Monday, December 19, 2016

மலையக சரித்திர நிகழ்வு

திரைப்பட விழாக்கள் பலவற்றை சர்வதேச அளவில் பார்த்து ரசித்த இலங்கையர்களுக்கு சர்வதேச மலையக திரைப்பட விழா 2016 என்பது புதிது. இருந்தாலும் இலங்கை வரலாற்றில் பதியப்படவேண்டிய ஓர் நிகழ்வு. மலையகத்துக்கென்று 200 வருட பழமை வாய்ந்த வரலாறு இருக்கும் பொது அதன் சினிமா வளர்ச்சுக்கும் தனி இடம் உண்டு. அந்த வகையில் மலையகத்தில் நடந்திராத ஓர் சரித்திர  நிகழ்வினை பெருவிரல் கலை இலக்கிய இயக்கம் நடாத்தியிருக்கிறது.

உலக சினிமாவோடு ஒப்பிட்டு போட்டியிட்டு உலக தரம் வாய்ந்த திரை படைப்புக்களை வழங்க வேண்டும் என்ற உணர்வை இந்த சர்வதேச மலையக திரைப்பட விழா 2016 நிச்சயம் உணர்த்தியிருக்கும். காரணம் இதுவரை அப்படி ஒரு உணர்வை எவரும் உணர்த்தியிருக்க வாய்ப்பில்லை.
இலங்கை வரலாற்றில் இதுபோல என்றாவது ஒருநாள் தான் திரும்பிபார்க்க வைக்கிற சம்பவங்கள் நடக்கின்றன.
 மலையக விடியலுக்காக இன்று பலர் பேசினாலும் நடைமுறைக்கு சாத்தியமான கருத்துக்களையும் செயல்பாடுகளிலும் ஈடுபடுவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். சினிமா மோகத்தில் இருப்போரை ஆக்க சினிமா தளத்துக்கு எப்படி கொண்டு செல்லலாம் என்று சிந்தித்தவர்கள் பெருவிரல் காலை இலக்கிய இயக்கத்தினர். பரிக்கத் தயாராக இருக்கும் கொளுந்தின் தளிர்கள் போன்ற மலையக இளைஞர்களை சரியான தளத்துக்கு கொண்டு நிகழ்வாக சர்வதேச திரைப்பட விழாவை மாற்றியிருந்தனர்.

இன்று திரைப்படங்கள் எமது வாழ்வியலோடு ஒன்றித்து போயுள்ளது. வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாகின்றன. வரலாறு படைக்கும் மனிதர்களாக வாழவேண்டிய கட்டாயமும் எமக்கும் இருக்கிறது. இப்படியான சூழல் சர்வதேச நாடுகளிலும்  இருக்கின்றன. அதுவும் மலையக மக்களின் வாழக்கை வரலாறு மிகவும் துன்பியலை கொண்டமைந்த ஓர் வரலாறாக திரைப்படங்களும் சரி புராணங்களும் சரி அப்படித்தான் கூறுகின்றன.

தென் இந்திய சினிமாவளர்ச்சி மலையகத்தையும் வெகுவாக பாதித்திருக்கும் கட்டத்தில் மலையக மக்களின் வாழ்வியலை திரைப்படமாக்க எவரும் முன்வருவதில்லை என்ற குறைப்பாடுகள் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டாலும் சர்வதேச மலையக திரைப்பட விழா அதற்கு தக்க பதிலளித்தது. மலையகத்தில் தென்  இந்திய சினமா சாயலை குறைத்து  மலையக இளைஞர்கள் திரைப்படங்களை எடுத்திருந்தார்கள். அதுவும் திரையிப்பட்டிருந்தன.

ஏன் திரைப்படங்களை  பார்க்கின்றோம் என்று தெரியாமல் பார்க்குமளவுக்கு அதிகமான  சினிமாக்களின் வருகை அதிகரித்துவிட்ட காலத்த்திலும் சினிமா என்ற வரையறைக்குற்படுத்தி நெஞ்சைத்தொடும் சினிமாக்களும் இருக்கத்தான் செய்கின்றன. எல்லாமே நால்லதாய் இருந்துவிட்டால் நல்லதாய் இருக்காதே என்பதுபோல அவ்வப்போது முகத்தை சுளிக்கும் திரைப்படங்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அது  தென் இந்திய சினிமா என்று ஒதுக்கிவிட முடியாது. இந்திய வம்சாவளிகள் தான் மலையக மக்கள் என்று குரல் இன்றும் எழுப்பப்படுகின்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பதால் மலையகத்தின் திரை துறை வளர்ச்சிக்கு தென் இந்திய சினிமாக்களின் வர்ச்சியும் காரணமாக அமைகின்றன.

