- மொரவெவ எல்லைக்கிராமம்
இந்த காட்டுக்குள் வரும்போதெல்லாம் இந்த இடத்தில் தான் நீ பிறந்தாய் உனக்கு பின் யாரும் இங்கு பிறக்கவில்லை. இது எங்களது சொந்த மண் என்று அம்மா என்னை பார்த்து கூறும் ஒவ்வொரு தடவையும் இந்த மண்ணில் தான் இனி வாழ வேண்டும் என்று என் ரத்தம் கொதிக்கும். ஆனால்எப்படி இங்கு வாழுவது என்று நினைக்கும்போது கொதிக்கும் இரத்தம் ஆறிவிடும். இந்த வார்த்தைகள் வெளிவரும்போது கண்ணீர் வெள்ளத்தை தடுக்க முடியவில்லை. பிறந்த மண்மீது இனம்புரியாத ஏக்கம் அவனுக்கு.
பிறந்தோம் வளந்தோம் என்று வாழும் இந்த காலத்தில் கூட 23 வயது இளைஞன் தன்னுடைய மண் மீது அளவில்லாத காதல் கொண்டிருக்கிறான். அவனது அம்மாவின் உறுதியான வார்த்தைகள் தான் இன்று மண் மீதான இலட்சிய வெறியை உண்டுபண்ணியுள்ளது. அவன் பெயர் சாந்த. 1993 ஆம் ஆண்டு பிறந்து சில வாரங்களே ஆன குழந்தையோடு ஊரை விட்டு வெளியேறி தனதுயிரையும் உயிருக்குயிரான தனது குழந்தையையும் சுமந்துகொண்டு வெளியேறினாள்வெ ஆரியவாதி. வெளியேறியது இவளது குடும்பம் மட்டுமல்ல மொத்த மொரவெவ மக்களும் தான்.
அன்று விடியல் காலை 2 மணி இருக்கும் நாங்கள் இருந்த வீட்டுக்கு கிழக்கு பக்கம் வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. கைல் கிடைத்த பொருட்களை சுத்திக்கொண்டு குழந்தையையும் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் ஓடினோம். குழந்தைகள் சத்தமிடும் என்பதால் சில நேரங்களில் வாயை முடியும் கொண்டு சென்றோம். சத்தம் கேட்டு காட்டுக்குள் தாக்குதல் நடத்தலாம் என்ற பயத்தில் முடிந்தவரை காட்டை விட்டு வெளியேற நினைத்து ஓடினோம். கீழேவிழுந்தோம். அதனால் ஏற்பட்ட ரத்தத்தை துடைத்து எரிந்துவிட்டு உயிரை காத்துக்கொள்ள ஓடினோம். நான் பிழையை பெற்று சிலவாரங்களே ஆன தாய் என்று கூட எனது கணவர் பார்க்கவில்லை இழுத்துக்கொண்டு சென்றார் ( மெளனம்) (சிறிது நேரத்தின் பின்னர் கண்ணீர் வெள்ளம் நிலத்தை நனைத்தது) பெற்ற குழந்தையைஆளாக்கிவிட வேண்டும் என்பதே கண்ணீரில் நிலத்தை நனைக்கும் ஆரியவதியின் இன்றைய கனவாகவும் கவலையாகவும் இருக்கிறது.
1994 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அனுராதபுரத்தின் எல்லை கிராமமான மொரவெவவில் இரண்டு இளைஞர்களை விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் பிடித்து சென்றதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். அன்று தொடக்கம் இந்த மக்களுக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் கூறுகின்றனர். அன்றைய காலகட்டத்தில் தனது பிள்ளைகள் வேலைக்கு பொய் வீடு திரும்பாமல் இருந்தலாய் பதுறும் தாய்மார்கள் இன்றும் அதனை பற்றி பேசும் போது பதற்றத்துடனேயே பேசுகின்றனர். இரண்டு இளைஞர்களை பிடித்துச்சென் ற பின்னர் புலிகள் இயக்கத்துக்கும் இப்பகுதி மக்களுக்குமிடையே வெறுப்புணர்வும் அதிகரித்தது. தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டு வந்ததாக வயது முதிர்ந்த ஒரு ஐயா கூற இன்னுமொருவர் 1994 ஆம் ஆண்டு வரை நாங்கள் சந்தோசமாக இருந்தோம் அதுக்கு பின்னர் தான் நாங்கள் உண்ண உணவின்றி இருக்கிறோம் என்கிறார். 1994 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து ஹல்மிட்டிகள என்ற இடத்தில் வாழும் இவர்கள் அனைவருக்கும் மொரவெவ கிராமமே சொந்த இடம். யுத்தம் முடிந்த பின்னர் இன்று சொந்த இடத்துக்கு திரும்பியிருக்கும் இவர்கள் வாழ் எந்த பொருத்தமும் இல்லாத இடமாக மொரவெவ காணப்படுகிறது.
