Sunday, December 25, 2016

இலங்கை சினிமாவில் மலையக தமிழர்களின் பங்களிப்பு

ந்திய வம்சாவளிகள் இன்று தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாமல்
போராடிக் கொண்டிருக்கிறனர். ஆனால் அவர்கள் இருப்பில்லாதவர்கள் இல்லை. வளர்ந்து வந்த அரசியல் சமூக காரணங்கள் இருப்பை கேள்விக்கள்ளாக்கியது
என்பதை மறுக்கமுடியாது. வரலாறும் உள்ளது.தமது வாழ்வியலை அவர்கள்
படம்பிடித்து காட்டியுள்ளனர்.

மலையக தமிழர்கள் எல்லா துறைகளிலும் சாதித்துள்ளார்கள். சினிமாதுறையிலும் அவர்கள் சாதிக்க தவறவில்லை. இலங்கயின் முதலாவது நடிகை என்று
போற்றப்படுபவர் ருக்மணி தேவி. அவர் மலையகத்தை சேர்தஞந்தவர் என்பது
பலருக்கு தெரியாது. தேசிராஜாம்பாள் என்ற மலையக கிறிஸ்தவ பெண் தான்
கொழும்புக்கு இடம் பெயர்ந்து ருக்மணிதேவி என்ற பெயரில் புகழின் உச்சத்தை தொடுகின்றாள்.

இவ்வாறு மலையக தமிழர்கள் தமது வாழ்வியலுடன் கலந்த கலையை
வெளிப்படுத்தியுள்ளார்கள் ஆனால் அவை பேசப்படுவது இல்லை.
கடந்தவாரம் நடந்த சர்வதேச மலையக திரைப்பட விழாமலையிலிருந்து
ஊற்றெடுக்கும் நதிபோல மலையகத்திலிருந்த உருவான இலங்கை திரைப்பட
வளர்ச்சியை அறியமுடிந்தது.

Wednesday, December 21, 2016

தகவலறியும் உரிமை ஆணைக்குழு பூரணமானது


கவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கான எஞ்சியிருந்த இரண்டு நியமனங்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.கே.எஸ் ரவீந்திர தெரிவித்துள்ளார்.
முன்னாள் நீதிபதி ஏ.டபிள்யூ.ஏ. சலாம் மற்றும் டாக்டர் செல்வி திருச்சந்திரன் ஆகிய இருவரது பெயர்களை அரசியலமைப்புச்சபை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த இருவரது பெயர்களையும் ஜனாதிபதி ஏற்றுள்ளாதாக அவர் இன்று தெரிவித்தார்.

Tuesday, December 20, 2016

குமார் குணரட்ணம் விடுதலையும் பின்னணியும்


லங்கை நாட்டில் முக்கியமான அரசியல்  மாற்றம் நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்புடன் நாட்டு மக்கள் காத்துக்கொண்டிருந்த போது திடீரென ஒரு நபரின் கைது நாட்டில் சலசலப்பை உண்டுபண்ணியது.ஜே.வி.பி.தான் இந்த கைதுக்கு காரணம் ஜே.வி.பி.யின்  பிரகாரமே கைது செய்யப்பட்டார். என்றும் கருத்துக்கள் வெளிவந்தன. பாராளுமன்றில் இப்போதைக்கு மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து செயல்படும் சிறந்த எதிர்க்கட்சிக்கான பண்புகளைக்கொண்ட கட்சி ஜே.வி.பி. மட்டுமே. இதற்கு அவர்களது பாராளுமன்ற கேள்வி கணைகளே ஆதாரம்.

Monday, December 19, 2016

மலையக சரித்திர நிகழ்வு

திரைப்பட விழாக்கள் பலவற்றை சர்வதேச அளவில் பார்த்து ரசித்த இலங்கையர்களுக்கு சர்வதேச மலையக திரைப்பட விழா 2016 என்பது புதிது. இருந்தாலும் இலங்கை வரலாற்றில் பதியப்படவேண்டிய ஓர் நிகழ்வு. மலையகத்துக்கென்று 200 வருட பழமை வாய்ந்த வரலாறு இருக்கும் பொது அதன் சினிமா வளர்ச்சுக்கும் தனி இடம் உண்டு. அந்த வகையில் மலையகத்தில் நடந்திராத ஓர் சரித்திர  நிகழ்வினை பெருவிரல் கலை இலக்கிய இயக்கம் நடாத்தியிருக்கிறது.

தகவலறியும் சட்டத்தினூடாக என்ன செய்யலாம்?

ரசாங்கம் என்பது மக்களுக்காவே உருவாக்கப்பட்டது என்ற அடிப்படையில் கூறிக்கொண்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்கோ விளக்கங்களுக்கோ அரசாங்கம் பதிலளிக்க மறுக்க முடியாது. இவ்வாறான சிக்கல் நிலைமைகளை தடுக்கவே அரசாங்கத்திடமிருந்து தகவலை சட்டபூர்வமாக பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Friday, December 9, 2016

ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மத்தை கேட்டு தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மனு


ஜெயலலிதா மரணம் குறித்தும், அவரது உயில் குறித்து தகவல் பெரும் உரிமை சட்டத்தின் வாயிலாக வழக்கறிஞர் ஒருவர் கேள்விஎழுப்பிமனு அனுப்பி உள்ளார்.
நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தகவல்பெறும் உரிமை சட்டம்மூலம் மத்திய பொதுதகவல் அலுவலருக்கு விவரம் கேட்டு மனு அனுப்பிஉள்ளார்.

Monday, December 5, 2016

இலங்கை திரைத்துறை இந்திய சினிமாவின் ஆதிக்கத்தில் இருக்கிறது

பிபீஷண குரேரா

பிபீஷண குரேரா நீர் கொழும்பு கத்தோலிக்க்க திருச்சபைகளின் கலாசார நாடக மூலமாகவே நாடக துறைக்கு உள்நுழைந்து  சவால்கள் பலவற்றுக்கு முகம் கொடுத்து இன்று இலங்கையின் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற ஒருவர். சர்சைகள் பலவற்றை உண்டுபண்ணிய பிரசன்ன விதானகேவின் உசாவிய நிஹண்டய் ' நீதிமன்றம் அமைதி' என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். அதன் அனுபவம் மற்றும் நாடக திரைப்படங்கள் பற்றி அவர் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய செவ்வி இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

Thursday, December 1, 2016

முட்டை அடைகாக்கும் இயந்திரத்தால் வாழ்க்கை நடாத்தும் பெண்கள்...

சுனாமி என்றால் இன்றும் அச்சம் கொள்ள சுனாமி நல்லதை செய்யவில்லை பல உறவுகளை கடலுக்குள் இழுத்துக்கொண்டது. பலரை அனாதையாக்கியது இன்னும் பலரை உளநலத்தை பாதிக்க செய்தது ஓடித்திருந்த பிஞ்சு குழந்தைகளை முடமாக்கியது. கடலை வடிவில் வந்த கொடூரம் அது. அதிலிருந்து மீண்டு எழ சுமார் பதினான்கு வருடங்கள் எடுத்திருக்கிறது. உடமை உறவுகள் என பலதையும் இழந்து தனியாக இருக்கும் ஒரு சில பெண்களுக்கு ஆறுதலாக கோழி வளர்ப்பு அமைந்துள்ளது.

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...