நான்கு நாள் போராட்டமும் பின்னணியும்
திகாம்பரம் வந்தாரு தொண்டமான் வந்தாரு வேலுக்குமாறும் வந்தாரு எங்கள் பிரச்சினையை பற்றி கேட்க அல்ல.இவங்க எல்லாம் வோட்டு கேட்டு மட்டும் தான் வந்தாங்க. நாங்க பாத்து வருசமா படுற பாடு இவங்களுக்கு தெரியுமா? எங்க குடும்ப கஷ்டம் பற்றி தெரிஞ்சுக்க கூட அவங்க விரும்பவில்லை. என எயாபார்க் தோட்ட தொழிலாளி ஒருவர் மிகவும் கவலையாக கூறி முடிக்கும் முதலே அவரது மனைவி நான் இனி வேலைக்கு போக மாட்டேன் என்கிறார். ஏன் என்ற பதிலுக்கு முன்னமே அந்த அம்மா ஒரு மாசத்துக்கு ஒரு லீட்டர் ரத்தத்தை இந்த அட்டை கடிச்சி உரிஞ்சிருக்கும். இனி அட்டைக்கு உறிஞ்சக்கூட என் உடம்பில் ரத்தமில்லை.இதெல்லாம் யாருக்கு விளங்கப்போகுது என்று இன்னும் ஏதேதோ முணுமுணுத்தார் என் காதுக்கு விளங்கவில்லை.






