கூறும்படி எப்படி கூற முடியும். விக்னேஸ்வரன் வடக்கு சிங்கள மக்களை அடித்துவிரட்டுமாறு கூறுகிறார். வடக்கின் விகாரைகளை உடைக்குமாறு கதைக்கின்றார். அவர் தமிழீழம் பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார். சமஷ்டி பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார். எங்களது பிரச்சினைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் வேண்டுமென கூறுகின்றார்.
இது தொடர்பாக எங்களுக்கு கவலை ஏற்படுகிறது. தமிழ் முஸ்லீம் மக்கள் தொடர்பாக நான் முன்னிட்பேன். சிங்கள மக்களை போலவே தமிழ் மக்களுக்கும் உள்ள உரிமைகளை பெற்று கொடுக்க நாங்கள் முன்னிற்போம். சிறுபான்மையின மக்களுக்கு இந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட கூடாது.விக்னேஸ்வரனின் செயல்பாடுகளினால் நாம் முன்னிட்ப்பது பிரச்சினைக்குரியதாகியது.நன்கு சட்டம் தொடர்பாக அறிந்த அவர் இவ்வாறு செயல்படுவது தவறு. நாயை கட்டிப்போடவேண்டும் என்றுதான் நான் கூறினேன். வேறு என்ன சொல்ல இருக்கிறது. தனிப்பட்ட ரீதியில் விக்னேஸ்வரனுடன் எனக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை. எனது நல்ல நண்பர் அவர்.விக்னேஸ்வரனின் மை த்துனர் தான் வாசுதேவா. வாசுதேவவுக்கு தேவையான ஆயுதங்களைத்தான் வடக்கில் இருந்துகொண்டு விக்னேஸ்வரன் தெரிந்து செய்கிறார். வாசுதேவ அவ்வளவு இனவாதியாக இல்லாவிட்டாலும் அவரை சுற்றி இருக்கும் கூட்டத்தின் மத்தியில் இனவாதியாக நடக்கிறார்.விக்னேஸ்வரன் அவரது மைத்துனரின் கூட்டத்துக்கு இத்தகைய ஆயுதங்களை வழங்குகிறார். இது எமக்குள்ள பிரச்சினை.
இந்த நாய் கதையால் உங்களுக்கு எத்தகைய விமர்சங்களை எதிர்கொண்டுள்ளீர்கள்?
பல்வேறுபட்ட ரீதியில் விமர்சனங்கள் வந்தன. சிலர் அப்படி சொல்லாமல் இருந்திருக்கலாம் என கூறினார்கள். ஆனால் எனக்கேற்பட்ட மன வேதனையால் தான் இவ்வாறு அந்த கதையை கூறினேன்.
பிரசன்ன கொடுப்பிலி
நன்றி லங்காதீப
தமிழில் சூரியன்
No comments:
Post a Comment