2020 ஆம் ஆண்டு வரை இந்த அரசாங்கம் கவிழ்ந்துவிட போவதில்லை. அதற்கும் இடமளிக்க முடியாது, உயிர் தியாகம் செய்து இந்த அரசாங்கத்தை உருவாக்கினோம்.இந்த சதித்திட்டங்களுக்கு கவிழ்ந்துவிடும் அளவுக்கு இருக்க மாட்டோம் என்று தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஐதேகவினர் ஆட்சியை கவிழ்க்க எதுவுமே செய்யவில்லை. ஆதியை உருவாக்கிய பின்னர் கோர்ட் டை கட்டிகளை கட்டிக்கொண்டு அமைச்சுக்களை வாங்கினார்கள். அதனால் அவர்களுக்கு உருவாக்கப்பட்ட ஆட்சி பற்றிய எந்தவிதமான உணர்வும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலும் அப்படியானவர்கள் இருக்கின்றார் கள்.அவர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இருந்துவிட்டு வந்து சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் அந்த உணர்வு இல்லை. இனி அன்று எங்களுக்கு எதிராக இருந்தவர்களுடடனேயே இன்று வேளை செய்யவேண்டி இருக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல ஒரு சிறந்த அரசியல் தலைவர் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
நல்லாட்சி உருவாக்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.ஆனால் இந்த காலப்பகுத்திக்குள் அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து கருத்து முரண்பாடும் உக்கிரமடைகின்றனவே?
அரசியல் கட்சிகளுக்கிடையில் பல கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. அதே போல அவர்கள் சமூக ஊடகங்களிலும் துண்டு பிரச்சாரங்கள் மூலமும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்பது தான் நோக்கமாக உள்ளது. ஆனால் புதிய அரசாங்கத்தை உருவாக்குவது என்பது கருத்து மட்டத்தில் கூட இல்லை என்று தான் கூற வேண்டும். அவர்களிடத்தில் இருப்பது எதிர்க் கருத்து மற்றும் முரண்பாடு என்பனவே. அந்த கருத்துக்களை நாம் பரிமாறிக்கொள்கின்றோம். ஆனால் ராஜபக்ஷ அரசாங்கம் பற்றி அல்ல. ஆட்சியை கவிழ்க்கவேண்டும் என்று குறித்த விமர்சக குழுக்களிடம் எந்த கருத்தும் இல்லை.
அரசாங்க தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறினாலும் மக்கள் குறை கூற என்ன காரணம்?
எங்களது மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத சிலரே இவ்வாறு குறை கூறுகின்றனர். நாட்டிலுள்ள மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை கல்வி கேட்க தகவலறியும் சட்டத்தை கொண்டுவந்தோம். கணக்காய்வு சட்டத்தை கொண்டு வந்தோம். பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு பற்றிய சட்டம் போன்றவற்றை நாம் தான் கூறினோம் அதன் படி அது இன்று நடைமுறைக்கும் வந்துவிட்டது. ஜனாதிபதியை தெரிவுசெய்தால் அதிகாரத்தை குறைப்பதாக கூறினோம் அதன்படி அதிகாரத்தை பாராளுமன்றத்தோடு கூட்டிணைத்தோம் . மஹிந்த ராஜபக்ஷ தானே தொடர்ந்து பதவியில் இருக்க ஒரு அரசியலமைப்பினை உருவாக்கினார். ஆனால் இந்த ஜனாதிபதி அவ் வாறு இல்லை. ஜனாதிபதி பதவி காலத்தையும் ஒழுங்கமைக்கும் விதிமுறைகளையும் அவர் கொண்டுவருவார். இவற்றை தான் எதிர்தரப்பால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றவாளிகள் சிறைக்குள்ளே சென்று மீண்டும் சிரித்துக்கொண்டு வெளிவருவதுமாகவே இருக்கின்றதே?
உண்மைதான். இன்றும் அந்த நிலை இருக்கின்றது. நாங்கள் அரசாங்கத்தை கவிழ்கவென உயிரை தியாகம் செய்து தான் வெளியே வந்தோம். ஆனால் இன்று வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றோம்.இருந்தாலும் சில விடயங்களுக்கு முறையான திட்டங்கள் வகுக்கப்படவில்லை. ஆட்சி அமை க் கும் போது ஒன்றாக சேர்ந்து செய்யவேண்டும் என்று தெரியாதவர்கள்தான் இருக்கின்றார்கள். இப்படி சில பொறுப்பற்ற தன்மையும் இருக்கின்ற படியால் விமர்சங்கள் வருகின்றன.அத்தோடு சிலர் எந்த ஆட்சி மாறினாலும் தாங்கள் அதிலேயே இருக்கவேண்டும் என சில வேலை செய்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்கும்போதும் அப்படித்தான் வேலை செய்தார்கள்.
