எனக்கு யுத்த குற்றம் தொடர்பாக நம்பிக்கை இல்லை. யுத்த குற்றம் நடந்திருக்காது என்று உறுதியாக கூற மாட்டேன். அது ஒரு அரசியல்நிலைப்பாடு மட்டுமே என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச யுத்த குற்றம் என்ற கொள்கையில் இருந்திருந்தால் கிராமத்தில் இன்று உள்ளவர்கள்மீது வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு புனருத்தாபனம் செய்திருக்க முடியாது. அவர்களை கைது செய்திருக்க வேண்டும். அப்படியென்றால் யாழ்ப்பாணத்திலுள்ள அரைவாசிப்பேர் சிறைச்சாலைகளில் தான் இன்று இருந்திருப்பார்கள்.இளைஞர்களு ம் சிறையில்தான் இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவரது இந்த செவ்வி இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.