பிபீஷண குரேரா |
பிபீஷண குரேரா நீர் கொழும்பு கத்தோலிக்க்க திருச்சபைகளின் கலாசார நாடக மூலமாகவே நாடக துறைக்கு உள்நுழைந்து சவால்கள் பலவற்றுக்கு முகம் கொடுத்து இன்று இலங்கையின் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற ஒருவர். சர்சைகள் பலவற்றை உண்டுபண்ணிய பிரசன்ன விதானகேவின் உசாவிய நிஹண்டய் ' நீதிமன்றம் அமைதி' என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். அதன் அனுபவம் மற்றும் நாடக திரைப்படங்கள் பற்றி அவர் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய செவ்வி இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க கலாசார நாடகங்களிலிருந்து திரைத்துறைக்கு எப்படி வந்தீர்கள்?
கத்தோலீக்க மேடை நாடகங்களின் பங்குபற்றி என்னை வளர்த்துக்கொண்டேன். 1998 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் உருவாக்கமான 'திக்நத்னா' என்ற நாடகத்தின் மூலம் தான் தேசிய அளவில் பிரபலமானேன். அதன் பின்னர் நான் தொடர்ச்சியாக இன்று வரை அரச நாடக விழாக்களில் பங்குபற்றி வருகிறேன். என்னுடைய சொந்த முயற்சியாக 'பாஷாண வர்ஷய' என்ற நாடகத்தை தயாரித்து வழங்கினேன்.2004 இல் 'உப மாம சஹா எய' (நீ நான் அவள்- you me and she ) என்ற நாடகத்தை அரச நாடக விழாவில் மேடையேற்றினேன். இந்த நாடகம் இறுதி சுற்றுக்கு தெரிவாகியிருந்தது.
2005 ஆம் ஆண்டு அனைத்து பல்கலைக்கழக நாடக மன்றமும் அரச நாடக மன்றமும் இணைத்து நடாத்திய நாடக விழாவில் எனது மற்றுமொரு படைப்பான தவத் மினியா (இன்னொரு மனிதன்) என்ற நாடகம் இறுதி சுற்றுவரை தெரிவாகி வரவேற்பை பெற்றது.2006 டவர் மண்டப நிதியத்தால் நடத்தப்பட்ட நாடக விழாவில் லோக்கல் காமினி என்ற நாடகத்துக்கு ஐந்து விருதுகள் கிடைத்தன. பிரசன்ன விதானகேயின் இர மெதுவ (august sun) என்ற திரைப்படத்தின் ஊடாக நான் வெள்ளித்திரைக்கு அறிமுகமானேன். அதில் ஒரு உதவி கதாப்பாத்திரம் ஒன்றில் தான் நடித்தேன் இருந்தும் இந்த கதாபாத்திரம் என்னை இன்னொரு மட்டத்துக்கு கொண்டு சென்றது.
அதன்பின்னர் சூரிய அரன, சமநல தடு, ஆகாச குசும் போன்ற திரைப்படங்களிலும் எனது நடிப்புத்திறமை பேசப்பட்டது. பத்ரஜ்ஜி மஹிந்த ஜெயதிலகவின் 'வஹி தவச' என்ற திரைப்படத்தில் இரண்டாம் நிலை நாயகனாக நடித்தேன் ஆனாலும் அந்த திரைப்படம் வெளிவரவில்லை. கல்பனவிந்த ஆரியவன்சவின் 'பிரமேயம்' என்ற திரைப்படத்திளும் நடித்துள்ளேன்.
இப்படி பல திரைப்படத்தில் நடித்து முடித்து பிரதான கதாபாத்திரம் ஒன்று கிடைத்தது 'உசாவியா நிகண்டய்' (நீதிமன்றம் அமைதி) என்ற திரைப்படத்தில்தான். அதில் குறித்த நீதிபதி ஒருவரினால் அதிகமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் (சந்தன புஷ்பருவான்) பாத்திரத்தில் நடித்துள்ளேன்.
