- பிள்ளைகளை தேடி எட்டு வருட போராட்டம்
- வீதியிலிறங்கி போராடியும் கண்டுகொள்ளாத அரசாங்கம்
- செய்வதறியாமல் தவிக்கும் மக்களை உளவியல் ரீதியாக தாக்குவது தான் திட்டமோ?
- கிளிநொச்சியில் பத்துதாய்மார்கள் உயிரை மாய்க்கவுள்ளனர்
- தீக்குளிக்கவும் தயார்
மே மாதம் இலங்கையருக்கு வரலாற்றில் மறக்கமுடியாத நாட்களாக
பதியப்பட்டுவிட்டது. உள்நாட்டு யுத்தத்தில் வெற்றியடைந்துவிட்டோம் என
ஒருபக்கம் சந்தோசமடையும் ஒரு தரப்பு. மறுபக்கம் இழப்புக்களுக்கு மட்டுமே
முகம் கொடுத்து நடைபிணமாய் திரியும் ஒருதரப்பு என இருதரப்புபிரச்சினைகளு
சீர்துக்கிபார்கவைக்கும் மே மாதம் நாளை ஆரம்பிக்கிறது.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு எட்டு வருடமாகியும்
தமிழர்களின் கண்ணீரால் ஒவ்வரு மேமாதமும் தமிழர்களின் கண்ணீர் வடியும்
மாதமாக மாறிவிடும் ஆனால் இந்த முறை வீதியையும் நனைக்கிறது கண்ணீர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தங்களது உறவுகளை காண்பிக்கம்படி கேட்டு
வீதியை நனைத்துவிட்டுள்ளன.






