Monday, March 13, 2017

அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு தோட்டத்தின் அவலநிலை


எயாபார்க் தோட்டம்


கிடைப்பதோ நாள் கூலி அதிலும் கிழமைக்கு இரண்டு மூன்று நாள் தான் வேலை.
மாச சம்பளம் 3000 ரூபாவை தாண்டாது. இந்த மூவாயிரம் ரூபாவிலதான் இரண்டு
பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும். சாப்பிடணும், மருந்து
எடுத்தக்கொள்ளவேண்டும், டவுனுக்கு போய்வர ஆட்டோவுக்கு கொடுக்கவேண்டும்,
இந்த ரோட்ல பஸ் வாரதே பெரிய விசயம் என்பதால் ஆட்டோவுக்கு அழுக வேண்டி
இருக்கு என தோட்டத்தொழிலாளி ஒருவர் தனது பத்து வருட கண்ணீர் கதையை
கூறுகின்றார்.



எனது தாத்தா காலத்துலயே இந்த காட்டுப்பகுதி அப்பேற்பட்ட காட்டை ஓரளவுக்கு
சுத்தம் செய்து தேயில மரங்களை நட்டு வசசாங்க. யாருமே திரும்பி பார்காத
காருகளை மலையக மக்களாகிய எங்கள் பரம்பரையினர்தான் விளைச்சல்நிலங்களாக
மாற்றினார்கள். அதற்கு பிறகு எங்க அப்பா காலத்துல மிச்சமிருந்த
காடுகளையும் வெட்டி தேயிலையை  நட்டாங்க. அது தான் நாங்க இன்னிக்கும்
பறிக்கிற தேயிலை மரமா இருக்குது. என்னுடைய காலத்தலும் பல ஏக்கர் காடுகளை
வெட்டி தேயிலையை பயிரிட்டு பசுமை பூமியா மாத்தினேன். என் மகன், மருமகள்
இந்த தேயிலை மரங்களில்ல தான் இப்ப கொழுந்து பரிக்கிறாங்க.



 காடு வெட்டி பயிர் செய்யுதுன்னா லேசுபட்ட வேல இல்ல பாறை உடைக்கனும், மரம் வெட்டனும், மலை உச்சியில இருக்குற பசுமையான இடங்களுக்கு போறதுக்கிடையில
சிருத்தை புலி பாம்பு அட்டை என எல்லாத்துக்கும் முகம் கெிடுத்து மண் உழுது தவறணை போட்டு கன்று வச்சு தன்ணி ஊத்தி மருந்தடிச்சி தான் இந்த தேயிலையை வளர்த்தம். அது தான் நாங்க செஞ்ச பெரிய தப்பு. இல்லன்னா இன்னிக்கு எவனுமே இந்த பக்கம் வந்திருக்கவும் மாட்டான். ஹோட்டல் கட்டமாட்டான். வெளிநாட்டுகாரனுக்கு வேடிக்கை பர்கவும் வியர்வையை
காயவைக்கிர இடமாவும் இது இருந்துருக்காது. இது காடு என்பதால்
அரசாங்கத்துக்கு சொந்தமானது என சொந்தம் கொண்டாடியிருக்கமுடியாது  என
மலையத்தின் மூத்தகுடிமகன் தள்ளாடும் வயதிலும் வீரமாக உரைக்கின்றார்.
அய்யா உங்க பேர சொல்லுங்க... ஏன்பா நீ பேப்பர்ல பேர போட்டதும் அப்பரமா
இங்க இருக்குற அரசியல்வாதிகளுக்கும் தோட்ட தலைவர்களுக்கும் நான் பதில்
சொல்லி சாகவா... என்று கூறும்போது இது தான் மலையகத்தில் ஊடக
பிரதிபலிப்பின் இன்றைய நடைமுறை விளங்கியது.


கண்டி உன்னஸ்கிரிய எயா பாக் தோட்ட மக்களின் நான்கு நாள் போராட்டமும் இந்த
பின்னையை கொண்டுதான் நடந்தது. அரசாங்கத்தின் இலங்கை பெருந்தோட்ட
கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் எயா பாக் தோட்டத்து மக்களுக்கு வருமானம் இல்லை. தனியார் தோட்டங்கலைப் போல  கூட்டு ஒப்பந்த அடிப்படையில்
சம்பள உயர்வு இல்லை. தேயிலைமரங்களை விட புல் வளர்ந்துவிட்டது. பாம்பு
அட்டை சிறுத்தை என உயிரினங்கள் அதிகரித்துவிட்டன. பல வருடகாலமாக வீதிகள்
சீரமைக்கப்படவில்லை.