சர்ச்சைக்குரிய திரைப்பட இயக்குனரான பிரசன்ன விதானகேவின் திரைப்படத்தின்மூலம் அறிமுகமான நீங்கள் தொடர்ந்தும் அவரது திரைப்படத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
அவர் தான் என்னை அறிமுகப்படுத்தியவர். சமூகத்தின் மீது ஆழமான அன்பு கொண்ட ஒருவர். சமூகத்தில் குறுகிய காலத்தில் குறுகிய நோக்கத்துக்காக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பரந்தளவில் திரைக்கு கொண்டுவருகிறார். எனக்கும் அப்படியான நோக்கம் விருப்பமாக இருந்தது. பிசைந்தன விதானகே வின் திரையில் வெளிவந்த திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் தனித்தனியாக பேசப்படும்.
அந்த வகையில் உசாவிய நிகண்டய் திரைப்படத்தில் எனது கதாபாத்த்திரம் பற்றி பிரபல சிங்கள திரை விமர்சகரான கத்லின் ஜயவர்தன போன்றவர்கள் பத்திரிகையில் எழுதி சிறந்த நடிகன் என்ற ஒரு அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
உசாவிய நிகண்டய் திரைப்படத்தின்மூலம் மக்களுக்கு சொல்லப்படும் செய்தி என்ன?
கணவன் சிறையில் இருக்கும்போது அவரை பார்க்கவும் பிணை விடுதலை பற்றி பேச நீதிமன்றத்துக்கு வரும் பெண்களிடம் நீதிபதிகள் பாலியல் லஞ்சம் கேற்கின்றனர். பல்வேறு இடங்களுக்கு அந்த பெண்களை அழைத்துச்சென்று பாலியல் லஞ்சம் பெற்றுள்ளனர். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
இது மறைக்கப்பட்ட ஒரு சம்பவம் இன்று திரைப்படமாக வெளிவந்துள்ளது. இப்படியான சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் யார் இதற்காக குரல் கொடுக்கின்றனர். மறைக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட விடயங்களை திரைத் துறை கலைஞர்கள் தான் நாசூக்காக சொல்லவேண்டி இருக்கிறது. அது அவர்களின் பாரிய பொறுப்பாகும். அதை மக்கள் உணர்ந்து அநீதிக்கு எதிராக தமக்கு நடந்ததாக கருதி மனிதர்களாக நடக்கவேண்டும். இது சிங்கள திரைப்படம். ஆனாலும் மூவின மக்களின் பொதுவான பிரச்சினை. சமூக அக்கறையுள்ள திரைப்படங்களில் நடித்தப்பின்னர் சமூகத்தில் வலம்வருவது பெருமையாக இருக்கிறது.
இவ்வகையான திரைப்படங்களில் நடித்த பின்னர் சமூகத்தில் எத்தகைய சவால்கள் அல்லது தாக்கங்களை உணருகிண்றீர்கள்?
உசாவிய நிகண்டய் திரைப்படத்தில் நடித்ததில் இதுவரை சவால்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் கடந்த அரசாங்கத்தில் நான் நடித்த திரைப்படங்கள் வெளிவராத நிலையில் இருந்துள்ளன. இன்று நூற்றுக்கு நூறு வீதமான நல்ல நிலவரம் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு சாதகமான நிலைமையை அவதானிக்க முடிகிறது. கருத்து வெளிப்படுத்தும் உரிமை ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சவால்கள் குறைவடைந்துள்ளன. வெள்ளை வேன் கடத்தல் கலாசாரம் இல்லை என்பதால் திரைபட துறை மட்டுமின்றி எண்ணிய அனைத்து துறையினரும் சுதந்திரமாக இந்த அரசாங்கத்தின் கீழ் செயற்பட கூடியதாக உள்ளது. இது ஒரு நல்ல அடையாளம். வணிகதிரைப்படங்களை விடவும் சமூக அக்கறை உள்ள திரைப்படத்தில் நடித்து அதனூடாக சமூகத்தில் நடிகனாக வலம் வருவது என்பது சிறந்த வழியாக கருதுகிறேன்.