இலங்கை திரைத்துறை வளர்ச்சிக்கு சர்வதேச அங்கீகார விருதுகளே சான்றாக இருக்கின்றன . ஆனால் அதில் எத்தனை மலையகம் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியது என்பது சந்தேகமே. காரணம் மலையக மக்களின் வாழ்க்கை ஏனைய மக்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்க முடியாத திருப்பங்களை கொண்டது. அதனை திரைக்கு கொண்டுவருவதென்பது ஆராயப்படவேண்டியது.

சர்வதேச மலையக திரைப்பட விழாவில் சுந்தர் பிரசாத் என்பவரின் இயக்கத்தில் உருவான கனவு உண்டியல் எனும் குறுந் திரைப்படம் திரையிடப்பட்டது. மலையக மாணவர்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் அல்ல அவர்களுக்கு அந்த கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் அரிதாக இறுக்கி ன்றன. உணவு போக்குவர்த்தது வீடு மண்சரிவு காலநிலை எல்லாமே அங்குள்ள மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில்  அமைந்துள்ளன என்பதையும் வெற்றிப்படிக்கட்டில் காலெடுத்து வைக்கையில் மண் வந்து தின்பதாக குறித்த குறுந்திரைப்படம் காட்டியிருந்தது.

மெரேயா பிரதேசத்தை சேர்ந்த கருணாகரன் என்பவரின் தயாரிப்பில் உருவான சிவப்பு கண்ணீர் குறுத்திரைப்படம் வைத்தியராக வேண்டும் என்ற கனவை சுமந்து பாடசாலை செல்லும்பாடசாலை மாணவி குடும்ப வறுமையால் வெளிநாட்டில் பணிப்பெண் வேலைக்கு செல்கின்றாள் என்ற அடிப்படியில் அமைந்திருந்தது.

நேதாஜி என்ற இளைஞரின் உருவாக்கத்தில் வெளிவந்த   அப்படியா  என்ற குறுந்திரைப்படம் திரையிடப்பட்டது. அதில் வெளிநாட்டுக்கு செல்லும் பெண் சடலமாக பெட்டியில் அடைக்கப்பட்டு வரும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தது.

அப்பா என்னும் அடையாளத்தை பெரும் தருணத்தில் தனது அப்பா தன்னை மகனாக பெர்றேடுக்கும்போது என்னவகை உணர்வை பெற்றிருப்பார். அதனை   மீண்டும் ஒருதடவை  காண கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற கருவை மையப்படுத்தி லிங்க் சின்னா உருவாக்கிய மீண்டும் நம் தொட்டிலுக்கு என்ற குறுந்திரைப்படம் திரையிடப்பட்டது. அத்துடன் விக்கியின் சந்தேகம் என்ற குறுந்திரைப்படமம் திரையிடப்பட்டது.

இவ்வாறு மலையக சாயலை மட்டுமே கொண்ண்டமைந்த திரைப்படங்கள் திரைப்படவிழாவை மெருகூட்டி அதே வேலை அவுஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களின் வாழக்கையை பற்றிய ரெபிட் புரூப் பென்ஸ் (rabbit proof fence ) தாழ் சாதி இளைஞன் பற்றிய இந்தியாவின் மராத்தி மொழி திரைப்படமான பென்றி (fandry) இத்தாலிய நாட்டு திரைப்படங்களில் மிக முக்கிய திரைப்படமான பைக்கில் தீவ் (bicycle thief ) ஈரானிய நாட்டு திரைப்படமான பபான் (bapan ) போன்ற  திரைப்படங்களும் டாக்டர் சுமதியின் இங்கிருந்து மற்றும் இலங்கையின் சர்ச்சைக்குரிய திரைப்படங்களின் இயக்குனர் பிரசன்ன விதானகேவின் வித் யு வித்தவுட் உ (with  you without  you ) போன்றனவும் திரையிடப்பட்டன. பின்னர் திரையிடப்பட்ட படங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டண.

திரையிட்ட படங்கள் மலையக திரைத்துறை வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் வகையில் இருந்தன எபத்தில் ஐயமில்லை. 1972 ஆம் ஆண்டு இதே மார்கழி மாதம் நாவலப்பிட்டி நகரில் திரைப்பட  விழா ஒன்று நடந்தது என்று அலை இதழின் ஆசிரியரும் திரை விமர்சகருமான ஏ.யேசுராசா நினைவுகூர்ந்தார்.

கொட்டகலை வெப்ஸ்டர் பாடசாலையில்  இரண்டு நாட்கள் நடந்த சர்வதேச மலையக திரைப்பட விழாவில் அடுத்ததவாரம் இலங்கை  திரைப்பட வளர்ச்சியில் மலையக மக்களின் பங்கு எத்தகையது என்பதை எதிர்ப்பார்க்கலாம். இலங்கையின் முதலாவது நடிகை கூட மலையக பெண்தானாமே...
ஏ.ஜெயசூரியன்

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...