பழங்கால கிராமமான மீமுரே க்கு போகும் ஒரே ஒரு பாதை என்பதால் குறித்த பாதைக்கு கார்பட் போட திட்டமிடப்பட்டது. ஆனால் பாதையை ஒரு பகுதியை ஒரு ஒப்பந்த காரருக்கும் இன்னொரு பகுதியைஇன்னுமொரு ஒப்பந்த காரருக்கும் வழங்கினார்கள். இரண்டு பக்கத்திலுமிருந்து வீதி காபர்ட் போடப்பட்டுக்கொண்டுவரப்பட்டது.ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.
கார்பட் போடுவது நிறுத்தப்பட்டது. பணமும் ஒதுக்கப்பட்டதுவரி செய்துள்ளோம்  என கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள். இன்று வீதியில் செல்லும் போது
வீதியின் ஆரம்பம் குன்றும் குழியுமாக இருக்கும் பிறகு மேடு ஆழமான குழி
ஒன்று இருக்கும் அதற்குப்பிறகு கார்பட் வீதி இருக்கும் அதற்கு பிறகு 
வழமைபோல குன்றும் குழியுமாக வீதி இருக்கும். இந்த வீதியினுள் சுற்றுலா
பயணிகள் சென்று வருகின்றனர். ஒரே ஒரு பஸ் இங்கு கடமையிலுள்ளது. காலியில்
ஏழு மணிக்கு வரும் பஸ் பின்னர் மதியம் 2 மணிக்கு வரும். இவ்வாறு ஒரு
நாளைக்கு இரண்டு தடவை வரும். இதனால் இப்பகுதியில் ஆட்டோதான் அதிகமாக
ஓடுகிறது. சிலநேரம் ஒரு ஆட்டோவில் ஒன்பது பேர் செல்லவேண்டிய
சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

இந்த பிரதேசத்தில் நவநகல தமிழ் வித்தியாலயம் இருக்கிறது இருந்தும் இந்த
பாடசாலைக்கு ஆசிரியர் பர்ராக்குறை மற்றும் பிள்ளைகளின் வருகை
குறைவடைந்துள்ளமையால் இந்த பாடாசாலையில் கற்றல் நடவடிக்கைகள் சீராகயில்லை
என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 400 கும் மேற்பட்ட மாணவர்கள்
இந்த பாடசாலையில் கல்விகாரராலும் இங்கு வருகைதர வீதி காலநிலை வறுமை போன்ற
காரணங்கள் பிரச்சசினையாக இருக்கின்றது என பெயர் குறிப்பிடவிரும்பாக
ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். 

வீடுகள் இன்னும் அதே லயன் வாழ்க்கைதான் அரசாங்க தோட்டம் என்பதால் மட்டும்
நிலைமை மாறவில்லை. வீட்டு கூரையில் இருக்கும் தகரத்துக்கு வீதிகளிலுள்ள
கற்கள் தான் காவல். 1000 பெருக்கும் மெல் வசிக்கும் தோட்டத்தில் வைத்தியசாலை இல்லை. பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணி பெண்களை
வீதியில் கொண்டு சென்றால் குழந்தை கிடைத்துவிடும் அல்லது செத்துவிடும்
என்ற நிலையில் கர்ப்பிணி பெண்கள் பல மாதத்துக்கு முன்னரே நகர்
வைத்தியசாலையில் தங்கிவிடுவார்.

976.74 ஹெக்டேயரை கொண்ட எயார் பார்க் தோட்டத்தில் 348 ஹெக்டேயரில் தேயிலை
இருக்கிறது. ஆனாலும் வழியில்லை என்கின்றது நிர்வாகம். இந்த நிலைமைக்கு
முழு பொறுப்புமே நிர்வாகம் தான் என குற்றம் சுமத்ததும் மக்கள் சில
விடயங்களையும் தெளிவுபடுத்தினார். அதாவது இந்த தோட்டத்தை முற்று முழுதாக
காடாக்கிய பின்னர் தாயாருக்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ
நிர்வாகம் தீர்மானித்து தான் தோட்டத்து பராமரிக்காமல் விட்டுள்ளது.
ஆனாலும் சில நல்ல தேயிலை உள்ள இடங்களை பராமரித்து வருகிறது. அங்கு தேயிலை
பறிக்குமளவுக்கு இருந்தாலும் அதனை பறிக்க இடமளிக்காமல் என்றாவது ஒரு நாள்
பறிக்க சொல்லுகின்ற்னர் என்கின்றனர் மக்கள்.அண்ணல் இந்த தோட்டத்தில்
கிட்டத்தட்ட 200 தொழிலார்களே வேலை செய்கின்றனர். 0வருமானம் இல்லாதகால்
ஆடை தொழிற்சாலைகளிலும் கௌம்புக்கும் இடம்பெறுகின்றனர்.

