கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தொடர்பான விசாரணை இன்றும் தவறான வழியிலேயே நடைபெறுவதாக தெரிவித்த பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா முன்னாள் ராணுவ கட்டளை தளபதி அல்லது ராணுவ உயர் அதிகாரி இந்த கொலையை செய்தார் என்று நினைத்துக்கொண்டிருந்தால் எப்போதும் உண்மையை கண்டுபிடிக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.
லசந்த கொலைவழக்கில் எனது பெயரை முதலில் சம்பந்தப்டுத்தி கூறினர். பின்னர் மேர்வின் சில்வா, கோதாபய என்றும் கூறினர். குற்றச்சாட்டை எனது தலையில் சுமத்த பாரிய முயற்சி மேற்கொண்டனர். அதற்காக இந்த விசாரணையை பொலிஸார் காலம் தாழ்த்திக்கொண்டே இருந்தனர். இந்த விசாரணையில் அப்பாவியான ராணுவ அதிகாரியை பிடித்து இரண்டு வருடங்கள் சித்திரவதை செய்துள்ளனர். சித்திரவதை செய்து அவரது வாயினூடாக எனது பெயரை தொடர்புபடுத்த முயன்றனர் என சிங்கள வார பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எனது பாதுகாப்புக்காக 500 அதிகாரிகள் இருந்தனர்.அவர்களில் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் இருந்தார்களா என்றுகூட எனக்கு தெரியாது.குருவிட்ட முகாமில் மறித்துவைத்து இன்னுமொரு ராணுவ அதிகாரியினூடாக எனது பெயரை தொடர்புபடுத்த நினைத்தனர். தொடர்ந்து புலனாய்வு பிரிவைச்சேர்ந்த 40 பேர் தொடர்புபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படி பார்க்கும்போது இந்த விசாரணை இன்னும் தவறான பாதையில் செல்கிறது.
அப்பாவி மக்களை பிடித்து சிறைப்படுத்தி ஒன்றியும் நடக்கபோவதில்லை. எப்போதும் உண்மையான கொலையாளியையும் கண்டுபிடிக்கமுடியாது.
லசந்தவுடன் ராஜபக்ஷக்களுக்கே பிரச்சினை இருந்தது. லசந்தவை அச்சுறுத்தினர். பெற்றிகா ஜேம்சுக்கு மரண அச்சுறுத்தல் கொடுத்தனர்.
எனக்கும் உண்மையை கண்டுபிடிக்கவேண்டும். முறையான விசாரணை ஒன்று வேண்டும். மக்களுக்கு உண்மை விளக்கப்பட வேண்டும். இராணுவத்தை நோக்கி விரல் நீட்டுவதால் அத்தகைய விசாரணை இராணுவத்தினருக்கும் உகந்ததாகும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment