Monday, August 12, 2013

பயங்கரவாதிகள் என்பவர் யார் !?

.ஜெ.சூரியன்
"பயங்கரவாதம் என்ற சொல்லை .நா சாசனத்தில் வரையறை செய்ய இலங்கை அரசு பரிந்துரை செய்யும் ¨ இது இளைஞர் விவசாய மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகபெருமவின் கருத்து.உலகநாடுகள் வியக்கும் அளவுக்கு அமைச்சரின் கருத்து அமைந்துவிட்டது".

பயங்கரவாதம் என்ற சொல்லை ஒக்ஸ்போர்ட் அகராதி இவ்வாறு வரையறை ´அரசியல் லட்சியத்தை அடைய ஒருவன் முரட்டுதனமாக பயமுறுத்தி அதை பின்தொடருதல் பயங்கரவாதி என்று தனி ஒரு மனிதனை மாத்திரம் பழிசாற்றுகின்றதுஎனினும் பயங்கரவாதமாகவும் நாம் கொள்ளலாம்இந்த வகையில் அரசியல் என்ற ஒரு விடயம் வரையறைக்குள் உள்வாங்கப்படுகின்றது.அரசியல் நோக்கத்திற்காக மேட்கொள்ளப்படும் பயமுறுத்தல்கள் பயங்கரவாதம் என்றாகிவிடுகின்றது.
  
மேலும்க்ரியாவின் தற்கால தமிழ் அகராதியும் ஒக்ஸ்போர்ட் அகராதியின் அந்த வரைவிலக்கணத்தையே சொல்லுகின்றது.லிப்கோ அகராதி பயங்கர ஆட்சிமுறைஎன்றும் பயங்கர ஆட்சிமுறையில் ஈடுபடுவோனை அச்சுறுதுபவன்,கடும் புரட்சியாளன் என்றும் கூறுகின்றது.இந்த வரைவிலக்கணம் சற்று மாறுபட்டு ஆட்சிமுறை பற்றி எடுத்துரைகின்றது.
உலக நாடுகளின் மத்தியில் வேலுப்பிள்ளை பிரபாகரன்,ஒசாமா பின்லேடன் ஆகிய இருவரும் பயங்கரவாத நாயகர்களாகவே வலம் வருகின்றார்கள்.இவ்விரு பயங்கரவாதிகளையும் எந்த வரைவிலக்கணத்தின் கீழ் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்துவது?
2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் இரட்டை கோபுர தாக்குதலின் பின் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பயங்கரவாததிட்கு எதிரான போராட்டம் தொடங்கிவிட்டது என தெரிவித்ததன் பின்னரே பயங்கரவாதம் என்ற சொல் உலகநாடுகளுக்கு பரவுகின்றது.இது தொடர்பாக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.
இலங்கையில் 1979 ஆண்டு 48 ஆம் பிரிவு பயங்கரவாத தடைச்சட்டம் பற்றிய சிந்தனையை தோற்றுவித்துள்ளது.அதாவது அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் பயங்கரவாதம் இருந்துள்ளதை அவதானிக்கலாம்.இன்று அந்த சட்டங்கள் எங்கேஎந்தவகையில் பயங்கரவாதிகளாக தமிழ் ஈழ விடுதலை புலிகளையும்,அல்-கொய்தாவையும் பகுத்தது இலங்கையும் அமெரிக்காவும்.
இலங்கையின் பரிந்துரையின் கீழ் .நா சாசனத்தில் பயங்கரவாதம் என்ற சொல் சேர்க்கப்பட்டால்இலங்கையில் நடைபெறும் ஆட்கடத்தல்கள்கொலை,கொள்ளைஅடக்குமுறைகள்வன்முறைகள்,ஒருதலை பட்சமான முடிவுகள் எல்லாம் பயங்கரவாதமாக அமையுமா?
 பயங்கரவாதம் என்ற வரையறையின் கீழ் புரட்சி செய்பவர்கள்அரசியலால் அச்சுறுத்துபவர்கள் பயங்கரவாதிகளா?வினாக்களை எழுப்புகிறது.

                                                                                                                         

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...