Monday, February 6, 2017

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் முரண்பாடா?

இன்னும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவில்லை. தற்போது அணைத்து கட்சியினரின் கருத்துக்களை மட்டுமே கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்களின் கருத்துக்கள் மட்டுமல்ல பொது மக்களின் கருத்துக்களும் உளவாக்ப்பட்ட பின்னரே அரசியலமைப்பு உருவாகும். அனைத்தின மக்களுக்கும் ஏற்ற பொதுவான அரசியலமைப்பு தான் உருவாகும். ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே ஒரு குழுவினர் எதிர்க்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அந்த குழு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எந்த குழுவும் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளே உருவாகவில்லை. ஐக்கிய தேசிய கட்சி என்ற ஒரே ஒரு குழு மட்டுமே இருக்கிறது. இது தேசிய அரசு. இதில் மக்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.அதற்காக வேறுபட்டு நடக்கவில்லை. தேசிய அரசுடன் இணைந்துதான் நாம் செயற்படுகிறோம் என தெரிவித்த கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிஷன் தம் மீது சுமத்தப்படும் நெல் மோசடி தொடர்பான குற்றச்சாற்றுக்கள் அரசியல் பழிவாங்கல் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த செவ்வியின் தொகுப்பு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.


கிராமிய பொருளாதாரத்துக்கென கடந்தவருட வரவுசெலவுத்திட்டத்தை விட இம்முறை எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது?

கடந்த வருடம் கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கென 3.1 மில்லியனை ஒதுக்கியிருந்தோம். இன்று அதனை 9.5 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளோம். 




நெல் விலை தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு என்ன காரணம்?
அண்மைக்காலமாக நெல்லின் கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் அரிசி விலை குறையும். அரிசியின் விலையை குறைக்கவேண்டுமென அரிசி ஆலை முதலாளிகளுக்கு கூறியும் அவர்கள் விலையை குறைக்கவில்லை. இந்த நிலைமையை கட்டுப்படுத்த நாம் வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யவேண்டி ஏற்பட்டது. இறக்குமதியினால் இலங்கையில் அரிசியின் விலை குறையும்.


நெல்  மோசடி தொடர்பாக உங்கள் மீது  குற்றச்சாட்டு  வைக்கப்பட்டுள்ளது ஏன்?
எனது தேவைக்காக நெல்லை விற்றதாக கூறப்படுகிறது.உண்மையில் ஏற்கனவே இருந்த நெல்லை குறைவான விலைக்கு வழங்க பிரதமர் நிதியமைச்சு மற்றும்  எனது  கிராமிய அபிவிருத்தி குழுவில் களஞ்சியப்படுத்தியுள்ள  நெல்லை குறைந்த விலைக்கு வழங்க  முடிவெடுக்கப்பட்டது. அதற்கென குழுவொன்றும் உருவாக்கப்பட்டது. அதன்படி 26 ரூபா வரை குறைத்து வழங்க கூட நாம் முன்வந்தோம். இருந்தும் புதிய நெல்லை கொள்வனவு செய்வதிலேயே ஆலை உரிமையாளர்கள் குறியாக இருந்தனர். மேலும் கால்நடை உணவுகளை 24 ரூபாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதுதான் நடந்தது. இது முற்றிலும் அரசியல் பழிவாங்கல்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே ஒரு குழுவினர் எதிர்க்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அந்த குழு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறதே?
அப்படி எந்த குழுவும் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளே உருவாகவில்லை. ஐக்கிய தேசிய கட்சி என்ற ஒரே ஒரு குழு மட்டுமே இருக்கிறது. இது தேசிய அரசு. இதில் மக்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.அதற்காக வேறுபட்டு நடக்கவில்லை. தேசிய அரசுடன் இணைந்துதான் நாம் செயற்படுகிறோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுவிட்டதா?
இன்னும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவில்லை. தற்போது அணைத்து கட்சியினரின் கருத்துக்களை மட்டுமே கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்களின் கருத்துக்கள் மட்டுமல்ல பொது மக்களின் கருத்துக்களும் உளவாக்ப்பட்ட பின்னரே அரசியலமைப்பு உருவாகும். அனைத்தின மக்களுக்கும் ஏற்ற பொதுவான அரசியலமைப்பு தான் உருவாகும்.



