சர்ச்சைக்குரிய பெளத்தமத தேரரான கலபட ஹத்தே ஞானசார தேரர் தலைமறைவாகி எங்கே இருக்கிறார் என இலங்கை பொலிஸ் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்க ஞானசார தேரர் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த அதிர்ச்சி கொடுத்துள்ளார். சிறைக்கு செல்ல தயங்காத தான் இம்முறை தனியே செல்லமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தேரர் ரகசியமான முறையில் பாதுகாப்பாக இருக்கும் இடத்துக்கு பல வாகனங்கலில் ஏற்றி இறக்கி ஒரு ஊடகவியலாளரை அழைத்து சென்றுள்ளது பொதுபலசேனா அமைப்பு. தண்ணீரில் இறங்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. பொறுப்பில்லாம பெஸோவோமாக இருந்தால் என்றாவது நாம் அமைதியாக இருந்திருப்போம்.ஞான சாரா தேரர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என நினைக்கவேண்டும்.நாங்கள் வகாபிவாதம் பற்றி பேசுகின்றோம் தவிர இந்த நாட்டிலுள்ள மொத்த முஸ்லிம்கள் பற்றி அல்ல. கழுத்தே போனாலும் நாங்கள் போராடுவோம்.அவ்வாறு இறப்பதும் சுகம் தான் என மறைவிடத்திலிருந்து வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அந்த நேர்காணலின் சுவாரசியமான கேள்வி பதில்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
கேள்வி- வணக்கம் தேரரே. உங்களை பார்த்தால் சுகமில்லாமல் இருப்பவர் போல இருக்கிறதே..?
பதில்- கடந்த காலங்களில் கடுமையான வேலை பலு காரணத்தால் இரண்டு நாட்களாக காய்ச்சல். நோய் என்பது எல்லோருக்கும் பொதுவானது தானே.
கேள்வி- சுகமில்லை என்றால் வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுப்பது தானே?
பதில்- மருந்தை இங்கு கொண்டுவர சொன்னேன். இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும்.
கேள்வி- ஆனால் நீங்கள் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவதுபோல இருக்கிறதே..?
பதில்- எனக்கு ஒழிந்து கன்னாமூச்சு விளையாட்டு விளையாடவேண்டுமென்று எந்த காரணமும் இல்லை. எனது கருத்து. அதனை நான் வெளிப்படையாக தெளிவாக வெளிப்படுத்தியுள்ளேன். நாட்டின் மஹா நாயக்கர்கள், நாட்டின் தலைவர்கள், ஊடகங்கள் ஆகிய அனைவரது முன்னிலையிலும் நான் எந்து கருத்தை முன்வைத்துள்ளேன். எனது மனதில் தோன்றும் விடயத்தை நேரடியாக தெரிவித்துள்ளேன். பயம் என்பதை அறியாத உண்மைக்காக முன்னிற்கிறேன். உண்மையான மனிதர்கள் ஒளியைக்கூட பயப்பமாட்டார்கள்.
கேள்வி- கடந்த வாரம் உங்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நேரம் நீங்கள் ஒளிந்துள்ளதாகவே கருதப்படுகிறது? இதனால் சிறைக்கு செல்ல பயப்படுகிண்றீர்கள் போல தோன்றுகிறது..?
பதில்- நான் சிறைக்கு செல்ல பயப்படவில்லை என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். கைது செய்யவோ அல்லது சிறைக்கு செல்லவோ அல்லது எங்களுக்குள் பிளவு படுத்தவோ பயப்படும் ஒரு தேரர் நான் இல்லை. எதற்கும் ஒரு முறை இருக்கிறது. அது எந்த முறையாக இருந்தாலும் அடிப்படைவாதிகளின் தேவைகளுக்கு தலைவணங்கி நாய் கூட்டுக்குள் ஏற்றுவதுபோல கைது செய்ய இடமளிக்கமுடியாது.ன் சிறைக்கூடம் எனக்கு புதிய விடயம் அல்ல. கடந்த முறை நான் சிறையில் வேலைசெய்து அந்த சிறைக்கைதிகளுக்கு போதனை செய்தென். ஆனால் ஒன்று கூற வேண்டு இம்முறை நான் சிறைக்கு சென்றால் நான் தனியே செல்லமாட்டேன். விக்கினேஸ்வரன், அசாத்சாலி, முஜிபுர் ரகுமான், ரிஷாட் பதியுதீன் அல்லது ரவூப் ஹக்கீம் இவர்களில் யாரையாவது அழைத்துக்கொண்டு தான் செல்வேன்.
