பாராளுமன்றில்சுயாதீனமாக செயற்படப்போவதாக ஜாதிகஹெல உறுமய கட்சியின் நிறுவுனர்களில் ஒருவரும் ஐக்கியதேசிய கட்சியின் தேசியல் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகைகள் எவ்வாறு அமையும் என்ற எதிர்ப்பார்ப்புடன் பரபரப்பையும் அரசில்க்காலத்தில் உண்டுபண்ணியுள்ளது.அவருடனான செவ்வி ஒன்று இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் நீங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்க அழுத்தம் கொடுத்த காரணம் என்ன?
நான் கூறிய கருத்துக்களை தவறுதலாக சிலர் பிரசுரித்து இருந்தார்கள். நான் தெளிவாகவே என்னுடைய கருத்தை முன்வைத்திருந்தேன். நான் சுயாதீனமாக செயட்படுவேன் என்பது உண்மை. ஆனால் நான் அரசாங்கத்திலிருந்து விலகுகிறேன் என்று அர்த்தமல்ல. நன் கூறும் கருத்துக்களுக்கு கட்சியோ அல்லது குழுவோ பொறுப்புக்கூறவேண்டி இருப்பதால் நான் எனது கருத்துக்களை சுயாதீனமாக கூரவுள்ளேன். இன்று இந்த நாட்டில் பலர் விரக்தியில் இருக்கின்றனர். அவர்களுக்கென குரல் இல்லை அவர்களுக்காக பேசவுள்ளேன். அந்த மக்களுக்காக ஒரு படையை உருவாக்கி அவர்களுடன் வேலை செய்யவுள்ளேன். அதனால் கட்சி அரசியலில் இருந்து விலகி தனித்து செயற்படவுள்ளேன்.
விஷேடமாக அரசியலமைப்பு. அரசியல் அமைப்பு தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தாலும் இதுவரை எந்தவிதமான நகலும் வெளியிடப்படவில்லை.பாராளுமன்றத்தின் ஆறாவது தெரிவுக்குழுவின் பரிந்துரைகள் வெளிவந்துள்ளன. அந்த திருத்தங்களின்படி தான் யாப்பு திருத்தம் அமையவேண்டும் என யோசனை பத்திரங்களை வெளியிட பட்டுள்ளது. அடுத்ததாக இதுவரை நாட்டிலுள்ள பொருளாதார முறைமை. இருந்து நான் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை.
இதற்கு முதலும் உங்களால் ஒரு அமைப்புரீதியான ஒரு படையை உருவாக்கினீர்கள் அதனால் பெற்ற வெற்றி பற்றி கூறமுடியுமா?
நினைத்த மாத்திரத்தில் ஒரு படையை உருமாக்க முடியாது. ஆனால் என்னுடைய உறுதியான நிலைப்பாடு என்றுமே மாறாது.அந்த அந்த சந்தர்ப்பங்களுக்கு பொருத்தமான படைகள் உருவாக்கப்பட்டன. தீவிரவாதத்துக்கு எதிரான படை மூலம் நாங்கள் அதிகமான பலத்தை பெற்றுள்ளோம். அதனூடாக பாரிய மாற்றமும் உருவானது. அதன் பின்னர் பிவிதுரு ஹெடக் (தூய்மையான நாளை) தேசிய சபை ஒன்றை உருவாக்கினோம். அந்த இயக்கத்தை நாம் விரிவுபடுத்துவதா? அல்லது வேறு பெயரில் கொன்டுசெல்வதா என்று நாம் கலந்து பேசிவருகின்றோம். இது புதியதொரு படையாக இருக்குமென நான் நினைக்கிறன். இது ஆட்சி மாறினாலும் நான் இறந்தாலும் இது நிறுத்தப்படாத ஒரு அமைப்பாக இருக்கும். இது ஒரு மாற்றுப் பாராளுமன்றமாக இருக்கும். இதனூடாக நாட்டின் புத்திஜீவிகள் பேசும் ஒரு மேடையை நாங்கள் உருவாக்குவோம்.
உண்மையாகவே நீங்கள் யார் மீது முரண்பட்டுள்ளீர்கள்? பிரதமர் ரணிலுடனனா? அல்லது ஜனாதிபதி மைதியுடனா?
