அடுத்த யூகம் நீருக்கான போராட்ட யுகம் என்று சூழலியலார்கள் கூறிவருகின்றனர். அவர்கள் கூறுவதில் உள்ள உண்மைத்தன்மையை நாம் என்றுமே ஆராய்வதில்லை என்றாலும் இலவசமாக கிடைக்கும் நீரை வீண்விரயப்படுத்தாமல் இருக்கலாம். ஏனென்றால் பல இடங்களில் நீர் பணத்துக்கு கூட பெற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இது வெளிநாட்டில் அல்ல இலங்கையில் தான் இந்த நிலை. இன்று விரயப்படுத்தும் நீரை மிச்சப்படுத்தினால் இன்னுமொருவனுக்கு அந்த நீர் உதவும்.
சுற்றி இயற்கை காடுகள் இருந்தும் அனுராதபுரம் மாவட்டத்தில் கெப்பித்திகொல்லாவ பிரதேச சபைக்குற்பட்ட வாகல்கட கிராமத்துக்கு மட்டும் பலவருடங்களாக நீர் இல்லை. அவர்கள் குடிக்க குளிக்க என தண்ணீரை பெற சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்கின்றனர். கர்ப்பிணி தாய்மார் முதல் சிறுவர் பெரியவர்கள் என மொத்த கிராமமும் இவ்வாறு திரிகின்றது.
இந்த பகுதியில் நீரிழிவு நோய் அபாயம் இருப்பதாக அறிவித்து ஆராய்ச்சிகளை செய்து ஒருவருடமாகிறது. இந்த பகுத்தடிக்கு அதன் பின்னர் யாரும் வந்து நோயின் தாக்கம் குறித்து ஆராயவில்லை.நீரில் கல்சியம் அதிகம் இருக்கிறது என அரசாங்கம் கூறியது. ஆனால் அந்த நீரை பாவிப்பதை தவிர எங்களுக்கு வேறு எந்த மாற்று நடவடிக்கை எதனையும் அரசாங்கம் ஏற்படுத்தி தரவில்லை.நாங்கள் உளவு இயந்திரத்தில்; சென்று தான் தண்ணீரை பெற்று வந்தோம் என இரண்டு பிள்ளைகளின் தாயான சுமித்ரா தொடம்கஸ்தென்ன தெரிவித்தார்.
நீரிழிவு நோய் இந்த கிராமத்தையும் விட்டுவைக்காத நிலையில் சுமித்ரா கூறியதுபோல சுமார் 15 நீரிழிவு நோயாளர்கள் இதுவரை இனம்காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களதுகிணற்று நீரை பருகி வந்தாலே நீரிழிவு நோய் வந்ததாக இந்த மக்க தெரிவிக்கின்றனர். அனுராதபுர மாவட்டத்தின் கெபிதிகொல்லாவ பிரதேச சபையைச் சேர்ந்த பின்தங்கிய நிலையில் காணப்படும் ஒரு கிராமமாக வஹால்கடவல அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் காணப்படும் பெருமளவான மக்கள் விவசாயிகளாக அல்லது தினசரி கூலி பெறும் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு தூய குடிநீரை பெற்றுக் கொள்வது என்பது பெரும் சவாலான விடயமாக அமைந்துள்ளது. கிராமத்தில் சில திறந்த கிணறுகள் காணப்பட்ட போதிலும், அவை தனியார் நிலங்களில் அமைந்துள்ளன. பலர் இந்த கிணறுகளிலிருந்து நீரைப் பெற்ற போதிலும், நீரின் தரம் என்பது உறுதி செய்யப்படவில்லை. வரட்சியாக காலப்பகுதியில் நீர் மட்டம் குறைந்துவிடும். 32 வயது நிரம்பிய கர்ப்பிணி தயாரான நிலங்கா லக்மி கருத்துத் தெரிவிக்கையில், “தூய குடிநீரை பெற்றுக் கொள்வதற்காக நான் சுமார ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து செல்வேன். அவ்வாறு சென்று, பெறும் நீரை குடங்களில் சுமந்து கொண்டு மீண்டும் நடந்து வரவேண்டிய நிலை காணப்படுகிறது. நீரின் தரம் பற்றியும் நான் கவலைப்படுவதுண்டு, ஏனெனில் அது உறுதி செய்யப்படவில்லை. அருகிலுள்ள கிணறு திறந்த நிலையில் காணப்படுவதால், அது தூய்மையற்றது என்பதுடன், குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.” என்றார்.
