ஏ.ஜெ.சூரியன்
நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் தேவை அரசாங்கத்துக்கு உள்ளது.அந்த வகையில் நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான அளவிலேயே இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மேதவல தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழித்து வெற்றியை கொண்டாடும் இந்தவேளையில் இராணுவ பேச்சாளரின் இந்த கருத்து இராணுவ முகாம்கள் தேவையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இராணுவ பேச்சாளரின் கருத்துப்படி இலங்கை அரசில் பாதுகாப்பில்லை என்ற கருத்தும் எம்மிடையே நிலவுகின்றது.வடக்கு,கிழக்கு,தெ ற்கு,மேற்கு என் நான்கு திசைகளிலும் நாட்டின் அரண்கள் போல இராணுவ முகாம்கள் பரந்து உள்ளமை நாம் அறிந்ததே. ஆனாலும் அரசாங்கம் இராணுவத்தினருக்கு முகாம்கள் அமைப்பது என்ற கருத்தில் இருந்து மாறுவதாக இல்லை.ஏற்கனவே படையில் இருந்து தப்பி ஓடியவர்களையும்,இடை நிறுத்தியவர்களையும் படையிலிருந்து விலக்கும் நிகழ்வுகள் ஒருபக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கம் ஆட்சேர்ப்பு நடந்துகொண்டுதான் இருக்கின்றன.எனினும் இன்று முகாம்களில் உள்ள படைவீரர்கள் யுத்தத்தின் பின் என்ன செய்கின்றார்கள்? மரங்கள் வெட்டுதல், மரக்கறி விற்பனை,ஆலய,பாடசாலை புனருத்தாபனம்,வீதிக் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகின்றனர் ஆனாலும் முகாம்கள் தேவை என்கிறது அரசாங்கம்.
ஆயினும் துப்பாக்கி பிடித்த கைகளில் இன்று மண்வெட்டி பிடிக்கின்றார்கள் என்று முன்னால் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியவை இன்றும் மாறவில்லை.இராணுவ வீரர்களுக்காக அமைக்கப்படும் இராணுவ முகாம்களுக்கு பதிலாக அகதிமுகாம்களில் வாழும் மக்களுக்கு வீடுகள் கட்டிகொடுத்து மீள் குடியமர்த்தலாம்.பயங்கரவாதம் முடிந்த பின்னும் நாட்டை பாதுகாக்க என இராணுவ முகாம்கள் தேவையா?

No comments:
Post a Comment