என்னுடைய முரண்பாட்டை ஜனாதிபதிமீதா அல்லது பிரதமர் மீதா என பிரித்து கூறமுடியாது. இந்த நாட்டில் நடத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் மீது தான் என்னுடைய எதிர்ப்பு இருக்கின்றது. நான் விமர்சனம் செய்கின்றேன்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால புதிய அரசியலமைப்பு உருவாக்கினாலும் பெளத்தம் இருப்பதற்கும் சிங்கள இனத்திற்கான இடமும் எவ்விதத்திலும் மாற்றப்படாது என தெளிவாக கூறியுள்ளாரே?
அப்படி இந்த அரசாங்கத்துக்கும் செய்யமுடியாது என நான் நினைக்கிறேன்.
புதிய அரசியலமைப்பு எப்படி உருவாகியிருக்கும் என நீங்கள் கருதுகிண்றீர்கள் ?
தற்போது இருக்கும் விடயங்கள் தொடர்பாக நாம் பார்க்கவேண்டும். எந்தவொரு கட்சிக்கும் இம்ம்பு பலம் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரதிநித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மஹிந்த ராஜபக்ச பிரதிநித்துவப்படுத்தும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்பனவும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் அரசியலமைப்பு வேண்டாம் என கூறுகின்றனர். நாங்கள் ஒருமைப்பாட்டை நீக்கும் சட்டமூலத்தை கொண்டு வந்தோமென்றால் நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது. நான் தெளிவாக கூறுகிறேன். யுத்தத்துக்கு பின்னர் நாங்கள் வடக்கு மக்களின் மனங்களை வெல்லும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. வடக்கில் இனவாதம் நடந்தது. தெற்கிலும் நடந்தது. தெரிந்து தெரியாமலும் நடந்தன. நாங்கள் பாரியளவில் தீவிரவாத கிளர்ச்சிகளை முகம் கொடுத்தோம்.மிகப்பெரிய யுத்தத்தை வெற்றிக்கண்டோம். வடக்கு யுத்தத்தை மையமாக கொண்டு தெற்கிலும் கிளர்ச்சிகள் உருவாகின. இதனால் 66 ஆயிரம் இளைஞர்களின் வாழ்கை இழந்தனர்.
அரசியலமைப்பு திருத்தத்தில் செய்யவேண்டியவற்றை செய்யவேண்டும். ஒற்றையாட்சியை இல்லாமாக்கும் சட்டமூலம் அந்த சட்டமூலம். அதுவொரு கருத்து மட்டுமே. அது அரசியமைப்பு அல்ல.சர்வஜன வாக்கெடுப்புக்கு கொண்டு செல்லும் முறையில் ஊதிய அரசியலமைப்பினை உருவாக்கமுடியாது. அதிகாரமில்லாத அரசாங்கத்தை ஏன் கொண்டுநடத்த வேண்டும். ஏன் இத்தகைய சச்சரவை உண்டாக்கவேண்டும். எங்களுக்கு செய்யவேண்டியதை செய்யமுடியாது.
தற்போதைய பொருளாதார கொள்கைகள் தொடர்பாக திருப்தியடைகின்றீர்களா?
சத்தியமாக இல்லை. மிகவும் தீவிரமான பொருளாதார பிரச்சினை உருவாகியுள்ளது. அதற்கு பிரதான காரணம் கடன் சுமை. அதிவேக நெடுஞ்சாலைகளை உருவாக்கினால் அடுத்த ஒரு வருடத்தில் இரண்டு வருடத்தில் செலவை திருப்பி செலுத்த முடியமா? வாங்கும் கடனை தவணை அடிப்படையில் செலுத்த வேண்டும். அப்படியில்லையென்றால் மிகப்பெரிய பிரச்சினை உருவாகும். அதற்காக நாம் வேறு ஒரு இடத்தில் கடன் வாங்குகிறோம். இல்லையென்றால் மிகப்பெரிய முதலீட்டை உள்வாங்குகின்றோம். இதனால் ஓரளவாவது அந்நிய செலாவணியின் மூலம் நடத்தி செல்லமுடியும்.
