Wednesday, January 10, 2018

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Paper No. 5645                                        Dated 11-Feb-2014
Guest column by Dr. Kumar David

Monday, May 29, 2017

''இம்முறை சிறைக்கு தனியே செல்லமாட்டேன்'' தலைமறைவான ஞானசார தேரர்: திகில் பேட்டி


ர்ச்சைக்குரிய பெளத்தமத தேரரான கலபட ஹத்தே ஞானசார தேரர் தலைமறைவாகி எங்கே இருக்கிறார் என இலங்கை பொலிஸ் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்க ஞானசார தேரர் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த அதிர்ச்சி கொடுத்துள்ளார். சிறைக்கு செல்ல தயங்காத தான் இம்முறை தனியே செல்லமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த தேரர் ரகசியமான முறையில் பாதுகாப்பாக இருக்கும் இடத்துக்கு பல வாகனங்கலில் ஏற்றி இறக்கி ஒரு ஊடகவியலாளரை அழைத்து சென்றுள்ளது பொதுபலசேனா அமைப்பு. தண்ணீரில் இறங்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. பொறுப்பில்லாம பெஸோவோமாக இருந்தால் என்றாவது நாம் அமைதியாக இருந்திருப்போம்.ஞான சாரா தேரர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என நினைக்கவேண்டும்.நாங்கள் வகாபிவாதம் பற்றி பேசுகின்றோம் தவிர இந்த நாட்டிலுள்ள மொத்த முஸ்லிம்கள் பற்றி அல்ல. கழுத்தே போனாலும் நாங்கள் போராடுவோம்.அவ்வாறு இறப்பதும் சுகம் தான் என மறைவிடத்திலிருந்து வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். 

Monday, May 15, 2017

யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது?

தாயின் பெயரையும் பிள்ளைக்கு முதலெழுத்தாக வைக்கவேண்டுமென்ற ஒரு ஆணின் போராட்டமும் வெற்றியும்

வதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்று எம்மில் பலர் பெண்கள் பற்றிபெருமையாக பேசிய அடுத்த கணமே அவளா என்று ஓர் வித ஏளனமாக பார்க்கும் சமூகத்தில் நாம் வாழ்கின்றோம். இங்கு ஆவதும் பெண்ணாலே என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதில் ஓர் உண்மையான தத்துவம், பெண்களால் மட்டுமே கருத்தரித்து குழந்தையை பிரசவித்து மனிதனை ஆளாக்க முடியும்  என்றும் கூறப்படுகிறது.

ஆணுடன் கொண்ட உடலுறவினால் பெண்ணொருத்தி தாய்மையடைந்து, பத்து மாதம்பிள்ளையை வயிற்றிலே சுமந்து, பெற்று, பிள்ளையை வளர்த்து ஆளாக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். இதில் ஆணுடைய பங்கை விட பல மடங்கு கடமை, பொறுப்பு பெண்ணுக்கே அதிகமாக உரித்தாகிவிடுகிறது. இலங்கை போன்ற நாடுகளில்இது மரபு ரீதியாக தொடரப்படுகிறது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பெண்ணுக்கு ஆணை விட குறைந்த மதிப்பும் முன்னுரிமையுமே வழங்கப்படுகிறது.

மலையக இன அழிப்புக்கு மோடியின் பதில் என்ன?

லங்கையில் மலையகத் தமிழர்கள் என அறியப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இவ்விருநூறு ஆண்டுகளில் மலையகத்திற்கு வருகைதரும் முதலாவது இந்தியப் பிரதமர் என்ற வகையிலும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மேல் அக்கறையுடையவர் எனும் ரீதியில் உங்களை மலையக மக்கள் சார்பில் வரவேற்கின்றோம்  இந்தப் பின்னணியில் இலங்கையில் வதியும் மலையகத் தமிழர்கள் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) பற்றியும், அவர்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகள் பற்றியும் உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம் என மலையக சமூக ஆய்வு மையம் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயத்தில் கடிதம் வழங்கியது. அக் கடிதத்தின் முழுவிபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

Monday, May 1, 2017

கண்டி கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களுக்கு தண்டனை?