வடக்கு கிழக்கு மக்களின் சமஷ்டி கோரிக்கையை அரசியலமைப்புக்குள் உள்வாங்க முடியுமா?
இல்லை. சமஷ்டி என்ற வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்படாது. ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் வாழும் வகையில் அரசியலமைப்பு அமையும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவர் சிறுபாண்மை மக்களின் ஆதரவுடன்தான் பதவிக்கு வந்தார். பிரதமர் மீதும் அதே நம்பிக்கையை மக்கள் வைத்துள்ளார்கள். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது பிரதமர் ரணிலுக்கே சிறுபான்மை மக்கள் ஆதரவு வழங்கினார். மைத்திபாலவின் ஆட்சியில் இனவாதம் இல்லை.மத  வாதம் இல்லை. பெளத்த மதம் பெரும்பாண்மை மதமாக இருப்பதால் அவர்களுக்கு முதலிடம்
வழங்குவதோடு என்னை இன மொழி  மதங்களுக்கும் சமந்தஸ்து வழங்கும் அரசாக இந்த அரசாங்கம் செல்லப்படும். அது தான் எங்களது எதிர்பார்ப்பும்  ஐதேகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு அநீதி இழைப்பார்கள் என்ற சந்தேகம் வேண்டாம். 

சிறிய தேர்தல் நடந்த அரசாங்கம் நீண்ட காலத்தைய எடுப்பதற்கான காரணம் என்ன?
இதற்கு அரசாங்கம் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. ஏற்கனவே இருக்கும் தேர்தல் முறைமையை மாற்ற வேண்டுமென தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் தொகுதிவாரி முறையை பசில் ராஜபக்ச உருவாக்கினார். இது அவர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்ட காரணத்தினால். அதனை நிராகரித்து புதிய முறையை உருவாக்குவோமென பாராளுமன்றில் முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர் எல்லை நிர்ணய குழுவின் மூலம் தேர்தல் எல்லைகள் தொடர்பான தெளிவை பெற நாம் தீர்மானித்தோம். அது தொடர்பில் அமைச்சர் ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார். வர்த்தமானியில்  அறிவித்த பின்னர் தேர்தல் நடக்கும்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுவது உண்மையா?
இல்லை இது முற்றிலும் பொய்யான கருத்து. இந்த அரசின் நடவடிக்கைகளை அனைத்தையுமே இருவரும் இணைந்துதான் மேற்கொள்கின்றனர். எனவே 2020 வரை இந்த அரசாங்கம் தொடரும்.





முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த ஆட்சியை கவிழ்க்க முடியுமென நம்பிக்கையுடன் இருப்பது எப்படி?
அவர் பகல் கனவு காண்கிறார். அவருக்கு பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை இருந்தது அதே போல மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிசபைகளின் ஆதரவும் பலவும் இருந்தது. இருந்தாலும் அந்த அதிகாரத்தை அவரால் தக்கவைத்துக்கொள்ளமுடியவில்லை. இன்று தோல்வியடைந்த தலைவர். சுதந்திர கட்சியின் தலைமைத்துவமும் இல்லை. கட்சிலிருந்து விலகி தனியாள் காட்சிகளை உருவாக்கி வெற்றிபெற்ற வரலாறுகள் இலங்கையில் இல்லை. சுதன்,திரை கட்சியை உடைத்துக்கொண்டு கட்சியை உருவாக்க முயற்சிசெய்த அனுரா பண்டாரநாயக்க மற்றும் ஜேவிபி போன்ற கட்சிகளும் உதாரணமாக இருக்கிறது. எனவே கம்யூனிச மற்றும் சிறுகட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே இவருக்கும் ஏற்படும்.

ஏ.ஜெயசூரியன் 

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...