Sunday, June 14, 2015

மங்குனி அமைச்சர்கள்

பாடசாலை என்ற புனிதமான அந்த இடத்தில்தான் மலையகத்தின் மொத்த அரசியலும் குவிந்து கிடக்கிறது. அதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு எவ்வளவுதான் மக்கள் சந்திப்புக்களை நடத்த நினைத்தாலும் பாவப்பட்ட மக்கள் கூட்டங்களுக்கு வருவது இல்லை. காலையிலிருந்து வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு அரசியல் வாதிகள் அழைத்தவுடன் ஓடிப்போய் பிரசங்கம் கேட்க மலையக மக்கள் தயாரில்லை.
ஆனால் தேர்தல் காலங்களில் தலைகீழாக நடக்கும். இப்படி மக்களை சந்தித்து அரசியல் நடத்த முடியாத மலையக அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்ய கிடைத்த நிரந்தர களம் பாடசாலைகள் தான்.

வாயுள்ளவன் பிழைத்துக்கொள்வான் என்பதுபோல இப்பாடசாலைகளில் உள்ள அதிபர்கள் தமக்கும் தமது பாடசாலைக்கும் ஏதோ தேடிக்கொள்வார்கள். அந்நேரம் ஆளும்  கட்சி எதிர்க்கட்சி என்ற வேறுபாடில்லாமல் அவர்களது அரசியலுக்கு பாடசாலையை பயன்படுத்திக்கொள்ள வழங்கிவிடுவார்கள். இதில் அரசாங்கத்தில் குறிப்பாக பதவியிலுள்ள அரடியல்வாதிகளின் இழுத்த பக்கமெல்லாம் அதிபர் சாயவேண்டும் அப்படி இல்லையோ  அந்த அதிபர் பதவிக்கு ஆப்புத்தான்.

கடந்த வாரம் ஒரு பாடசாலையின் ஆய்வுகூடத்தை ராஜாங்க கல்வியமைச்சர் ஒரு நேரத்தில் திறந்துவைக்க மத்தியமாகாண கல்வியமைச்சர் இன்னொரு
நேரத்தில் திறந்து வைத்தார். ஒரே கூடத்தை இரண்டுபேர் வேறுவேறு நேரத்தில்  திறந்துவைத்துவிட்டு அரசியலை செய்துவிட்டு போக,  அவர்களின் செயலைப் பார்த்த மாணவர்களுக்கு  சிரிப்பு தாங்க முடியவில்லையாம். இப்படி ஒரு அரசியல் தேவைதானா மங்குனி அமைச்சரே! அவ்வப்போது மங்குனி அமைச்சர் என்று ஊர்ஜிதம் செய்கின்றீர்களே!

நச்சுப்பாம்புகள் 

அன்று ஆஸ்பத்திரியில்  ஒரே கூட்டம் வாகனங்களும் வேலைக்கு செல்லும் படங்கோடு பெண்களும் அவர்களது குடும்பமும் அழுதுபுலம்புறாங்க. என்னனு பார்த்தா நஞ்சு கலந்த நீரில் தயாரித்த தேநீரை குடித்த தோட்டத்து பெண்கள் தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடவுள் புண்ணியத்துல அவங்களுக்கு ஒன்னும் ஆகலை உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல.

