இலங்கையின் பொக்கிஷம்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கலந்து கொண்ட இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் சங்கக்கார முதல் இன்னிங்சில் 32 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 18 ஓட்டங்களையும் மட்டுமே பெற்றார்.
இப்போட்டி நிறைவடைந்தவுடன் குமார் சங்கக்காரவுக்காக பிரியாவிடை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு சங்கக்காரவை கௌரவித்த ஜனாதிபதி "அவரது கருத்து என்ன என்பது தெரியவில்லை ... இந்த சந்தர்ப்பத்தில் குமார் சங்கக்காரவுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு நாம் கோருகிறோம் .." எனக் குறிப்பிட்டார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புவதாக கூறியபோது, தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக, குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
எனினும் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே தனது தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியில் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன் தனது மனைவிக்கு அன்பு முத்தமிட்ட நிலையில் அவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
No comments:
Post a Comment