இந்திய மீனவர் சங்கத்தின் ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் எமிரேட் |
கடல் வளம் குறையவில்லை மீன் பிடிக்க பிடிக்கத் தான் மீன்வளம் பெருகும். அள்ள ஊறும் குளம் போன்றது தான் கடல் வளம். எல்லைகள் என்பது இரு
நாட்டு கடற்படைகளுக்கே தவிர மீனவர்களுக்கு இல்லை. இந்திய மீன் இலங்கை மீன் என்று பிரிக்க முடியாது. மீனுக்கும் எல்லை இல்லை மீனவனுக்கும் எல்லை இல்லை. இதில் இரு நாட்டு அரசாங்கமும் பிடிவாதத்தை கைவிட்டு மீனவர்களின் நலனுக்காக பேச முன்வரவேண்டும் என்கின்றார் அனைத்து இந்திய மீனவர் சங்கத்தின் ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் எமிரேட்.