நஞ்சு கலந்த நீரில் தேநீர் தயாரித்து, வேலைசெய்யுற பெண்களுக்கு வழங்கியது யார்?  தண்ணீரில் நஞ்சு கலந்தது எப்படி ? நஞ்சு கலந்த நீரைத்தான் மலையக மக்கள் குடிக்கிறார்களா? இது சதியா? தோட்ட நிர்வாகம் பொறுப்பில்லையா? இப்படி பல கேள்விகளைக் கேட்டு உண்மையை கண்டுபிடிக்காமல், நஞ்சுக்கலந்த நீரை குடித்துவிட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டுவந்து ஆஸ்பத்திரிக்கு வந்த ஒரு  அரசியல்வாதி ஏம்மா  நஞ்ச குடிச்சிங்கனு கேட்டாராம். (அந்த அம்மா நினைப்பில் நீ இப்படி கேட்பனு தெரிஞ்சிருந்தால்  நெசம்மா நஞ்சையே  குடிச்சிருப்பேன் )
இதுதான் மலையக அரசியல்வாதிகளின் மக்கள் நலன். இவங்கள நம்பி வோட்டுபோட்டு என்ன செய்ய. இந்த மாதியான நச்சுப்பாம்புகள் இருக்கும்மட்டும் தினம்தினம் நஞ்சுதான் குடிக்கணும்.

தில்லாலங்கடி 

இருந்த இடத்திலிருந்தே கட்சிதாவும் வல்லமை அண்ணன் தாவுமுகத்துக்கே  உண்டு. அரசியல் பலமிழந்து செல்லாக்காசாகிவிட்ட முகத்தார் ஆளும் கட்சிக்கு ஆதரவு  தெரிவிப்பதாக ரகசிய சந்திப்பை நடத்திய கையோடு அடுத்த தேர்தலுக்கு தயாராகிவிட்டார்.

இத்தனைக் காலம் இந்த அரசாங்கம் இன்று செய்யுறது எல்லாமே நாங்க செய்ய நினைச்சதுதான் என்றார். மைத்திரி அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருந்த சேவல் பெட்டிப்பாம்பாய் சுருண்டது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் களத்தில் ஊழல்வாதிகளை களை எடுத்துவரும் மைத்திரியரசு இவங்க மேல நடவடிக்கை எடுக்கவில்லை. கேட்டால் மஹிந்த சார்பானவர்களை பழிவாங்குவது மட்டும் எமது நோக்கமல்ல.தக்கதருணத்தில் நடவடிக்கை எடுப்போம் என்றது. இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சேவல் சரணடைந்துவிட்டது. யாருக்குத்தெரியும் யார்கையில யாரோட குடுமி சிக்கி இருக்கோ . ஆனால்  தருணம் பார்த்து கரணமடித்த முகம் ஒரு தில்லாலங்கடிதான் போங்க.

அரசின் சன்மானமா ஆசிரியர் நியமனம்?

மலையகத்துக்கான ஆசிரியர் உதவியாளர் நியமனத்தில் ஏகப்பட்ட குழப்பம் இருக்குற நேரத்தில் இப்போது ஒரு புதிய குழப்பம்.

இதுவரை  ஆசிரியர்நியமனம் வழங்குகிறோம் என்ற பெயரில் மலையகத்தில் பெரிய அரசியலே நடக்கிறது. பதுளை,கண்டி,ஹட்டன்,கொழும்பு போன்ற
நகரங்களில் திட்டமிட்டவகையில் இந்த அரசியல் நடக்கிறது. ஆனால் இதுவரை நிரந்தர நியமன பத்திரம் வழங்கப்படவில்லை.

ராதா,திகா,வடிவேல் நியமனம் தருவார்கள் என்று அவர்களின் வழியில் சுற்றித்திரிந்த மலையக இளைஞர்கள் இன்று தொண்டாவின் பக்கமும் அலைகின்றனர். அண்மையில் தொண்டா தலைமையில் பலருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நடந்துள்ளது.

இப்போதுள்ள குழப்பம் என்ன என்றால் யார் ஆசிரியர் உதவியாளர் பதவிக்கான நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்குவார்கள்? எப்போது அது வழங்கப்படும்? ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கையிலெடுத்துள்ள ஆசிரியர் உதவியாளர் நியமனத்தில் அரசாங்கம் ஒதுங்கியிருப்பதற்கு காரணம் என்ன? இது மலையக அரசியல்வாதிகளுக்காக அரசாங்கம் வழங்கிய சன்மானமா?  

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...