ஜனாதிபதிக்கு கடிதம்
அரசாங்கம் வருடாவருடம் நடத்திவரும் அரச நாடக விழாக்களில் தமிழில் சிறுவர் நாடகங்கள் நடத்தப்படுவதில்லை. 2012 ஆம் ஆண்டு அரச நாடக விழாவில் 68 ஆக இருந்த தமிழ் சிறுவர் நாடங்கங்கள் இன்று 03 நாடகங்கள் என வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் தமிழ் சிறுவர்களுக்கான நாடகத்துறை மிகவும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. இது தொடர்பாக தொடர்ச்சியாக பேசிவரும் அரச தமிழ் சிறுவர்களுக்கான நாடக விழா வெற்றி பெறுவதற்கான அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் அரச சிறுவர்களுக்கான நாடகங்களில் தமிழ் சிறுவர் நாடகங்கள் உள்வாங்கப்படுவது குறைவாக இருந்துவருகின்றமை தொடர்பாக தாம் ஏற்கனவே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடக தெரிவுக்குழுவோடு கலந்துரையாடலை மேற்கொண்டது. இக்கலந்துரையாடலில் தமிழ் சிறுவர் நாடகங்கள் தொடர்பாக முழுமையான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக உறுதியளித்தது. இந்த அறிவிப்பை தமிழ் சிறுவர்களுக்கு எழுத்துமூலமான அறிவிப்பாக வெளியிடுவதாகவும் அறிவித்தது. ஆனால் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாது 50 சதவீதமான தமிழ் சிறுவர்களை தவிர்த்து அரச நாடக விருது விழா நடந்தது. அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு தமிழ் சிறுவர்களுக்கு சிறுவர் நாடகம் தொடர்பாக செயலமர்வுகளை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது அதுவும் நடத்தப்படவில்லை.
இந்த விவகாரம் பற்றி தெரிவுக்குழுவிடம் தொடர்ச்சியாக வினவியபோதும் அவர்கள் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதனையும் நாம் அறிந்து கொண்டோம். உண்மையில் தமிழ் சிறுவர் நாடகங்களை நடத்துவதில் அரசாங்கத்துக்குள்ள பிரச்சினை என்ன என்பதை எம்மிடம் தெரிவிக்க வேண்டும். தமிழில் சிறுவர் நாடகங்களை உருவாக்கிய பயிற்றுவிப்பாளர் மற்றும் துறையில் சிறந்து விளங்கும் தமிழர்கள் எங்கள் மத்தியில் இருக்கின்றனர்.
வடக்கு கிழக்குக்கு நல்லிணக்கம் ஏற்படுத்த செல்வதாக கூறும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த தமிழ் சிறுவர்களுக்கான நாடக விழா தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ் சிறுவர்களுக்கென அவர்களது நாடக துறை வளர்ச்சிக்கென தமிழ் சிறுவர் நாடக விழாவையா அல்லது தமிழர் நாடக விளவையா நடத்த வேண்டும் என்பதை தங்களது அவதானத்துக்கு கொண்டுவந்துள்ளோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.ஜெயசூரியன்
No comments:
Post a Comment