Monday, October 3, 2016

வெற்றி போராட்டமா..!


கூட்டு ஒப்பந்த தோல்வியால் மலையக தோட்ட தொழிலார்கள் வீதிக்கு இரங்கி எதிர்ப்பு போராடத்தொடங்கிவிட்ட்டார்கள்.இந்த தோல்வியால் கிடைத்த வெற்றியால்தான் இன்று மலையக மக்கள் ஒன்றுசேர்ந்துள்ளனர் என்றும் கூறலாம். ஆனால் இதனை வைத்து மலையகம் விழித்தெழுந்துவிட்டதாக கூறமுடியாது. காரணம் மலையக மக்களின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இன்றுவரை பதிலளிக்கவில்லை. எனின் இந்த போராட்டம் வெற்றி பாதைக்கு இட்டுச்செல்லும் ஒரு போராட்டமாக கருதமுடியாது. 

போராட்டங்கள் மலையகத்தின் பல பகுதிகளில் நடந்தாலும் கூட்டு ஒப்பந்தத்தை காய்ச்ச்சாத்திடவைக்கும் வகையில் அழுத்தம் கொடுக்கும் ஒரு ஆர்ப்பாட்ட வழிமுறையாக இருப்பதில்லை. இது இன்று நேற்றல்ல கடந்துவந்த வருடங்களின் பதிவாகவும் இருக்கிறது. இதற்கு மலையக மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை வலியுறுத்தாமையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 

தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும்இ தொழிற்சங்களுக்கும் இடையில் கடந்த 17 மாதங்களாக 9 சுற்று பேச்சுக்கள் நேரடியாகவும் உரிய அமைச்சர்கள் முன்னிலையிலும் நடைபெற்றுள்ளன. இதுவரையில் தீர்வு இல்லை. இறுதியாக கடந்த மாதம் 22 ஆம்திகதி  வியாழக்கிழமை நடைபெற்று முடிந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ள நிலையில் தோட்ட நிர்வாகங்களுக்கும்இ அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆர்பாட்டங்களிலும்இ கவன ஈர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும்இ தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஓப்பந்தம் விரைவாக புதுப்பிக்கப்பட்டு தங்களின் உழைப்புக்கேற்ப நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும்இ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் நிலுவையுடன் அதிகரித்த சம்பள கொடுப்பணவு கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த போராட்டங்களின் போது தொழிலாளர்களினால் வலியுறுத்தப்படுகின்றன. தங்கள் கோரிக்கைகளை தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திடம் கையளிக்கும் வகையில் தொழிலாளர்களினால் ஒப்பமிடப்பட்ட மனுக்களும் தோட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

இலங்கையிலுள்ள 848 பெருந் தோட்டங்களில் சுமார் 2 இலட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டவர்களாகவும்இ சுமார் 50 ஆயிரம் பேர் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களாகவும் வேலை செய்வதாகவும் சுமார் 10 இலட்சம் பேரின் வாழ்வாதாரம் தங்கியிருப்பதாகவும்இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கூறுகின்றார்.
2013ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. அந்த ஒப்பந்தத்தின்படிஇ தற்போது அடிப்படை சம்பளம் 450 ரூபாய் ஆகும். இதனைத்தவிர ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபாயும் குறை நிரப்பு கொடுப்பனவாக 30 ரூபாயும் என நாளொன்றுக்கான கொடுப்பனவாக ரூபாய் 620ம் கிடைக்கின்றது.  

75 சதவீதம் வேலை நாட்கள் சமூகமளித்தால் மட்டுமே ஊக்கவிப்பு கொடுப்பனவு கிடைக்கும். 75 சதவீதத்திற்கும் குறைவான நாட்கள் வந்திருந்தால் அதனை பெற முடியாது.
தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு கோரிக்கை தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் தொடரும் இழுபறி காரணமாக அந்த ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் தடைகளும்இ தாமதங்களும் 17 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நீடிக்கின்றன.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசு ஊழியர்களுக்கு ஆக குறைந்தது ரூபாய் 10 ஆயிரம் சம்பள அதிகரிப்பு கிடைத்தது. அது போன்ற தனியார் துறையினருக்கும் நாடாளுமன்றத்தில் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு ஒரு தொகை சம்பள உயர்வு கிடைத்தது. பெருந் தோட்டத்துறையினருக்கு தான் தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கேற்ப அது இன்னமும் எட்டுவதாக இல்லை.அரசினால் இடைக்கால கொடுப்பனவாக ரூபாய் 2500 அறிவிக்கப்பட்டிருந்தது. அக்கொடுப்பனவு ஜுன்இ ஜுலை மாதங்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு கிடைத்தது. அதன் பின்னர் சில தோட்டங்களுக்கு இன்னும் வழங்கப்படவிவில்லை.