கேள்வி- கண்டியில் ஏன் சத்தியாகிரகத்தை நடத்தவேண்டும்?
பதில்- இலங்கையில் பெளத்த அடிப்படை கொள்கை இருக்கிறது. கடும்போக்கு அடிப்படை வாதிகள் இதை அழைக்கின்றனர். பண்டைய தொல்பொருட்களை அளிக்கின்றனர். ஆனால் இவை எல்லாவற்றையும் மகாநாயக்க தேரர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் விகாரையை விட்டு வெளியேறி இது பற்றி பேசமாட்டார்கள் கடிதம் மூலமாக ஆட்சியாளர்களுக்கு தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. ஒருதடவை மல்வத்து பீடத்துக்கு அறிவித்தோம் அவர் இந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்.
முஸ்லீம் வகாபிகளின் அதிகாரம் வழமைக்கு மாரகா அதிகரித்துள்ளது. அதனால் அதிகமாக துல்லத்தொடங்கியிருக்கிறார்கள். அத்துடன் அவர்கத்து நடவடிக்கைகளை கடுமையாக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். தொல்பொருட்களை கொள்ளையடித்தல், கனி இடங்களை பலாத்காரமாக கைப்பற்றுதல், முஸ்லிமக்களுக்கெ ன வலயங்களை உருவாக்குதல், துருக்கி, ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளின் கணக்கிடப்படாத பணத்தை நிதி முதலீடுகளாக கொண்டுவந்து அரச ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து, அரசியல் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களது பலத்தை நிரூபிக்க பார்க்கின்றனர்.இந்த அநியாயத்தை அடித்து நிறுத்தவோ தட்டிக்கேட்கவோ யாரும் இல்லை. இதனை உணர்த்தவே கண்டியில் சத்தியாகிரகத்தை நடத்த திட்டமிட்டோம்.
கேள்வி- உங்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளமைக்கு காரணம் என்ன?
பதில்- அதற்கான காரணம் எனக்கும் தெரியாது. பொலிஸ் மாஅதிபர் என்னை சந்திக்கவுள்ளதாக கடந்த 19 ஆம் திகதி பாதுகாப்பு பிரிவிஊடாக எனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.அன்றைய தினமே பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் என்னை சந்திக்கவேண்டுமென தொலைபேசி அழைப்பு வருகிறது. பின்னர் சிவில் உடை தரித்த நபர்கள் விகாரையில் வைத்தது என்னை சந்திக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்கள். நான் நினைக்கிறன் அவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.நான் கலந்துரையாடலில் இருந்ததால் நான் சந்திக்கவில்லை.19 ஆம் திகதி பொலிஸ் வாகனங்கள் சில விகாரைக்கு முன்னாள் நிறுத்தப்பட்டிருந்தன.
கேள்வி- அதாவது 19 திகதி சிறுபான்மையின கட்சி தலைவர்கள் ஜனாதிபதி பிரதமரை சந்தித்து கோரிக்கையை முன்வைத்த தினம் அல்லவா?
பதில்-ரிஷாட் பதியுதீன், அசாத்சாலி, முஜிபுர் ரகுமான் போன்ற சிலர்என்னை கைது செய்யுமாறும் இல்லையென்றால் இந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோமென பொலிஸ்மாதிபரிடம் கோருகியுள் ளனர். அதன்பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து என்னை உடனடியாக கைது செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவிட்டுள்ளனர்.அதன் பின்னர் நாம் தங்களை சூதானப்படுத்திக் கொண்டோம். களுத்துறை சிறைச்சாலையில் துப்பாக்கிசூட்டை நடத்தியவர் பொலிஸ் சீருடையிலதான் வந்திருந்தனர்.
கேள்வி- கடந்த 20 ஆம் திகதி கொஸ்கெல்லையில் என்ன நடந்தது?
