Sunday, August 23, 2015

ஜனாதிபதியால் ஐவர் நியமனம்

ஏ.ஜெயசூரியன்

ஜனாதிபதியின் காணாமல் போனோர் ஆணைக்குழு பரிந்துரைக்கமைய ஐந்து பேரடங்கிய விசாரணைக்குழு ஒன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்  தெரிவித்தார்.


தமிழ் மக்கள், இளைஞர்கள் கடத்தல் தொடர்பான முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ள நிலையில் விசாரணைக் குழுவொன்று அதாவது புலனாய்வு ரீதியான விசாரணைக்குழுவொன்று அமைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கேட்டிருந்தோம். அதன்படி கொழும்பு மேல்நீதிமன்ற
நீதிபதி பிரியந்த குணவர்தன தலைமையில் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது.

மேலும், இக்குழுவானது தமிழர் ஒருவரையும் நீதித்துறைச்சார்ந்த வல்லுநர்களையும் ஒன்றிணைத்து உருவாகியுள்ளது. இக்குழுவினர் ஏற்கனவே கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

அந்த வகையில் இராணுவம் உள்ளிட்ட அரசியல்வாதிகளான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் டக்ளஸ் தேவாநந்தா போன்றோரையும் விசாரிக்கவுள்ளதாக ஓர் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதுவரை மூவாயிரம்  முறைப்பாடுகள் காணாமல்போனோர் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...