குறிப்பாக இலங்கை திரை துறையில் உள்ள பொதுவான பிரச்சினைகள் என்ன?
அரச கட்டமைப்புக்குள் இருக்கும் திரைத்துறையின் நலன்கள் தொடர்பாக அரசாங்கமே கவனம் செலுத்த வேண்டும். இது திரை துறைக்கு மட்டுமல்ல ஏனைய அனைத்து துறையினருக்கும் இது பொருந்தும். இது அவர்களை நாம் அச்சுறுத்தி கேட்பதாக கருத வேண்டாம் இது ஒரு வேண்டுகோள்.
கலை தொடர்பான கொள்கைகளை உருவாக்கும்போது சினிமா தொடர்பான பல்பக்க பார்வை உள்ளடக்கப்படவேண்டும். சினமா வளர்ச்சி அதன் தியட்டர் வளர்ச்சியிலும் நங்கி இருக்கிறது என்று கூறலாம் அந்த வகையில் இலங்கையில் உள்ள தியட்டர்கல் டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை. டிஜிட்டல் தியேட்டர்கள் வரும்போது தான் தியட்டர்களுக்கு மக்கள் வருவார்கள். இந்த பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். கலைஞன் என்ற வங்கியில் இதனைத்தான் எதிர்பார்க்கின்றேன்.
அடுத்த வருடத்துக்கான வரவுசெலவு திட்டத்தில் இந்திய இறக்குமதிகளுக்கு சினமாக்களுக்கும் நாடகங்களுக்கும் வரி விதிப்பதாக கூறுள்ளது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
இலங்கை சினிமாவில் இந்திய சினிமாவின் ஆதிக்கம் அதிகம். அதனால் உள்நாட்டு கலைஞர்களின் தரமும் உள்ளநாட்டு நாடக பங்கும் இந்திய பாணியில் அமைந்துவிடுகின்றன. இலங்கைக்கென தனியான சினிமா உண்டு அதனை உள்ளபடியே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும். அதற்காக இந்திய சினிமாவை வெறுக்க வேண்டும் என்று கூறவில்லை.
இலங்கைக்கென உள்ள மரபை மாற்றியமைக்காமல் அதற்கு முதலிடம் கொடுத்து நாடகம் மற்றும் திரைத்துறையை வளர்ப்போம். அதன் பின் வேறுநாட்டு சினிமாவுக்கு இடம்கொடுப்போம். அதேநேரம் உலக தர திரைப்படங்களை வழங்கி இருக்கிறோம்.நான் உட்பட பலர் இந்திய சினாமாவுக்கு அடிமைதான்.
இலங்கையில் சிங்கள மொழி திரைப்படங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுவதற்கு எத்தகைய திட்டங்கள் உங்களிடம் இருக்கின்றன?
இலங்கையைப்பொறுத்தமட்டில் சிறந்த சினிமாவுக்கான இடமும் அதனை எங்கிருந்தாலும் ரசிக்கவுமென ரசிகர்கள் இருக்கின்றார்கள். ஆனால் பிர யோகரீதியாக பார்க்கும்போது மொழி ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதனை நிவர்த்திசெய்ய பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் கல்வியே சிறந்தது என நான் கருதுகிறேன். நான் அவ்வாறுதான் தமிழ்மொழியை கற்றேன். தமிழ் மொழி மிகவும் அழகான மொழி இம்மொழியை அனைத்து பிள்ளைகளும் தமது சிறு வயதிலேயே கற்றுக்கொள்வது இலகுவானது.
இந்திய சினிமாவை விரும்புவர்கள் அதிலுள்ள மொழியை மட்டும் புறக்கணி்ப்பதிலுள்ள நியாயம் என்ன? இந்திய கலையை பிரதி செய்து இலங்கையில் திரைப்படங்கள் உருவாகும்போது அது முற்றிலும் மாறுபட்ட அவலட்சண கலையை உருவாக்குகின்றன.