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு ஏற்பட காரணம் ஒன்றிணைத்த எதிர்க்கட்சியை ஆதரித்தது தான் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம் எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேதினக்கூட்டம் கண்டி கெட்டம்பே மைதானத்தில் தான் நடக்கிறது. அதில் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளாவிட்டால் மத்திய செயற்குழு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாரும் விவசாய மைச்சருமான துமிந்த திஸாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து நடத்தும் தேசிய அரசாங்கம் சிறிது காலத்துக்குத்தான். அதனை நிரந்தரமாக நடத்தமுயாது எனவும் தெரிவித்தார்.இக்கருதட்டுக்கள் உள்ளடங்கிய அவரது நேர்காணல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

மேதின தத்துவத்தை மலையகம் உணருமா?

மேதினம் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு தினமாக கருதப்படுகிறது. சில நாடுகளில் தொழிலாளர் தினமாகவும் சிலநாடுகளில் சர்வதேச தொழிலார்கள் தினமாகவும் கொண்டாடப்படுகின்றன.  அதாவது ஒவ்வொரு நாட்டிலும் முதலாளி வர்க்கம் தொழிலாளர் வர்க்கத்தை அடக்கி ஆண்டுகொண்டே இருக்கின்றன. இந்த சந்தர்ப்பங்களில் தொழிலாளர் வர்க்கம் தங்கள் உரிமைகளுக்காக எதிர்த்து குரல்கொடுத்துள்ளனர் எனவும் அறியப்படுகிறது.

சட்ட வரையறைகள் எதுவுமின்றி உலகத்தில் வாழுகின்ற தொழிலாளர்கள் முதலாளி வர்கத்தினரின் நசுக்குதலுக்கு மத்தியில் தங்களினது பணிகளை மேற்கொண்டு வந்தனர். எனவே இந்நி‌லைமைகளை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள் சுயமாக சிந்தித்து ஒரு தொழிலாளிக்கு எட்டு மணித்தியால வேலை, ஓய்வுதியம், சுகயீன,  வேலைகளுக்கான வடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிகையை முன்வைத்தனர். இதனை சட்டத்துடன் இணைத்து  நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் முதலாளி வர்கத்தினரிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.

இராணுவத்திடம் ஒப்படைத்த எனது பிள்ளை எங்கே?


  • பிள்ளைகளை தேடி எட்டு வருட போராட்டம் 
  • வீதியிலிறங்கி போராடியும் கண்டுகொள்ளாத அரசாங்கம்
  • செய்வதறியாமல் தவிக்கும் மக்களை உளவியல் ரீதியாக தாக்குவது தான் திட்டமோ?
  • கிளிநொச்சியில் பத்துதாய்மார்கள் உயிரை மாய்க்கவுள்ளனர்
  • தீக்குளிக்கவும் தயார்

மே மாதம் இலங்கையருக்கு வரலாற்றில் மறக்கமுடியாத நாட்களாக
பதியப்பட்டுவிட்டது. உள்நாட்டு யுத்தத்தில் வெற்றியடைந்துவிட்டோம் என
ஒருபக்கம் சந்தோசமடையும் ஒரு தரப்பு. மறுபக்கம் இழப்புக்களுக்கு மட்டுமே
முகம் கொடுத்து நடைபிணமாய் திரியும் ஒருதரப்பு என இருதரப்புபிரச்சினைகளு
சீர்துக்கிபார்கவைக்கும் மே மாதம் நாளை ஆரம்பிக்கிறது.
 உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு எட்டு வருடமாகியும்
தமிழர்களின்  கண்ணீரால் ஒவ்வரு மேமாதமும் தமிழர்களின் கண்ணீர் வடியும்
மாதமாக மாறிவிடும் ஆனால் இந்த முறை வீதியையும் நனைக்கிறது கண்ணீர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தங்களது உறவுகளை காண்பிக்கம்படி கேட்டு
வீதியை நனைத்துவிட்டுள்ளன.

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...