ஏற்கனவே நாளொன்றுக்கு 1000 ரூபாய் சம்பள கோரிக்கையை தொழிற்சங்கங்கள் முன் வைத்திருந்தன. பெருந் தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸநாயக்காவின் தலையீட்டின் பேரில் தொழிற்சங்கங்கள் ரூபாய் 720 என இறங்கி இணக்கம் தெரிவித்திருந்தன.
அடிப்படை சம்பளம் ரூபாய் 550. ஊக்குவிப்பு கொடுப்பனவு ரூபாய் 190 மற்றும் குறை நிரப்பு கொடுப்பணவு ரூபாய் 30 என தெரிவிக்கப்பட்டிருந்த இது தொடர்பான யோசனைளை ஆரம்பத்தில் தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனம் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருந்தன. இறுதி பேச்சுவார்த்தையின் போது சம்மேளனம் அதனையும் நிராகரித்து விட்டது.

1972ம் ஆண்டு தொடக்கம் நடைமுறையிலுள்ள சம்பள முறைமையை மாற்றிமைக்கும் வகையில் தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தினால் மாற்று யோசனையொன்று முன் வைக்கப்பட்ட போது அதனை தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன.
ரூபாய் 550 அடிப்படை சம்பளம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளுடன் ரூபாய் 700 நாள் சம்பளமாக வழங்கப்படும். 11 கிலோவிற்கு மேல் பறிக்கப்படும் கொழுந்துக்கு கிலோவிற்கு ரூபா 25 என மேலதிகமாக வழங்கப்படும். வாரத்தில் 3 நாள் மட்டுமே வேலை நாட்களாகும். ஏனைய நாட்களில் பறிக்கப்படும் கொழுந்தின் நிறைக்கேற்ப கொடுப்பணவு வழங்கப்படும் என்று அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் பறிக்கப்படும் கொழுந்தின் நிறை தோட்டத்திற்கு தோட்டம் வேறுபட்டது. கால நிலையை பொறுத்தும் அதில் மாற்றம் ஏற்படுவதால் அது சாத்தியப்படாது என்பதிலும் 6 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என்பதிலும் தொழிற்சங்கங்கள் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன.

தேயிலை உற்பத்திஇ ஏற்றுமதிஇ உலக சந்தையில் விலை என அனைத்திலும் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக தேயிலை தோட்டங்கள் நஸ்டத்திலே இயங்குவாத தோட்ட நிர்வாகங்கள் தமது பக்க நியாயத்தை முன் வைக்கின்றன. அப்படியானால் அரச தோட்டங்களை மீண்டும் அரசாங்கத்திடம் கையளிக்குமாறு தொழிற்சங்களும் தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகங்களும் வலியுறுத்துகின்றன. அதேநேரம் அரசாங்கம் நிர்வகிக்கும் தோட்டங்களும் இதே நிலையில்தான் இருக்கின்றன சில தோட்டங்கள் மிகவும் பிந்தங்கிய நிலையிலும் வறுமை கோட்டின் கீழும் வாழ்கின்றனர்.

கடந்த வியாழக்கிழமை கொழும்பு தொழில் திணைக்களத்துக்கு அருகில் சிலோன் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கமும் இலங்கை தொழிற்சங்க சம்மேளனமும் இணைந்து நாராஹென்பிட தொழில் திணைக்களத்துக்கு அருகில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  அரசாங்கம் நிரவகிக்கும் தோட்டங்களை சேந்தவர்கள். அரசாங்கம் அடிப்படை சம்பள உயர்வுடன் கூடிய கூட்டு ஒப்பந்;தத்தை கைச்சாத்திட வேண்டும் எனவும் அரசாங்கம் அரச தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமை மீறல்களை தடுக்க விசேட ஆணைக்குழு ஒன்றை அரசாங்கம் உடனடியாக நியமிக்க வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். 

இந்த போராட்டத்தை அடுத்து தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த போராட்டம் நடந்த இடத்துக்கு வந்தனர். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த தயார் எனவும் கூறினர். 

அதன்படி தொழில் ஆணையாளர், உதவி ஆணையாளர்கள், கைத்தொழில் துறை உறவுகள் ஆணையாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்கள் சார்பில் பங்குகொண்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றது. அதன்போது, கூட்டு ஒப்பந்தம் விடயத்தில் தங்களால் தலையிட முடியாது இருப்பினும் பிரச்சினை இருப்பதை தாங்கள் உணர்வதாகவும் ஆணையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான அழுத்தத்தை கொடுப்பதாகவும் தொழில் திணைக்கள ஆணையாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தொழில் திணைக்கள ஆணையாளர் வழங்கிய உத்தரவாதத்தை அடுத்தே தாங்கள் தீர்மானித்திருந்த தொடர் போராட்டத்தை கைவிட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். போராட்டத்தின்போது கைத்தொழில்துறை உறவுகள் ஆணையாளர் ஜயசுந்தர, உதவி ஆணையாளர்கள், தொழில் ஆணையாளரின் ஆலோசனைக்கு அமைய களத்துக்கு வந்து கலந்துரையாடினார்கள். அதன் பிறகு பேச்சு வார்த்தைக்கு வருமாறு போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அன்றைய தினமே அரசுரிமை தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட பெருந்தோட்டத் துறை அமைச்சர், அமைச்சின் செயலாளர்கள்இ திணைக்கள அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்வதாக தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடுஇ போராட்டக்காரர்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட மூன்றாவது கோரிக்கையான தோட்டத் தொழிலாளர்களின் உரிமை மீறல்களைத் தடுக்க விசேட ஆணைக்குழு நிறுவுதல் குறித்து அமைச்சருடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆரம்ப கட்ட கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதாக திணைக்களம் சார்பில் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை காலமும் தாங்கள் அனுப்பிய கடிதங்களுக்கு பதில் கடிதங்கள் வராத நிலையில்இ தொழில் திணைகளம் சார்பில் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை குறித்து போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதன் காரணமாகவே மூன்று நாட்கள் இரவு பகல் பாராது சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நடத்தப்படவிருந்த தொடர் போராட்ட​த்தை இடைநிறுத்த வேண்டி வந்ததாக போராட்டக்காரர்கள் கூறினார்கள்.

இருந்தபோதிலும்இ ஏற்றுக்கொண்டதற்கிணங்க 5 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடாத்தப்படாமல் ஏமாற்றப்படுவோமாக இருந்தால் திட்டமிட்டபடி போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என்றும் கூறினர். கூட்டு ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டே அரசாங்க நிர்வாக தோட்டங்களிலும் தொழிலார்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தபொப்படுவதில்லை. அதாவது சம்பளம் மட்டும் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் வளக்கப்படுகிறது. மூன்று நாட்கள் மட்டுமே இந்த தொழிலார்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. மூன்று நாள் வேலை செய்து எவ்வாறு வாழ்வது என்பதே இவர்களின் கேள்வியாக உள்ளது.

தனியார் நிர்வகிக்கும் திட்டங்களும் சரி அரசாங்கம் நிர்வகிக்கும் தோட்டங்களாக இருந்தாலும் சரி பிரச்சினை ஒரேமாதிர்த்தான் இருக்கிறது. இந்த இரண்டு நிர்வாகங்களுக்கும் இடையில் சிக்கி தவிப்பது தொழிலாளர்கள் மட்டுமே. எனில் தனியார் துறை தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்பதால் மட்டும் என்ன நன்மை கிடைத்துவிடப்பளிக்கிறது?

ஆதித்யா

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...