கொழும்பு கிராண்ட்பாஸ், ஸ்வர்ண ஜயந்தி மாவத்தையிலுள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பள்ளிவாசல் முற்றாக சேதமடைந்துள்ளது
தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல் |
சனிக்கிழமை மாலை 6.30 மஹிரிப் தொழுகையின் பின்னர் அங்கு வந்த இனந்தெரியாத குழுவினர் பள்ளிவாசலைத் தாக்கி முற்றாக சேதப்படுத்தியதுடன், அருகில் இருந்த சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்., இத்தாக்குதலினால் மர்கஸின் ஜன்னல்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு மர்கஸை அண்டிய பகுதியிலிருந்த சில வீடுகளும் சேதங்களுக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சில வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்த வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் கிரான்பாஸ் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆமார் வீதி கொட்டாஞ்சேனை களனி பாலம் ஆகிய இடங்களிலும் மேலதிக இராணுவத்தினா் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனார்.
இதேவேளை இந்த தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என பொதுபல சேன,சிங்கள ராவய ஆகிய கடும்போக்குவாத சிங்கள அமைப்புக்கள் மறுத்துள்ளன. ஆனால் தாக்குதல் நடத்திய பௌத்த பிக்குமார் பொதுபல சேனவை சோ்ந்தவா்கள் என்று தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பதற்ற நிலை தொடர்ந்த நிலையில் அப் பகுதியில் இரண்டு நாட்களாக ஊரடங்குச் சட்டம் மாலை 6 மணி முதல் நாளை காலை 7 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment