Sunday, October 23, 2016

தகவல் உரிமைச்சட்டத்தின் மூலம் மக்கள் தகவலை எவ்வாறு பெறலாம்?


ப றவைகள், கால் நடைகள் சுதந்திரமாக திரிகின்றன…. என மனிதர்கள் தங்களுக்குள்ளேயே கிலாசித்துக் கொள்வதுண்டு. ஏன்? மனிதனுக்கு சுதந்திரம் என்பது வரைகறைக்குள் உட்படுத்தப்பட்டதா? எனவும் கேள்வி எழுகின்றன. இருந்த போதிலும் பேசுல், கதைத்ல், கேட்டல், போன்றன மனிதனின் அடிப்படைச் சுதந்திரமாக இருந்தாலும் தகவல்களைப் பெறுதல், அல்லது வழங்குதலும் தற்போதைய காலகட்டத்தில் இன்றியமையாததாகி விட்டதொன்றாகும். ஆனாலும் இலங்கையைப் பொறுத்தவரையில் தகவல்களை விரும்பியவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் அதனை உத்தியோக யூர்வதாக சட்டரீதியான முறையில் பெறுவதென்பது கடினமாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவ்வருடம் இலங்கை நாடாளுமன்றிலே தகவலறியும் உரிமைச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பிலே இக்கட்டுரை அமைகின்றது.



2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி அமைச்சரவையில் இச்சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டு, 2015 டிசம்பர் 18 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, 2016 மார்ச் 24 ஆம் திகதி நாடாளுமன்றில் இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

இலங்கை நாட்டிலே மாறி மாறி வந்த அரசாங்ககங்கள், பல புதிய, புதிய சட்டங்களை நாடாளுமன்றிலே நிறைவேற்றியுள்ளன. ஆனால் ஒளடதங்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டம் போன்ற சில சட்டங்களை முறையாக நடைமுறைக்கு விடப்பட்டுள்ளனவா என்றால் அது கேள்விக் குறியாகவே உள்ளது.

இந்நிலையில்தான் மிகநீண்டகாலமாக மிகநீண்ட காலப் போராட்டத்தின் மத்திக்கத்தில் நாhளுமன்றிலே தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏனைய பல சட்ட மூலங்கள் இந்த நாடாளுமன்றிலே நிறைவேற்றப் பட்டிருந்தாலும் அவை நடைமுறைக்கு வாராமலிருப்பது போன்று இவ்வருடம் நிறைவேற்றப் பட்டுள்ள இந்த தகவலறியும் சட்டமூலமும் கிடப்பில் போடப்படு விடுமோ என அடிமட்ட மக்கள் மத்தியில் மாத்திரமின்றி கல்விமான்கள், அறிஞர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், ஏன் அரசியல்வாதிகள் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளதாகக் கருதுகின்றனர்.

இந்நிலையில் யுத்த மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் சர்தேச அமைப்பு, சிவில் அமைப்புக்களுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தைச் சேந்தவர்களுக்கு இச்சட்டம் பற்றிய விவாதம் ஒன்றை கடந்த செவ்வாய்க் கிழமை (18) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹொட்டலில் நடாத்தியிருந்தது. இதன்போது கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் என சுமார் 160 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததோடு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், ஊடக தொழிற்சங்க சம்மேளநத்தின் பொதுச் செயலாளர் லங்காபேலி, யுத்த மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் சர்தேச அமைப்பின் திட்ட முகாமையாளர் முகமட்.அஷாட், சட்டத்தரணிகளான, ஜெயகத் லியனாராச்சி , ஐங்கரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


  • தகவல் அறியும் உரிமை சித்தாந்தங்கள் மற்றும் அடிப்படை அம்சங்கள்


அடிப்படை உரிமைகளில் ஒன்றான தகவல் அறியும் உரிமை
19 ஆம் சீர்திருத்தத்தில் சீர்திருத்தத்திற்குற்பட்ட அரசியலமைப்பில் 14 ஆம் அத்தியாயத்திற்கு இணங்க 11 வகையான தகவல்களை பெற்றுக்கொள்ளும்  உரிமை பிரஜைகளுக்கு உண்டு

சட்டத்தின் நோக்கம்
தகவல்களினை பெற்றுக்கொள்வதற்கான உரிமையை நடைமுறைப்படுத்தல். பொது அதிகார சபைகளின் வெளிப்படைத் தன்மையினையும் பொறுப்புக்கள் தொடர்பான கலாச்சாரம் ஒன்றினையும்  உருவாக்குதல்
நல்லாட்சியில் கூடிய அளவில் பங்குக்கொள்ள கூடிய மற்றும் நாட்டு மக்களை செயல்ரீதியாக பங்குப்பற்றச் செய்வதற்காக  சமூகத்தினை ஊக்குவித்தல்.

தகவல் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள்.
தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான உரிமை, பெற்றுக்கொடுப்பதை நிராகரிப்பதற்கான உரிமை, தகவல்களை சுய விருப்பத்துடன் வெளியிடுவதற்கான பொறுப்பு, தகவல் உரிமை தொடர்பான ஆணைக்குழச் சபையினை ஸ்தாபித்தல், சட்டத்தின் கீழ் 39 ஆம் சரத்து,அர்த்தமளித்தல்

தகவல் என்பது
கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் பௌதீக தன்மை அல்லது அவற்றின் தன்மையினை கருத்திற்கொள்ளாது. குறிப்பு, ஆவணம், செய்தி சேவை, மின்னஞ்சல், கருத்துக்கள், ஆலோசனை, ஊடக அறிக்கை, சுற்றரிக்கை, லொக் புத்தகம், உடன்படிக்கைகள், அறிக்கை, செய்தி பத்திரம், மாதிரிகள், பரிமாற்றம் செய்யப்படும் கடிதங்கள் , புத்தகங்கள், வரைப்படங்கள், சித்திரம், படக்குறிப்புகள், உடன்படிக்கைகள், அறிக்கை செய்தி பத்திரம், வீடியோக்கள், ரெக்கோடிங், இயந்திரங்கள் மூலம் வாசிக்க கூடிய ஆவணங்கள் சட்ட மூலத்தின்  43 வது அத்தியாயம்

தகவல் சட்டத்தின் கீழ் வருகின்ற நிறுவனங்கள் 
(பொது அதிகாரிகள்) அமைச்சுக்கள், எழுதப்பட்ட சட்டத்தின் மூலமோ அல்லது மாகாண சபை பிரகடணத்தின் மூலமோ ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்ற நிறுவனங்கள், திணைக்களங்கள், அரச தாபணங்கள், பங்குகளில் 25 வீத்திற்கு  மேல் அரசாங்கத்திற்கு சொந்தமாக இருக்கும் நிறுவனங்கள், ஊள்ளுராட்சி நிறுவனங்கள், அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்று /இணை வியாபாரம் ஒன்று உடன்படிக்கை அல்லது அனுமதிப்பத்திரம் ஒன்றின் கீழ் யாப்பு மயப்படுத்தப்பட்ட அல்லது பொது விடயங்களினை மேற்கொள்கின்ற தனியார் நிறுவனம் (செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் மட்டும் ), மாகாண சபையின் ஊடாக ஸ்தாபிக்கப்படுகின்ற நிறுவனங்கள், அரசாங்கம் அல்லது வெளிநாட்டு நிறுவனம் அல்லது குறிப்பிடத்தக்க நிதியினை, வழங்குகின்ற அரச சார்ப்பற்ற நிறுவனம், அரசாங்கத்தினால் அல்லது மாகாண சபையினால் நிதி வழங்கப்படுகின்ற உயர் கல்வி நிறுவனங்கள், அரசாங்கம் அல்லது மாகாண சபையின் மூலம் நன்கொடை வழங்குகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள், நீதியினை நிலைநாட்டுவதற்கான ஸ்தாபிக்கப்டுகின்ற நீதிமன்றங்கள் மற்றும் நிறுவனங்கள்.

நிராகரிக்க கூடிய தகவல்கள்
பொதுவாக முக்கியத்துவமற்ற தேவையற்ற விதத்தில் எந்த ஒரு தனி  நபருக்கும் தாக்கத்தினை ஏற்படுத்த கூடிய தகவல்கள், அரச பாதுகாப்புக்கோ நாட்டின் இறைமைக்கோ தாக்கம் செலுத்த கூடிய தகவல்கள் , சர்வதேச உடன்படிக்கை அல்லது கடமை காரணத்தினால் வெளியிட முடியாத தகவல்கள், வெளியிடுதலினால் அரசாங்கத்தின் தொடர்ச்சியான பொருளாதார கொள்கைகளுக்கு தடையாக அமைகின்ற தகவல்கள், அறிவு சார் சொத்துக்களாக கருதப்படும் வணிக ரகசியங்கள் தனி நபர் வைத்திய அறிக்கைகள், சட்டமா அதிபரின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள், பொறுப்பாளர், பொறுப்பாளர் தொடர்பினை கொண்ட ரகசியமாக காக்க வேண்டிய தகவல்கள், வெளியிடுவதன் மூலம் குற்றங்களை தடுப்பதற்கு தடையாக அமையும் தகவல்கள் , நீதி மன்றத்திற்கு அல்லது  பாராளுமன்றத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் தகவல்கள் , பரீட்சைகளுடன் தொடர்புடைய இரகசியமாக பாதுகாக்க வேண்டிய தகவல்கள்

தகவல்களை வழங்குவதை நிராகரிப்பதற்கு இருக்கும் எல்லைகள்
1 வது ஆவது உப சரத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் ஒரு குறிப்பிட்;ட தகவலினை பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு இருக்கின்ற தேவை அத்தகவலினை வெளியிவதனால் ஏற்படுகின்ற தீங்கினை விட அதிகம் எனின் அந்த கோரிக்கையினை நிராகரிக்க முடியாது,5 ( 4 ) அத்தியாயம்

சுயமாக முன்வந்து தகவல்களை  வெளியிடுவதற்கான பொறுப்பு
தேசிய திட்டமாக இருப்பின் 5 லட்சம் ரூபா, வெளிநாட்டு ரீதியாக இருப்பின் ஒரு லட்சம் பெறுமதியான செயற்திட்டங்கள் தொடர்பாக 3 மாத காலத்திற்குள் வெளியிட வேண்டும்

தகவல்களை வெளியிடுதலை ஊக்குவித்தல்
இந்த சட்டத்தின் ஏதாவது ஒன்றின் மூலம் சட்டத்திற்கு இணங்க செயற்படுவதில் குறிப்பிட்டுள்ள கட்டளைகளுக்கு இணங்க தகவல்களை வைத்திருக்கும் ஒருவர் தகவல்களை வைத்திருக்கும் ஒருவர் தகவல்களை வெளியிடுவதில் அல்லது தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி கொடுத்தலானது எந்த நபரையும், (36 ஆவது உறுப்புரை )

குழப்பம் ஏற்படுத்துபவர்களிடமிருந்து பாதுகாத்தல்
இச்சட்டத்திற்கு இணங்க அதிகாரி ஒருவர் தகவலினை வெளியிடும் அந்த அதிகாரிக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைகளும் எடுக்க முடியாது. 40 ஆவது உறுப்புரை

அமைச்சர்கள் மற்றும் பொது அதிகாரிகளின் பொறுப்புக்கள்
தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பு , அறிக்கைகளை வெளியிடுவதற்கான பொறுப்பு , செயற்திட்டங்கள் தொடர்பான  தகவல்களினை வெளிப்படுத்தும் பொறுப்பு , தகவல் ஆணைக்குழுவிற்கு அறிக்கையிடும் பொறுப்பு , தகவல்களை வழங்குவதற்காக அறவிடப்படும் பணத்தின் அளவை காட்சிப்படுத்தல் வேண்டும், தகவல்களை வழங்குவதற்கு தயார் நிலையில் இருத்தல் , தீர்மானங்கள் தொடர்பான காரணங்களை வெளியிடுவதற்கான தடை சட்டத்திற்கு இணங்க தவறாக கருதப்படும் விடயங்கள் 39 வது உறுப்புரிமை தகவல்களை வழங்குவதற்கு தடையாக இருத்தல் , திட்டமிட்டு முறையற்ற அல்லது பிழையான தகவல்களை வழங்குதல் , திட்டமிட்டு தகவல்களை அழித்தல் அல்லது மறைத்தல் , ஆணைக்குழுச் சபையின் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காமை அல்லது ஆணைக்குழுவிற்கு தவறான தகவல்களை வழங்குதல் , ஆணைக்குழுச் சபையினுடைய தீர்மானத்திற்கு கீழ்படியாமை அல்லது கருத்திற் கொள்ளாமை , ஆணைக்குழுச் சபையின் அலுவல்களுக்கு தடையாக இருத்தல் , வரையறுக்கப்பட்டிருக்கின்ற தகவல்களை ஆணைக்குழுச்சபையின் உறுப்பினர்களால் வெளியிடுதல்  என சட்டத்தரணி ஜெயகத் லியனாராச்சி விளக்கமளித்தார்.

இந்நிலையில தகவல் அறியும் சட்டம் தொடர்பில் கடந்த செவ்வாய்க் கிழமை (ஒக்டொபர் 18 2016) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹொட்டலில் நடைபெற்ற விவாத்தில் கலந்து கொண்டவர்கள் வினா எழுப்புகையில்…

பொதுவான தகவல்களை பொது அமைப்புக்களோ அல்லது நிறுவனங்களோ அல்லது தனி நபர்களோ குறித்த தகவல் வழங்குனர்களிடமிருந்து எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக வைத்தியசாலையில் வைத்தியர் நோயாளிக்கு மருந்துச் சிட்டையில் எழுதும் போது நோயாளிக்கு புரியாத மொழியில் எழுதிக் கொடுக்கின்றார். ஆனால் என்ன நோய், என மருந்துகள் என போதிய விளக்கங்களை நோயாளிக்கு தெரியப்படுத்துவதில்லை இவ்வாறான விடையங்களை இந்த தகவல் அறியும் சட்டத்தின் மூலம் எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்?.

இந்த சட்டத்தின் அடிப்படையில் சில தகவல்களைப் பெறமுடியாது எனினும் அது மக்களுக்குப் பிரயோசனமானது என கருதினால் அதனைப் பெற்றுக் கொள்ளலாம் ஆனால் குறித்த விடையம் மக்களுக்கு பிரயோசனமானது என தீர் மானிப்பது யார்?  முன்பிருந்த அதிகாரிகளைக் குற்றம் சுமத்திவிட்டு இருக்கின்றவர்கள் தப்பித்துக் கொள்வதனை இச்சட்டத்தின மூலம் எவ்வாறு தணித்துக் கொள்ளலாம்?

தற்போது இலங்கை இராணுவத்தினர் உணவுக்கடைகள், ஹொட்டேல்கள் போன்றவற்றை நடாத்துகின்றார்கள். ஆனால் எமது மக்கள் உணவு பார்சல் ஒன்றை 100 ரூபாவுக்கு விற்பனை செய்தால் இராணுவத்தினரின் கடைகளில் 70 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றார்கள். இது எமது மக்கள் மத்தியில் பலத்த கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளன இது பற்றி இச்சட்டத்தின் மூலம் எவ்வாறு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்? இதனால் எமது வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பாதிக்கப் படுகின்றார்கள்?

அரச சேவை ஒன்றைப் பெற்றுக் கொள்ள காரியாலயங்களுக்குச் சென்றால் அவர்கள் கூறும் பதில் தலைமைச் செயலகத்திடமிருந்து முடிவு வரவில்லை எனக் கூறினால் அது மக்களுக்குத் தீர்வாக அமையுமா? அனைத்து அரச காரியாலயங்களும் நகர்ப்புறங்களை அண்டியுள்ளமையால், கிராமப்புற மக்கள் இச்சட்டத்தின் மூலம் எவ்வாறு நன்மையடைவார்கள்?
இலங்கையில் எத்தனையோ பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப் பட்டவர்கள் உள்ளார்கள் இவர்கள் எங்குள்ளார்கள் என்ற தகவல்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்குமா? இவ்வாறான தகவல்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பு, அல்லது அரசியல் என்ற ரீதியில் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போய் விடுமோ?

புலனாய்வு அறிக்கைகள் மூலம் செய்திகளை வெளியிடும்போது அச்செய்து தவறானது என சம்மந்தப்பட்டவர்கள் மறுப்புத் தெரிவிக்கலாமா, மேலும் ஊடக நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அக்குறித்த செய்தியை வழங்கியவரின் விபரங்களை இச்சட்டத்தின் மூலம் பெறுவதற்கு வாய்ப்புள்ளதா? என அதில் கலந்து கொண்ட பலர் பலவாறு வினா எழுப்பினர்.

அடிப்படைத் தகவல்களை தகவல் வழங்கும் அதிகாரிகள் வழங்க மறுக்கப்படுகின்ற பட்சத்தில் அல்லது அவர் வழங்கும் தகவலில் திருப்தி ஏற்பாடாவிடின், அத்திணைக்கள மேலதிகாரிக்கு மேன்முறையீடு செய்யலாம் அதிலும் திருப்பி இல்லாவிடின் , ஆணைக்குழுவிற்கு மேன்முறைப்பாடு செய்யலாம், அதிலும் திருப்பிப்படா விட்டால் மேன்முறையீட்டு நீதி மற்றிற்குச் செல்லலாம், அதிலும் திருப்தியான பதில் கிடைக்க வில்லையாயின் உச்சநீதிமன்றிற்குச் செல்லலாம். எனவே உச்ச நீதி மன்றிற்குச் சென்றுதான் தகவல்களைப் பெறவேண்டும் என்றில்லை, நீதிமன்றிற்குச் சென்றால் அரச அதிகாரிகள் செயற்படத் தொடங்கி விடுவார்கள். என சட்டத்தரனி ஜெகத் லியனாராச்சி பதிலளித்தார்.