கெபிதிகொல்லாவ பிரதேச சபையைச் சேர்ந்த பின்தங்கிய கிராமங்களின் மக்களுக்கு தரமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், கெபிதிகொல்லாவ பிரதேச செயலகத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது. இதற்கமைய, EU SDDP செயற்திட்டத் தின் கீழ் வஹால்கடவல கிராமத்தில் குழாய் கிணறொன்றை நிறுவும் செயற்பாடுகளை ஊக்குவித்திருந் தது. ஆனாலும், பொருத்தமான பகுதி ஒன்றை இனங்காண்பதற்கு சிக்கல் நிலை காணப்பட்ட போது, நிலுகா குமாரி, தனது காணியின் ஒரு பகுதியை இதற்காக வழங்கியிருந்தார். இதிலிருந்து 7 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கல் மேற்கொள்ளப்படுகிறது. எழும் இந்த பகுதில் வாழும் 30 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நீரினால் பயனடைகின்றனர். தண்ணீருக்காக அலையும் நேரம் மிச்சம். பிள்ளைகளை கவனிக்கும் பொறுப்புடன் பாதுகாப்பாக வாழ முடியும் என்றும் மக்கள் மகிழ்கின்றனர்.
தனக்கும் தனது கிராமத்து மக்களுக்கும் சுத்தமான நீரை பெற நிலூகா போன்று பலர் தங்களது நிலத்தை தியாகம் செய்ய தயாராக இருக்கின்றனர். இருந்தும் இவர்களின் நிலங்களில் தண்ணீர் இருப்பதற்காக அறிகுறிகள் இல்லை என கவலை படுகின்றனர்.
காணி தொடர்பான உறுதிப்படுத்தல்களைத் தொடர்ந்து, SLRC அனுராதபுரக்கி ளை மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியன இணைந்து நீரின் தரத்தை உறுதி செய்யும் பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தன. 50 அடி ஆழத்தில் தூய நீர் இனங்காணப்பட்டிருந்தது. துளையிடல் மற்றும் கைப்பம்பி நிறுவுதல் ஆகியன பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர், நீர் நுகர்வோர் கழகம் என்பது ஸ்தாபிக்கப்பட்டு, முகாமைத்துவம் மற்றும் குழாய்க்கிணறு ஆகியவற்றின் பராமரிப்பை முன்னெடுப்பது தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. கைப்பபிபியை செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐரோப்பிய யூனியனின் செயல்திட்டத்துக்கு அமைவாக வழங்கப்பட்டபோதும் இந்த கிராமத்து மக்களே இதற்கு தேவையான மோட்டாரை வாங்கியுள்ளனர். கிராமத்தின் மக்கள் ஒன்றிணைந்து சுமார் 85 ஆயிரம் ரூபா செலவில் மோட்டாரை வாங்கியுள்ளனர். தண்ணீர் இந்த கிராமத்து மக்களின் ஒற்றுமைக்கு வழிவகுத்துள்ளது.
நீர்ப்பம்பியை அமைக்க நிலத்தை ஒருவர் வழங்க மற்றுமொருவர் பம்பியை இயக்கம் மின்சாரத்தை வழங்க முன்வந்துள்ளார். மனுஷிகா என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் தான் இவ்வாறு மின்சாரத்தை வழங்கியுள்ளார். 800 மாதம் மிசாரப்பட்டியல் இருந்தது. இந்த மெட்ரோ நீர் பம்பியினால் தற்போது 2500 ரூபா மாதாந்தமாக வருகிறது. இதனால் கானான் கவலையடையவில்லை. காரணம் தண்ணீரின் முக்கியத்துவத்தையி பற்றி நான் கடந்த காலங்களில் அறிந்துள்ளேன். நான் கர்ப்பிணியாக இருக்கும் போது தண்ணீருக்காக அலைந்து திரிந்து பட்ட கஷ்டங்கள் இனி யாரும் படக்கூடாது என கண்ணீர்வடித்தார்.
தங்களது காலைக்கடனை கூட பூர்த்தி செய்யமுடியாத அளவுக்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த மக்கள் குறிப்பாக பெண்கள் குழாயை கைப்பம்பியின் மூலம் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். பிரச்சினைகள் வந்துபோகும் ஆனால் தங்களது பிரச்சினையை தாங்களே தீர்க்கும் அளவுக்கு ஒற்றுமையையும் முகாமைத்துவ அறிவையும் வளர்றத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு இந்த கிராமம் ஒரு உதாரணம்.
No comments:
Post a Comment