இப்படி வேலை செய்பவர்கள் ஐதேக வினரா அல்லது சிறிலங்கா சுதந்திர கட்சியினரா?
இரண்டு பக்கத்திலும் குறித்த பிரிவினர் இருக்கின்றனர். ஐதேகவினர் ஆட்சியை கவிழ்க்க எதுவுமே செய்யவில்லை. ஆதியை உருவாக்கிய பின்னர் கோர்ட் டை கட்டிகளை கட்டிக்கொண்டு அமைச்சுக்களை வாங்கினார்கள். அதனால் அவர்களுக்கு உருவாக்கப்பட்ட ஆட்சி பற்றிய எந்தவிதமான உணர்வும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலும் அப்படியானவர்கள் இருக்கின்றார் கள்.அவர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இருந்துவிட்டு வந்து சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் அந்த உணர்வு இல்லை. இனி அன்று எங்களுக்கு எதிராக இருந்தவர்களுடடனேயே இன்று வேளை செய்யவேண்டி இருக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல ஒரு சிறந்த அரசியல் தலைவர் இருக்கிறார்.
ஐதேக ஸ்ரீசுக அரசாங்கம் மீது மக்களுக்கு அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் இல்லை என்றால் தனியாக ஒரு அரசாங்கத்தை ஏன் உருவாக்க முடியாது?
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கும் போது பாராளுமன்றில் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிரடைத்தாலும் தனியாக ஆட்சி அமைக்க மாட்டோம் என ரணில் விக்ரம சிங்க தெரிவித்தார். அவர் அவாறு கூறுவதட்கு காரணம் தங்களது கட்சி பெரும் வெற்றியை விடவும் நாட்டுக்கு கிடைக்கும் வெற்றியை பற்றியதாகும். காட்சிகள் இரண்டையும் ஒன்றிணைத்து நாட்டிலுள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டுமென நினைத்தார். தேசிய நல்லிணக்க தம்மால் உருவாக்கமுடியும் என்று நமித்தான் இதனை அவர் செய்தார். இந்த இருகட்சிகளும் பல வருடகாலமாக கோபபமாகஇருந்தவர்கள் அனால் இன்று முழு உலகமும் இந்த ஒற்றுமையை ம்பற்றி கதைக்கிறது. இந்தியாவில் மோடி அரசாங்கம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்று கூறினால் இலகுவான காரியம் அல்ல. பல வருடங்கள் இரண்டு பக்கமும் அரசியல் அனுபவம் பெற்றவர்களை வைத்துக்கொண்டு விலை செய்வது இலகுவான காரியம் இல்லை. அத்தனையும் நாம் உணரவேண்டும்.
நல்லாட்சிக்கான உழைத்த சிவில் சமூகங்கள் எல்லாம் இப்போது விலகித்தானே நிற்கின்றன?
இல்லை அப்படி விலகி நிற்கவில்லை. இன்றும் நாங்கள் அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்கிறோம். இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலுள்ளவர்கள் என்ன செய்கியின்றார்கள்? தங்களது ஆடையில் இருக்கும் சிறிய கறையை தந்து வீட்டு குழாயில் கழுவாமல் சந்தியில் இருக்கும் குழாயில் கழுவுகின்றனர். இஇதனால் ஆடையில் இருந்த சிறிய கறை முழு உலகத்துக்கும் தெரிகிறது. சிவில் சமூகங்கள் விமர்ச்சித்தாலும் பரவாயில்லை என்று தான் இவர்கள் இப்படி செய்கின்றனர்.ஊடங்களில் அதிகமாக வெளிவருபவை விமர்சனங்கள் நல்ல விடயங்களை பத்திரிகையில் பிரசுரித்தல் மக்கள் பார்ப்பதில்லை. தொலைக்காட்சி பார்ப்பது இல்லை. இது ஒருவித கவனயீனம். சிவில் சமூகங்கள் அரசை வேவுபாய்க்கவேண்டும். குறை நிறைகளை கூறவேண்டும். இதனால் அவர்கள் மீண்டும் மஹிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருகின்றார்கள் என்று இல்லை. அவர்கள் ஜனாதிபதிப்பதவிய தட்டிப்பறிக்க இவற்றை செய்யவில்லையே. இந்த அரசாங்கத்தை விரட்டினால் மஹிந்த அரசாங்கம் தான் அடுத்து ஆட்சிக்கு வரும் என்பதனை சிவில் சமூகங்கள் அறிந்து தான் வைத்துள்ளார்கள்.
