Sunday, December 25, 2016

இலங்கை சினிமாவில் மலையக தமிழர்களின் பங்களிப்பு

ந்திய வம்சாவளிகள் இன்று தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாமல்
போராடிக் கொண்டிருக்கிறனர். ஆனால் அவர்கள் இருப்பில்லாதவர்கள் இல்லை. வளர்ந்து வந்த அரசியல் சமூக காரணங்கள் இருப்பை கேள்விக்கள்ளாக்கியது
என்பதை மறுக்கமுடியாது. வரலாறும் உள்ளது.தமது வாழ்வியலை அவர்கள்
படம்பிடித்து காட்டியுள்ளனர்.

மலையக தமிழர்கள் எல்லா துறைகளிலும் சாதித்துள்ளார்கள். சினிமாதுறையிலும் அவர்கள் சாதிக்க தவறவில்லை. இலங்கயின் முதலாவது நடிகை என்று
போற்றப்படுபவர் ருக்மணி தேவி. அவர் மலையகத்தை சேர்தஞந்தவர் என்பது
பலருக்கு தெரியாது. தேசிராஜாம்பாள் என்ற மலையக கிறிஸ்தவ பெண் தான்
கொழும்புக்கு இடம் பெயர்ந்து ருக்மணிதேவி என்ற பெயரில் புகழின் உச்சத்தை தொடுகின்றாள்.

இவ்வாறு மலையக தமிழர்கள் தமது வாழ்வியலுடன் கலந்த கலையை
வெளிப்படுத்தியுள்ளார்கள் ஆனால் அவை பேசப்படுவது இல்லை.
கடந்தவாரம் நடந்த சர்வதேச மலையக திரைப்பட விழாமலையிலிருந்து
ஊற்றெடுக்கும் நதிபோல மலையகத்திலிருந்த உருவான இலங்கை திரைப்பட
வளர்ச்சியை அறியமுடிந்தது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவகுமார் இலங்கை சினிமாவில் மலையக தமிழர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் மலையக சினிமாவை படம்போட்டுகாட்டினார்.

மலையகத்தில் இதுவரை 50 திரைப்படங்கள் இருவாகியிருக்கின்றன. அந்த
வரிசையில் இலஙயைின் முதலாவது திரைப்படமாக சமுதாயம் என்ற திரைப்படம்
உருவானது.  ஆனால் அது திரையிடப்படாமல் போனது கவலைக்குரிய விடயம். 1963
ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தி என்பவர் 1963ஆம் ஆண்டு தோட்டக்காரன் என்ற
திரைப்படத்தை திரையிட்டார்.அதை ஆண்டு மண்சரிந்து பல உயர்களை
காவுகொண்டகொஸ்லாந்தையில் இருந்த அருண என்பவர் புரட்சி என்ற திரைப்படத்தை
வெளியிட்டார்.

1969 ஆம் ஆண்டு எட்டியாந்தோட்டையைச் சேர்ந்த எம்.டி பாலன் என்பவரால்
மஞ்சல் குங்குமம் என்ற திரைப்படம் வெளியானது. 1975 ஆம் ஆண்டு
கொட்டகலையைச் சேர்ந்த மலையக கலைஞர் ராமன் தயாரிப்பில் மலைவாசல் என்ற
திரைப்படம் வெளியானது.