தகவலறியும் உரிமையானது ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டு ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். உலகிலே உள்ள அபிவிருத்தி அடைந்து, அடைந்து வருகின்ற நாடுகள் அனைத்தும் தகவல் அறியும் உரிமையை அவர்களது நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கின்றது, இலங்கைதான் தென்காசியா நாடுகளிலே ஆகக் கடைசியாக தகவல் அறியும் உரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளது. என ஊடக தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் லங்கா பேலி தெரிவிக்கின்றார்.

இவ்வருடம் நாடாளுமன்றிலே நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தகவல அறியும் உரிமைச் சட்டத்தினூடாக சிவில் அமைப்புக்ளும். ஊடகவியலாளர்களும், ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டுள் மக்களுக்கு, சேவை செய்வதற்கான கழமாக அமைகின்றது. என யுத்த மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் சர்வதேச அமைப்பின் திட்ட முகாமையாளர் முகம்அஷாட் தெரிவிக்கின்றார்.

திணைக்களங்களினூடாகவும், அமைச்சுகளின் சுற்று நிருபங்களினூடாகவும், மக்களுக்கு 3 நாட்களுக்குள் தற்காலிக பதிலையும் ஒரு வார காலத்திற்குள் சரியான பதிலையும் வழங்க வேண்டும். என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டமாகும். வெளிப்படைத்தன்மையாக செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என அனைத்து அரச உத்தியோகஸ்த்தர்களுக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளன. தற்போது வந்துள்ள தகவல் அறியும் சட்டத்தின் மூலம் 14 நாட்களுக்குள் எழுத்து மூலமாக தகவல்களை வழங்கலாம் என்னைப் பெறுத்தவரையில் அரச திணைக்களங்களுக்கு இது ஒரு ஆறுதலான விடயமாகும். இச்சட்டம் ஊடகத்துறைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல இந்த நாட்டிலே உள்ள மக்களுக்கு தகவல்களைச் சரியான முறையில் பெற்றுக் கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகும். இதனை ஊடகத்துறையினர் உட்பட அனைவரும் முறையாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவிக்கின்றார்.

எது எவ்வாறு அமைந்தாலும்  இச்சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டாலும் அதனை அமுல் படுத்துவதற்கு 6 மாதங்கள் தேவை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறெனில் எதிர்வரும் 2017 பெப்ரவரி 4 ஆம் திகதி  6 மாதங்கள் முடிவுறுகின்றன. இத்தினத்திலிருந்து இச்சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும்.  ஆனாலும் இச்சட்டத்தைத் தயார் படுத்துவதற்குத்  6 மாதங்கள் தேவை அரசு தெரிவித்துள்ளது.

எனவே 2017 பெப்ரவரி 4 ஆம் திகதியிலிருந்தும் மேலும் 6 தேவையாகவுள்ளது. எனவே எதிர் வரும் 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் திகதிக்குப் பின்னர்தான் இலங்கையிலுள்ள சகல திணைக்களங்களிலும் தகவல்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்குக் கிடைக்கப் பெறும். என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்னறனர்.

ஆனாலும் இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் இலங்கையிலுள்ள திணைக்களங்களில் தகவல்களைப் பெறுவதாயின் ஒவ்வொரு காரியாலயங்களிலும் தலா ஒருவர் வீதம் தகவல் அதிகாரி தேவை புதிதாக சுமார் 6000 இற்கு மேற்பட்ட தகவல் அதிகாரிகள் தேவை இவ்வாறு தகவல் அதிகாரிகளை அரசு புதிதாக நியமனம் செய்யவேண்டுமாயின் மேலும் காலம் இழுத்தடிக்கப்படலாம்.

எனவே தற்போதைய நிலையில் திணைக்களங்கள் தோறும் அமைந்துள்ள உத்தியோகஸ்த்தர்களில் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து அவர்களைப் பயிற்றுவித்து மக்களுக்கு உரிய தகவர்களை வழங்க அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வ.சக்திவேல்

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...