மேலும் இந்த பகுதில் சுற்றுலாத்துறையை விருத்திசெய்யவென ஹோட்டல்கள் மைக்க
திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. நாங்கள் பசுமையாக்கிய இடங்களை
எனக்ளுக்கு தெரியாமல் அரசாங்கம் தனியாருக்கு வழங்குவதில் என்ன நியாயம்
இருக்கிறது. அதனால் தான் நாங்கள் எங்களுக்கு இரண்டு ஏக்கர் காணியை
பிரித்து தாருங்கள் என போராடுகிறோம். அதுவும் குத்தகைக்கு தான்
கேட்கிறோம். இந்த போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் எதுவும் பேசாமல்
இருந்துவிட்டு இன்று அரசியல் வாதிகளும் இதற்குள் தலையிட்டு
குழப்பிவிடுகின்றனர்.

எங்கள் போராட்டத்தின் வெற்றியாக நாங்கள் கருதுவது எங்களது அனுமதி
இல்லாமல் தோட்ட காணியை தனியாருக்கு கொடுக்கப்போவதில்லை என பெருந்தோட்ட
கூட்டுத்தாபனம் எழுத்ததுமூலமாக அறிவித்தது. இது ஒரு வெற்றி. அடுத்ததாக
மூன்று கிழமைக்குள் எங்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் காணியை
பிரித்துத்தருவது தொடர்பாக பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளனர். அவர்கள்
அதனைம் எழுத்து மூலம் வழங்கியுள்ளனர். இவ்வாறு காலம் குறித்த கடித்தங்கள்
எமக்கு பெரிய ஆதாரமாக உள்ளன. வாக்குறுதி அளித்தபடி செய்யாவிட்டால் என்ன
செய்யலாம் என்பதையும் அடுத்து போராட்டத்தில் ஈடுபட காரணம்
கிடைத்துவிட்டதாகவே கருதுகினறோம்.

மக்களின் இந்த கருத்துக்களை அடிப்படையாக கொண்டு பெருந்தோட்ட
கூட்டுத்தாபனத்தின் தலைவர் திலக் மஹாநாமாவிடம் கேட்டபோது அவர் பிரதமரிடம்
இது தொடர்பாக தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கொம்போது உன்னஸ்கிரியாவில்
போராட்டம் நடந்தது. இது தொடர்பாக நாம் அடுத்து பிரதமரிடம் அடுத்த
வாரங்களில் கொதிக்க திட்டமிட்டுள்ளோம் இதில் அனைத்து தொழிற்சங்கங்கங்கள்
மற்றும் பாராளும்னர் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளவும்நித்தித்துள்ளோம்
என அவர் தெரிவித்தார். ஆனால் இது கடந்த பத்து வருடங்களாக நடந்து வரும்
ஒரு பிரச்சினை என்பதை மநல்லாட்சியிலுள்ள இவர்க்கு தெய்யாதுபோல தான்
இருக்கிறது. கடந்த அரசாங்கத்தில் இது பேசப்பட்டது ஆனால் அரசியல்வாதிகளால் பேச வேண்டாம் என அச்சுறுத்தப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

உன்னஸ்கிரிய போராட்டதாள் அரச முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் மக்கள்
பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (slspc ), அரச பெருந்தோட்ட யாக்கம் (jedb),
மற்றும் எல்கடுவை பிளாண்டேசன் போன்றவற்றில் இருக்கும் தோட்டங்களும்
தமக்கு நிலா உரிமையை வழங்கவேண்டுமென தெரிவித்து குரல் எழுப்ப
தொடங்கிவிட்டன. எனவே இந்த போராட்டம் இன்னு இருவாரங்களில் முற்று முழுதான
வெற்றியை பெறுமா எனபதாயி நாம் பார்க்கலாம்.அத்தோடு  உண்ணஸ் கிரிய
போராட்டத்ட்டுக்கு உணவளித்து தோள்கொடுத்த மனித உள்ளங்களுக்கும் நன்றி
என் மக்க கேட்டுக்கொண்டனர். 

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...