1975ஆம் ஆண்டு புதிய காற்று என்ற திரைப்படம் வெளியாகியது. இதனை மலையக
திரைப்படத்தின் வளர்ச்சி என்று கூறும் அளவுக்கு முதன்முறையாக இந்திய
தொழினுட்பங்களை பயன்படுத்தியிருந்தார்கள். அக்காலத்தில் வெற்றிநடைபோட்ட
இந்த திரைப்படத்தை வீ.பி கணேஷன் தயாரித்து உருவாக்கியுமிருந்தார். இவரது
திரைப்பட முயற்சிகள் இன்றளவும் பேசப்பட சினிமா மீது அவருக்கிருந்த ஆர்வமே
காரணமாக இருந்தது. திரைக்கதை வசனம் நடிப்பு என பல்துறை சார்நத வீ.பி
கணேஷன் 1978 ஆம் ஆண்டு நான் உங்கள் தோழன் என்ற திரைப்படத்தை
வெளியிட்டார். புதிய காற்று போல வெற்றித்திரைப்படமாக அமையுமென பலராலும்
எதிர்ப்பார்க்கப்பட்ட உங்கள் தோழன் திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த
வரவேற்பை பெறவில்லை. என்றாலும் மனம் தளராத கணேஷன் 1980 ஆம் ஆண்டு
நாடுபோற்ற வாழ்க என்ற திரைப்படத்தை வெளிட்டார்.

இக்காலப்பகுதியிலேயே வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த தீன தயாளன்
தயாரிப்பில் வாடைக்காற்று என்ற திரைப்படமும் அசோகா நிறுவனத்தின் ஸதாபகர்
வீ.கே.டி பொன்னுசாமிப்பிள்ளை தயாரிப்பில் தெய்வம் தந்த வீடு என்ற
திரைப்படமும் வெளிவந்தது. அதேநேரம் மாத்தளையைச் சேர்ந்த கார்த்திகேசுவின்
தயாரிப்பில் அவள் ஒரு ஜீவநதி என்ற திரைப்படம் வெளிவந்தது.

70 மில்லிமீட்டர் திரையில் திரைப்படங்களை பார்த்து ரசித்த மலையக மக்கள்
1980 களில் 80 மில்லிமீட்டர் அகலமான திரையில் திரைப்படங்களை பார்த்து
ரசித்தனர். இந்த திரையை முதன்முறையாக பொன்னுசாமிப்பிள்ளை
அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 80 களில் அறிமுகப்படுத்தப்பட்ட
அகலத்திரை மலையக சினிமாவின் பரினாம வளர்ச்சியாக கருதப்படுகின்றது.
இக்காலப்பகுதிகளுக்கிடையே பலர் இணை இயக்குனர்களாகவும் கடமை
புரிந்துள்ளனர். சிங்கள திரைப்படங்களில் கம்சரா உள்ளிட்ட மூன்று
திரைப்படங்களில் இண இயக்குநராக சத்திய நாராயணன் வேலை செய்துள்ளர்.
இன்னும் பலர் இருந்தாலும் இன்றளவில் அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டுவது
கடினமாகத்தான் இருக்கிறது.

மலையக திரைப்படத்தின் வளர்ச்சிக்கு அங்கிருந்து வெளிவந்த திரைப்படங்கள்
சான்றாகவும் வரலாறாகவும் இருக்கின்றன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையக
மக்களும் திரைப்பட தயாரிப்பாளர்களும் தங்கள் வாழ்வியலை படமாக்க
மறக்கவில்லை. இக்குழுமத்துக்கான அடையாளப்பண்புகளில் இருந்தும் தவறவில்லை.
அவ்வாறு அவர்கள் நெறி தவறியிருந்தால் இன்று மலையக திரைப்படங்கள் என்ற
வரையரைக்குள் சில திரைப்படங்களே இருந்திருக்கும்.

அந்த வகையில் சினிமாவுக்கு இலக்கணம் அமைத்த தலைசிறந்த மனிதர் பாலு
மகேந்திரா போன்றவர்களும் இந்த மண்ணின் மைந்தன் தான் என்பதால் பெருமை
கொள்கின்றோம். இந்திய சினிமா வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளும் மக்களால்
மலையக சினிமாவின் வளர்ச்சிப்பாதையில் வெளிவந்த 50 திரைப்படங்ளின் வருகையை
கண்ணடும் பெருமை கொள்ளலாம். 
ஏ.ஜெயசூரியன்

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...