பாராளுமன்றில்சுயாதீனமாக செயற்படப்போவதாக ஜாதிகஹெல உறுமய கட்சியின் நிறுவுனர்களில் ஒருவரும் ஐக்கியதேசிய கட்சியின் தேசியல் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகைகள் எவ்வாறு அமையும் என்ற எதிர்ப்பார்ப்புடன் பரபரப்பையும் அரசில்க்காலத்தில் உண்டுபண்ணியுள்ளது.அவருடனான செவ்வி ஒன்று இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
Thursday, January 26, 2017
வாழ நிலமில்லாமல் தவிக்கும் மூன்றாம் தலைமுறை
- மொரவெவ எல்லைக்கிராமம்
இந்த காட்டுக்குள் வரும்போதெல்லாம் இந்த இடத்தில் தான் நீ பிறந்தாய் உனக்கு பின் யாரும் இங்கு பிறக்கவில்லை. இது எங்களது சொந்த மண் என்று அம்மா என்னை பார்த்து கூறும் ஒவ்வொரு தடவையும் இந்த மண்ணில் தான் இனி வாழ வேண்டும் என்று என் ரத்தம் கொதிக்கும். ஆனால்எப்படி இங்கு வாழுவது என்று நினைக்கும்போது கொதிக்கும் இரத்தம் ஆறிவிடும். இந்த வார்த்தைகள் வெளிவரும்போது கண்ணீர் வெள்ளத்தை தடுக்க முடியவில்லை. பிறந்த மண்மீது இனம்புரியாத ஏக்கம் அவனுக்கு.
Wednesday, January 11, 2017
அரச நாடக விழாகளில் தமிழ்ச்சிறுவர்கள் புறக்கணிப்பு
ஜனாதிபதிக்கு கடிதம்
அரசாங்கம் வருடாவருடம் நடத்திவரும் அரச நாடக விழாக்களில் தமிழில் சிறுவர் நாடகங்கள் நடத்தப்படுவதில்லை. 2012 ஆம் ஆண்டு அரச நாடக விழாவில் 68 ஆக இருந்த தமிழ் சிறுவர் நாடங்கங்கள் இன்று 03 நாடகங்கள் என வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் தமிழ் சிறுவர்களுக்கான நாடகத்துறை மிகவும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. இது தொடர்பாக தொடர்ச்சியாக பேசிவரும் அரச தமிழ் சிறுவர்களுக்கான நாடக விழா வெற்றி பெறுவதற்கான அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ஐதேகவினர் ஆட்சியை கவிழ்க்க எதுவுமே செய்யவில்லை
2020 ஆம் ஆண்டு வரை இந்த அரசாங்கம் கவிழ்ந்துவிட போவதில்லை. அதற்கும் இடமளிக்க முடியாது, உயிர் தியாகம் செய்து இந்த அரசாங்கத்தை உருவாக்கினோம்.இந்த சதித்திட்டங்களுக்கு கவிழ்ந்துவிடும் அளவுக்கு இருக்க மாட்டோம் என்று தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஐதேகவினர் ஆட்சியை கவிழ்க்க எதுவுமே செய்யவில்லை. ஆதியை உருவாக்கிய பின்னர் கோர்ட் டை கட்டிகளை கட்டிக்கொண்டு அமைச்சுக்களை வாங்கினார்கள். அதனால் அவர்களுக்கு உருவாக்கப்பட்ட ஆட்சி பற்றிய எந்தவிதமான உணர்வும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலும் அப்படியானவர்கள் இருக்கின்றார் கள்.அவர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இருந்துவிட்டு வந்து சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் அந்த உணர்வு இல்லை. இனி அன்று எங்களுக்கு எதிராக இருந்தவர்களுடடனேயே இன்று வேளை செய்யவேண்டி இருக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல ஒரு சிறந்த அரசியல் தலைவர் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
Monday, January 9, 2017
தாமதமாகும் தேர்தல் ஜனநாயகத்தை பாதிக்கும்
தேர்தல் திணைக்களம்
சுயாதீனமான ஆணைக்குழு என்றாலும் எமக்கு தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் இல்லை. அதேநேரம் தேர்தலை தாமதப்படுத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தேர்தலை வெகுவிரைவில் நடத்தி மக்களின் சர்வஜன வாக்குரிமை பலத்தை அரசாங்கம் பாதுகாக்கும் என நம்புகிறோம் எனவும் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)
Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats
Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645 Dated 11-Feb-2014 Gue...
-
மே தினம் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு தினமாக கருதப்படுகிறது. சில நாடுகளில் தொழிலாளர் தினமாகவும் சிலநாடுகளில் சர...
-
இ லங்கையில் மலையகத் தமிழர்கள் என அறியப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் பூர்த்தியாகின...
-
பத்துமாதமாய் பாடுபடும் மீரியபெத்த மக்கள் . ஏ.ஜெயசூரியன் இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மண்சரிவாக கடந்தவருடம் இறுதியில் பதுளை கொஸ்லாந்...