பதில்- அன்று நாங்கள் கண்டியில் உபசம்பதா நிகழ்வை முடித்துக்கொண்டு இப்பாகமுவே உபதேச நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் இரவு நாம் கொழும்புக்கு செல்ல குருநாகல் வழியாக சென்றுகொண்டிருந்தோம்.குருநாகல் கொஸ்கெல்லேவின் கொரயாய காட்டுப்பகுதியில் முஸ்லீம் கிராமத்துக்கு மத்தியில் பாதுகாப்பு பிரிவு எங்களது வாகனத்தை இடைமறித்தது. எங்களை கடுமையான தீவிரவாதி, மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை போல நிறுத்தி விசாரித்தார்கள்.எங்களுக்கு பின்னால் பஸ் லொரி கார் போன்ற வாகனங்களும் நின்றன. பொலிஸார் இரண்டு மூன்று பெரும் இருந்தனர். அப்போது என்ன காரணத்துக்காக என்னை கைது செய்யவுள்ளேர்கள் என கேட்டேன். பிடியாணை எதுவும் இல்லை உங்களுடன் சிறுது நேரம் கதைக்கவேண்டுமென கூறினார்கள். உண்மையை கதைக்க போனால் எல்லோருக்கும் குத்தும். நான் பேசியதற்கு முதல் இதைப்போல பேசியவர்களுக்கு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பின்னர் என்மீது சட்டப்படி நடவைடிக்கை எடுக்கவேண்டுமென கூறினேன்.
கேள்வி- உங்களுடைய அமைப்பு மஹிந்த ராஜபக்ச காலத்தில் அவருக்கு சார்பாக இயங்கிய ஒரு அமைப்பு, அன்று உங்களால பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியவில்லையா?
பதில்- கலாசார சீரழிவுகளை ஏற்படுத்துபவர்கள் தொடர்பாக நாம் தொடர்ச்சியாக பேசும் பொது பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் இருந்த ராணிவிக்கிரமசிங்க அந்த கூட்டத்துக்கு ஆதரவாகவே பேசினார். மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் சிறுபான்மையினரை சிறைப்படுத்துவதாக தெரிவித்தார்.நாங்கள் இனவாதி பிரிவினை வாதி என கூறினார்கள்.இன்றும் அதனைத்தான் செய்கிறார்கள். எங்களை கைது செய்தபின்ன றிந்த பிரச்சினைகளை எல்லாம் தீரும் என்றால் நாங்கள் அதற்கும் தயார்.ஆனால் அதற்கு பிறகும் இந்த பிரச்சினைகளை தீர்க்கமுடியாது என இப்போது தெரிகிறது.
கேள்வி- உங்களது அமைப்புக்கு பின்னால் வெளிநாடுகள் சிலவும், புலனாய்வு பிரிவும் இருக்கிறதாக கூறப்படுகிறதே?
பதில்- எங்களது அமைப்புக்கு பின்னல் நீங்கள் கூறும் ஒன்றுமே இல்லை.எங்களுக்கு பின்னல் நாங்கள் மட்டுமே இருக்கிறோம்.நாங்கள் நேர்மையாக செய்கிறோம்.இதனை புரிந்துகொள்ளாமல் தவறான கருத்துக்களை பரப்பப்பவேண்டாம்.அதனால் எங்கள்துமனம் வேதனையடைகிறது.
கேள்வி- இதுவரை உங்களுக்கு எதிராக எத்தனை வழக்கு இருக்கிறது?
பதில்- இதுவரை 11 வழக்குகள் இருக்கிறது.
கேள்வி-இதற்காக எவ்வளவு செலவாகிறது?
பதில்- பிகப்பெரிய செலவு ஏற்படுகிது. இதனை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. உங்களுக்கென சில வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எவ்வித தொகையும் அறவிடாமல் இலவசமாக வாதாடுகின்றனர். இதனால் தான் நாங்கள் வழங்கு நடத்துகிறோம். இல்லையென்றால் கஷ்டம்.
சிறிமந்த ரத்னசேகர
நன்றி-திவயின
தமிழில்-சூரியன்
No comments:
Post a Comment