இலங்கையின் கலாசாரம் மற்றும் வரலாற்றை அடிப்படையாக கொண்டுதான் சின்னத்திரை நாடகங்கள் உருவாகின்றன. இலங்கையில் நடிப்பு துறை சார்ந்து எந்தவொரு கற்கைநெறிகள் இல்லை. பயிற்சிகள் இல்லை. எனவே இங்கு நாடகம் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உருவாக்கலாம். இந்தியா போன்ற நாடுகளில் தொலைக்காட்சி நாடகங்கள் லட்சக்கணக்கில் உருவாகினாலும் அதனால் திரைப்பட உருவாக்கத்துக்கு எந்தவொரு தடையும் இல்லாமல் இருக்கின்றது. நாடகமும் திரைப்படமும் அவர்களது வாழ்வின் அங்கமாக பார்க்கின்றனர். ஆனால் இலங்கையில் அவவாறு இல்லை. தொலைக்காட்சி நாடகங்கள் கட்டாயம் பார்க்கப்படவேண்டிய ஒன்றாக திணிக்கப்படுகின்றது. இதனால் திரைப்படங்களை பார்க்கவும் மக்கள் விரும்புவதில்லை.
இலங்கையில் தமிழ்த்திரைப்படங்கள் உருவாக்கம் பற்றி உங்களது கருத்து என்ன?
தமிழ் திரைப்படங்கள் இலங்கையில் உருவாகுவது குறைவாக இருக்கின்றன. நான் வாழும் நீர்கொழும்பில் யுத்தகாலத்திலும் இன்றும் தமிழ் சிங்கள மக்களுக்கிடையில் பிரிவினகள் ஏற்பட்டதில்லை. நாங்கள் பரஸ்பரம் நட்பை பாராட்டி வருகின்றோம். ஆனாலும் தமிழ்மக்களின் வழி நிறைந்த வாழ்வியலை சித்தரிக்கும் திரைப்படங்கள் வெளிவருவதில்லை. கடந்த காலங்களில் இப்படி பேசகூட முடியாது. இன்று அஒ்ந நிலைமை மாறியள்ளது. சந்ததர்ப்பங்களை பயன்படுத்தி புதிய சிந்தனைகளை கலையினூடாக வெளிக்கொண்டவர வேண்டும். இலங்கையர் என்ற வகையில் சகோதரத்தவ பாலம் அமைக்க கலைத்துறையை பயன்படுத்துவோம். நான் தமிழ் கலையில் பங்காளனாக நடிக்க அவாவுடன் காத்திருக்கிறேன்.
திரைத்துரையில் இந்தளவுக்கு வளர்ந்து வரும்போது எத்தகைய தடைகள் இருந்தன?
நான் பிரதான பாத்திரமொன்றினூடாக வெளிவர வேண்டும என்றே நினைத்தேன். ஆனால் எனக்கு சந்தர்ப்பங்கள் அவ்வாற அமையவில்லை. கடும் முயற்சி செய்து இந்தியாவில் சென்று சில தொழினுட்பங்கள கற்றுக்கொண்டு இலங கைக்கு வந்தேன். ஆனாலும் இலங்கையில் நாடகங்களை மேடையேற்ற எந்தவொரு களமும் இருக்கவில்லை.
என்றாரும் மனம் தளராமல் முயற்சியை கைவிடாமல் மேடை நாடகங்களை தயாரித்தேன். திரைப்படத்துறைக்கு வரும் திரப்பட தயாரிப்பாளர்கள் இருந்தும் அவர்களுக்கான களப்பி்ன்னனி முறையாக உருவாக்கப்படவில்லை. ஆகக்குறைந்தது நிதி ஏற்பாடுகளும் இல்லாமல் இருந்தனர் இதனால் நாம் பாரிய சவால்களை சந்திக்கவேண்டி இருந்தது. அத்தோடு திரைத்துறையில் வருமானத்தை எதிர்ப்பார்க்க முடியாத நிலையில் வெருமனே உணர்வு பூர்வமாக மட்டுமே செயற்பட வேண்டிய சூழ்நிலை தான் இருந்தது. இன்றே இவை ஓரளவுக்கு மாற்றம் கண்டுள்ளன.
ஏ.ஜெயசூரியன்
No comments:
Post a Comment