Monday, January 9, 2017

தாமதமாகும் தேர்தல் ஜனநாயகத்தை பாதிக்கும்

 தேர்தல் திணைக்களம் 
சுயாதீனமான ஆணைக்குழு என்றாலும் எமக்கு தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் இல்லை. அதேநேரம் தேர்தலை தாமதப்படுத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தேர்தலை வெகுவிரைவில் நடத்தி மக்களின் சர்வஜன வாக்குரிமை பலத்தை அரசாங்கம் பாதுகாக்கும் என நம்புகிறோம் எனவும் தெரிவித்தார். 
நேற்று ராஜகிரியாவிலுள்ள தேர்தல் திணைக்களத்தில் நடந்த வாக்காளர் பதிவு தொடர்பான செயலமர்வு ஒன்றின் முடிவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவித்ததாவது

2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பதினெட்டு வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் வருகின்றனர். ஜூன் முதலலாம் திகதி தான் 18 வயது பூர்த்தியாவது கணிக்கப்படும். இடைப்பட்ட காலத்தில் தேர்தலை நடத்தும்போது 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் வாக்காளர்களாக உள்வாங்குவதில் சிக்கல் ஏழுகிறது. இந்த சிக்கலை தீர்க்க ஒவ்வொரு நான்கு மாதத்துக்கும் ஒருமுறை 18 வயது பூர்த்தியாக்கப்பட்டவர்களின் பெயர்விபரங்களை பதிவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் தேர்தல் திகதியன்று 18 வயது பூர்த்தியானவரை வாக்காளராக பதிவுசெய்யமுடியும்.

இது தொடர்பாக சுமார் 2 லட்சம் இளைஞர்களின் கையெழுத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று தெரிவிக்கப்பட்டது. அதில் வாக்காளர் பதிவு தொடர்பாக திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி வாக்காளர் சட்டத்தை திருத்த திட்டமிட்டுள்ளோம். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சிகளுடனும் பேசிமுடிவெடுக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நம்பிக்கையை பெறுவதன் மூலமே இலத்திரனியல் வாக்குப்பதிவுக்கு நாம் செல்ல முடியும் அதற்கென ஆழமான ஆராய்வுகள் தேவை. எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் இலத்திரனியல் வாக்குப்பதிவு இலங்கையிலும் சாத்தியப்படலாம்.

அரசியல் காட்சிகள் அனைத்துக்கும் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலை இருக்கின்றது. தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் திணைக்களம் தீர்மானிக்க முடியாது. அதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தால் மாகாண சபைகளிலுள்ள குறித்த அமைச்சுக்களை அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் எந்தவொரு நாட்டிலும் தேர்தல் திணைக்களத்துக்கு அவ்வதிகாரம் வழங்கப்படவில்லை. அதேபோன்றே எமக்கும் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை. தேர்தல் திணைக்களம் சுயாதீனமான ஆணைக்குழு என்றாலும் எமக்கு அந்த அதிகாரம் இல்லை. அதேநேரம் தேர்தலை தாமதப்படுத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தேர்தலை வெகுவிரைவில் நடத்தி மக்களின் சர்வஜன வாக்குரிமை பலத்தை அரசாங்கம் பாதுகாக்கும் என நம்புகிறோம்.
ஏ.ஜெயசூரியன் 

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...