இன்னும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவில்லை. தற்போது அணைத்து கட்சியினரின் கருத்துக்களை மட்டுமே கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்களின் கருத்துக்கள் மட்டுமல்ல பொது மக்களின் கருத்துக்களும் உளவாக்ப்பட்ட பின்னரே அரசியலமைப்பு உருவாகும். அனைத்தின மக்களுக்கும் ஏற்ற பொதுவான அரசியலமைப்பு தான் உருவாகும். ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே ஒரு குழுவினர் எதிர்க்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அந்த குழு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எந்த குழுவும் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளே உருவாகவில்லை. ஐக்கிய தேசிய கட்சி என்ற ஒரே ஒரு குழு மட்டுமே இருக்கிறது. இது தேசிய அரசு. இதில் மக்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.அதற்காக வேறுபட்டு நடக்கவில்லை. தேசிய அரசுடன் இணைந்துதான் நாம் செயற்படுகிறோம் என தெரிவித்த கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிஷன் தம் மீது சுமத்தப்படும் நெல் மோசடி தொடர்பான குற்றச்சாற்றுக்கள் அரசியல் பழிவாங்கல் எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த செவ்வியின் தொகுப்பு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.