ஆனால் நாம் கடனை வாங்குவதிலேயே அதிகம் நாட்டம் காட்டுகின்றோம். துறைமுகத்தை விருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னைய ஆட்சிபோல இந்த ஆட்சி இல்லை ஆந்த ஆட்சியைவிட அதிகமாக மாற்றத்தை கொண்டுவர முடியும் என கதைத்தார்கள். அந்நிய செலவாணி கட்டுப்பாடு மற்றும் வெளிநாட்டு கடன்களை செலுத்த வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்தையும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் எங்களது சொத்துக்களை விற்கவேண்டியுள்ளது. காணிகளை விற்க்கவேண்டியுள்ளது. இதுதான் நமக்குள்ள தீர்வா? இதனைவிட வேறு ஏதாவது தீர்வு இருக்கின்றதா என ஒன்று சேர்ந்து கலந்துரையாடவேண்டும். வரிவிதிக்கவேண்டும் ஆனால் அதற்கென்ற முறையான வாரிக்கொள்கை உருவாக்கப்படவேண்டும். எந்த இடங்களின் வரி விதிக்க வேண்டும்.தொழிநுட்பரீதியாக எளிய முறையில் சிகரெட்டுக்கு வரிவிதிப்பதா? மதுபோதையில் வரியை பெருகின்றோமா? சூழலுக்கு எதிரானவர்களிடமிருந்து பெறப்போகின்றோமா? இதற்காக வெளிப்படையான புத்திஜீவிகளுடன் கதைத்து கொள்கைகளை உருவாக்கவேண்டும். ஆனால் ஒருவர் இவரின் தேவைக்காக எதனையும் உருவாக்கமுடியாது. இது அழிவைத்ததும்.
அத்துரலிய ரத்ன தேரர் யாரோ ஒருவருடைய ஒப்பந்தத்துக்கமைய செயற்படுவதாக சமூக ஊடங்கங்களில் ஒரு கருத்து நிலவுகின்றதே?
இது அடிக்கடி சொல்லப்படுகின்ற கதைதான். கடந்த அரசாங்கத்தை கவிழ்க்க இந்தியாவிடமிருந்து பணம் பெற்றதாக கூறினார்கள். இவர்களை நான் ஐந்து சதத்துக்கும் கணக்கெடுக்கவில்லை. அதுதான் எனக்குள்ள பலம். குரலற்ற மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என நான் நினைக்கிறன். நான் ஒப்பந்தகாரர் இல்லை என மக்களுக்கு தெரியும். பாராளும்னர்த்ததுக்கு மக்களுக்காவே சென்றேன் அதனை நான் செய்வேன்.
அரசாங்கத்துக்கு எதிராக நீங்கள் எடுத்த தீர்மானம் யதார்த்தமானது என்றால் பாராளுமன்றிலிருந்து விலக வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் கூறியிருந்தார்?
எனக்கு பதவி விலக முடியும். ஏதாவது குரல் கொடுக்க வேண்டும் என்றால் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலா? அல்லது வெளியேறினாலா? அந்த குரலை கொடுக்க முடியும் என சிந்திக்க வேண்டும். எனக்கு தனியே முடிவெடுக்க முடியாது. தூய்மையான நாளை தேசிய சபை இருக்கிறது. என்னோடு பலர் இருக்கின்றார்கள். ஜனாதிபதியை இந்த பதவிக்கு கொண்டுவர வேலை செய்த பலர் என்னோடு இருக்கின்றார்கள். அவர்களுடன் பேச வேண்டும். இது ஓமல்பே சோபித தேரரின் கருத்து. இது நல்ல கருத்து. எம்மால் இதனை பற்றி பேசி தீர்மானிக்கமுடியும்.
ஜாதிக ஹெலஉறுமயவுடன் இணைந்து எதிர்கால அரசியலை செய்வீர்களா? உங்காத்து எதிர்கால அரசியல் பாதி எப்படியாக இருக்கும்?
அரசியல் கூட்டணி எந்த சந்தர்ப்பத்தில் உருவாக்கவேண்டும் என நான் சிந்திக்கவேண்டும். அந்த சந்தர்ப்பத்தில் உருவாக்கம் பெரும். ஹெல உருமையவுடன் இணைந்து மட்டுமல்ல வேறு எந்த அரசியல் கட்சியுடனும் அரசியல் செய்ய முடியாது என நான் கருதுகிறேன்.
நன்றி-லக்பிம
தமிழில்-சூரியன்
No comments:
Post a Comment