இருந்தாலும் இந்த இடத்தில் தான் வாழவேண்டும் என்றும் இந்த மண் செல்வம்கொழிக்கும் மண் இந்த இடத்தில் தான் வாழவேண்டுமென்றும் கூறுகின்றார்கள். ஆனால் சுமார் 23 வருடங்கள் கழிந்து ஒரு இடத்துக்கு வரும்போது அந்த இடம் என்ன பசுமையாகவா இருக்கும்? பற்றை காடாகிவிட்ட இந்த கிராமத்தை பசுமை பூமியாக்கவேண்டுமென போராடுகிறா ர்கள் மொரவெவ மக்கள்.
மொரவெவ ஒரு சிங்கள கிராமம். அனுராதபுரத்தின் எல்லைக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை தமது பிரதான ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளனர். மேற்படி கிராமங்கள் உலர் வலயத்தில் அமைந்துள்ளதால், மழை வீழ்ச்சி என்பது வருடத்தின் சில மாதங்களுக்கு, பெரும்போக செய்கையின் போது மட்டுமே கிடைக்கின்றது.
வரட்சியான மாதங்களில் பயிர்ச்செய்கைக்கு இந்த விவசாயிகள் இப்பிரதேசத்தை அண்மித்து காணப்படும் நீர்ப்பாசனக்குளங்களில் அதிகளவு தங்கியுள்ளனர். ஆனாலும், கடந்த மூன்று தசாப்த காலங்களில் நிலவிய யுத்தம் காரணமாக, சில விவசாய குளங்கள் போதியளவு கவனிப்பு, பராமரிப்பு இன்மை காரணமாக பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன. நீர்த்தேக்கப்பணிகள் மற்றும் கால்வாய்கள் பழுதடைந்துள்ளமையால் போதியளவு நீரை தேக்கி வைத்திருக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரங்களுடன் பின்னிப்பிணைந்துள்ள மேற்படி கட்டமைப்புகள், பழுதடைந்து காணப்படுவதால், வருமானமீட்டலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கிராமத்தாரின் பொருளாதார உறுதிப்பாட்டையும் பாதிக்கின்றன.
வீடில்லாமல் மொரவெவ காட்டில் குடில்களை அமைத்துக்கொண்டு வாழும் 42 விவசாய குடும்பங்கள் இந்த பகுதியில் வசிக்கின்றனர். அந்த பகுதியில் இருக்கும் பல வயல்வெளிகளில் கூலிக்கு வேலை செய்யும் இந்த மக்கள் தற்போது சொந்த மண்ணில் வாழ் மொரவெவ குளத்தை கட்டித்தருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர். பல தொண்டு நிறுவங்கள் வந்து என்ன பிரச்சனை என்று கேற்பதோடு நின்றுவிடுகிறது. உதவி என்று யாரும் செய்வதில்லை என்றும் கவலை கொள்கின்றனர்.
நாங்கள் வாழ்ந்த இந்த மண் எப்படி இருந்தாலும் அதனை நாங்கள் பசுமையாக்கிவிடுவோம் அதற்கு எங்களுக்கு வயல் மட்டுமே இப்போதைய தேவை. நான் இந்த மண்ணின் மூன்றாவது தலைமுறை அதனை வாழவைக்க நான் போராடுவேன். என்று வீறாப்புடன் வயல் வேலைக்கு தயாராகிறார் ஷாந்த. காட்டு யானை எப்போது வருமென்று யாருக்கும் தெரியாது என்ற பயத்தையும் கூறிவிட்டு தான் போகிறார்.
ஏ.ஜெயசூரியன்
No comments:
Post a Comment