பாராளுமன்றில்சுயாதீனமாக செயற்படப்போவதாக ஜாதிகஹெல உறுமய கட்சியின் நிறுவுனர்களில் ஒருவரும் ஐக்கியதேசிய கட்சியின் தேசியல் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகைகள் எவ்வாறு அமையும் என்ற எதிர்ப்பார்ப்புடன் பரபரப்பையும் அரசில்க்காலத்தில் உண்டுபண்ணியுள்ளது.அவருடனான செவ்வி ஒன்று இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கான எஞ்சியிருந்த இரண்டு நியமனங்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.கே.எஸ் ரவீந்திர தெரிவித்துள்ளார்.
முன்னாள் நீதிபதி ஏ.டபிள்யூ.ஏ. சலாம் மற்றும் டாக்டர் செல்வி திருச்சந்திரன் ஆகிய இருவரது பெயர்களை அரசியலமைப்புச்சபை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த இருவரது பெயர்களையும் ஜனாதிபதி ஏற்றுள்ளாதாக அவர் இன்று தெரிவித்தார்.