ஆட்சியில் இருக்கும் மேலேகுறிப்பிட்டது போன்ற சில ஸ்ரீசுக பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது எதிரணியில் உள்ளவர்கள் அப்படியும் இல்லை என்றால் பொதுஜன பெறமுன போன்ற கட்சிகளுடன் அரசியல் செய்ய தயாராக இருக்க வேண்டுமே?
ரணில் விக்ரமசிங்க தனது நெருங்கிய நண்பர்கள் சமூகத்துடன் இணைந்துதான் நாட்டை நிர்வகிக்கிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
தனது நண்பர்களை பாதுகாக்க அவர் எடுக்கும் சில நடவடிக்கைகள்தான் இவ்வாறு குற்றம் சுமத்த காரணாமாக அமைகின்றன.தன்னைப்போல தனது நண்பர்களும் நேர்மையானவர்கள் என்று பிரதமர் நினைக்கின்றார். நம்பிக்கையானவர்கள் என்றும் நினைக்கின்றார். இதனால் தான் இந்த வார்த்தைகள் வெளிவருகின்றன. எனக்கு தெரிந்தவகையில் நபருக்கு பழிச்சொல் உருவாகாமல் பார்ததுக்கொள்வது தான் நல்ல நட்பு.
விசேட அபிவிருத்தி சட்டமூலம் என்பான் அனைத்து மாகாணசபைகளினாலும் தோற்கடிக்கப்பட்டது தொடர்பாக..?
குறித்த சட்டமூலம் பற்றி எனக்கு வேறுவிதமான விமர்சனமே இருக்கிறது. அந்த காலப்பகுதிக்கு நான் இலங்கையிலிருக்கவும் இல்லை. மாகாண சபை அனுமதியை பெற அனுப்பியது மிகவும் முட்டாள் தனமான ஒரு நடவடிக்கை. தோற்கடிக்கப்படும் என்று தெரிந்துதான் அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கு முதல் அனைத்து முதலமைச்சர்களையும் அழைத்து கலந்துரையாடி இருக்கலாம். சட்டம் சரியானதா பிழையானது என்பதல்ல பிரச்சினை. அதை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதே இங்கு முக்கியமானது. பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முதல் இது தொடர்பாக கலந்துரையாடி இருக்கலாம். பிரதமர் அதனை செய்திருக்க வேண்டும். இப்படி செய்யாமல் அதனை சமர்ப்பித்தமையானது அரசாங்கத்தின் மீதான அபிப்பிராயத்தை குறைத்திக்கொள்வதாக அமையும். இதில் பல குறைபாடுகள் இருக்கின்றன. இது பரிசீலிக்கப்படும்.
சுப்பிரி அமைச்சர்கள் பற்றி?
அது முற்றிலும் பொய்யான தகவல். எதிர்க்கட்சிகளின் பேசும் பொருளாக இருந்தது. மாகாண சபைகள் அமைக்கும் பொது இதேமாதிரியான கருத்துக்கள் வெளிவந்தது ஞாபகம் இருக்கும். ஆனால் இதிலுள்ள ஒரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால் நல்ல நோக்கத்துக்கு என வேலைசெய்பவர்களுக்கு எதிராக நிதிமன்றத்துக்கு செல்ல முடியாது ஒரு பிரிவு கூறுகின்றது. அமைச்சுப்பதவியை பெரும் எல்லா அமைச்சரும் போதி புத்தன் அல்ல. அப்படியாயின் திருடியவர் கூட சொல்லலாம் நல்ல நோக்கத்துக்காக திருடினேன் என்று. ஜனாதிபதி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் நோக்கோடு செயற்படும்போது இன்னொரு குற்றத்தினை செய்ய கூறுகின்றார்கள். இந்த சட்ட மூலத்தை உருவாக்கிய சட்டத்தரணி யார் என்பதே எனக்குள்ள பிரச்சனை. நானும் தேடி பார்க்கின்றேன்.
2017 இல் இந்த அரசாங்கம் உடைஉந்துவிடுமா?
2020 ஆம் ஆண்டு வரை இந்த அரசாங்கம் கவிழ்ந்துவிட போவதில்லை. அதற்கும் இடமளிக்க முடியாது, உயிர் தியாகம் செய்து இந்த அரசாங்கத்தை உருவாக்கினோம்.இந்த சதித்திட்டங்களுக்கு கவிழ்ந்துவிடும் அளவுக்கு இருக்க மாட்டோம்.
சமன் பிரியங்கர
நன்றி லக்பிம
தமிழில் சூரியன்
No comments:
Post a Comment