Wednesday, December 21, 2016

தகவலறியும் உரிமை ஆணைக்குழு பூரணமானது


கவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கான எஞ்சியிருந்த இரண்டு நியமனங்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.கே.எஸ் ரவீந்திர தெரிவித்துள்ளார்.
முன்னாள் நீதிபதி ஏ.டபிள்யூ.ஏ. சலாம் மற்றும் டாக்டர் செல்வி திருச்சந்திரன் ஆகிய இருவரது பெயர்களை அரசியலமைப்புச்சபை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த இருவரது பெயர்களையும் ஜனாதிபதி ஏற்றுள்ளாதாக அவர் இன்று தெரிவித்தார்.

தகவலறியும் சட்டம் பாராளுமன்றில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் மாதம் சட்டமாக்கப்பட்டது. சட்டமாக்கப்பட்டு நான்கு மாங்களுக்கு மேல் ஆகியும் தகவலறியும் உரிமை ஆணைக்குழு இன்னும் முழுமையாக்கப்படவில்லை என்ற நிலை காணப்பட்டது. எனினும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் மக்கள் தகவலறியும் சட்டத்துக்கு கீழ் மனுக்களை சமர்ப்பிக்கலாம். அதாவது பெப்ரவரி மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவலறியும் ஆணைக்குழுவுக்கான அதிகாரிகளை நியமிக்கவேண்டியவர் ஜனாதிபதி. கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி அரசியலமைப்புச் சபையினால் தகவலறியும் சட்டத்துக்கான ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்திருந்தது. செப்டம்பர் மாதமளவில் ஜனாதிபதிக்கு ஆணைக்குழுவுக்கு நியமிக்ககூடிய சிலரது பெயர்களையும் பரிந்துரை செய்திருந்தது.
அதன்படி ஐவரடங்கிய ஆணைக்குழுவுக்கு 2016 ஆம் திகதி செப்டம்பர் 30 ஆம் திகதி இருவரை ஜனாதிபதி நியமித்தார். தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி மஹிந்த கம்மன்பில நியமிக்கப்பட்டார். முன்னாள் நீதிபதி சலீம் மர்சூக், தியாகநாதன் செல்வகுமாரன், சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன, சட்டத்தரணி எஸ்.ஜீ.புஞ்சிஹேவா ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களில் முன்னாள் நீதிபதி சலீம் மர்சூக் மற்றும் தியாகநாதன் செல்வகுமார் ஆகிய இருவரும் வேறு சில நிறுவனங்களில் பொறுப்புக்களை வகிக்கின்ற காரணத்தினால் அவர்கள் குறித்த ஆணைக்குழுவுக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை. அதேநேரம் இவர்கள் இருவரும் நியமனத்தை மறுக்கவில்லை. தகவலறியும் உரிமை ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழுவாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த இரு நியமனங்களும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள இரண்டு நியமனங்களின் அடிப்படையில் தகவலறியும் உரிமை ஆணைக்குழு பூரணப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள டாக்டர் செல்வி திருச்சந்திரன் தொடர்பாக சில விமர்சங்களும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏ.ஜெயசூரியன் 
#RTI  #srilanka

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...